Categories
விளையாட்டு ஹாக்கி

ஒலிம்பிக் ஹாக்கி : இந்திய மகளிர் அணி …. போராடி தோல்வி ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர்  ஹாக்கி போட்டி அரையிறுதியில் இந்திய மகளிர் அணி போராடி தோல்வியடைந்தது . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது  ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஹாக்கி போட்டியில் அரையிறுதியில் இந்தியா – அர்ஜென்டினா அணிகள் மோதின.இதில் தொடக்கத்தில் இந்திய அணி  முதல் கோலை பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து அர்ஜென்டினா அணியும்  முதல் கோல் அடிக்க 2-ம் கால்பகுதி ஆட்ட முடிவில் இரு அணிகளும் 1-1  என்ற கணக்கில் சமனில் இருந்தது. இதைத் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021: ஹாட்ரிக் வெற்றியை பெறுமா சேப்பாக் ….? மதுரை பாந்தர்ஸுடன் இன்று மோதல்….!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று நடைபெறவுள்ள 22-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 17-வது நாளான இன்று  சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை நடந்த போட்டிகளில் சேப்பாக்  அணி 2 வெற்றி ,ஒரு தோல்வி ,ஒரு போட்டியில் முடிவு இல்லை என 5 […]

Categories
விளையாட்டு

இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் …. இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ரவிக்குமார் தாஹியா….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் மல்யுத்த போட்டி அரையிறுதி சுற்றில் இந்தியாவின்  ரவிக்குமார் தாஹியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆடவருக்கான 57 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில்  அரையிறுதி சுற்றில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா, கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சன்யேவை எதிர்கொண்டார்   . இதில் கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி ரவிக்குமார்  தாஹியா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.  இதன் மூலம்  இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது.

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம்….. தீபக் புனியா தோல்வி…..!!!!

32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் இன்று காலை நடைபெற்ற மல்யுத்தப்போட்டியின் 86 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் தீபக் புனியா காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதிக்கு முந்திய சுற்றில் நைஜீரிய வீரர் எகெரெகெமியை 12-1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார். கால் இறுதியில் சீன வீரர் சூஷென் லின் 6-3 என வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். தோல்வியின் விளிம்பில் இருந்தவர் அட்டகாச கம்பேக் கொடுத்து வெற்றி. கடைசி 15 நொடிகளில் 3 புள்ளிகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : முதல் டெஸ்ட் போட்டி …. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு ….!!!

இந்தியா – இங்கிலாந்து  அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது . இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா – இங்கிலாந்து  அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் இன்று தொடங்குகிறது .இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது . பிளேயிங் லெவேன் : இந்திய அணி :  ரோகித் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS இங்கிலாந்து டெஸ்ட் தொடர் …. இன்று முதல் தொடக்கம் ….!!!

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று   தொடங்குகிறது .  இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி  நாட்டிங்ஹாம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்திய அணியில் மயங்க அகர்வாலுக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக கே.எல் ராகுல், ஹனுமா விஹாரி மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் […]

Categories
குத்து சண்டை சற்றுமுன் விளையாட்டு

BREAKING: ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு அடுத்த பதக்கம் – வாவ்…!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா தோல்வி அடைந்தார். குத்துச்சண்டை போட்டியின் வெல்ட்டர் வெய்ட்(69 கிலோ) பிரிவு அரையிறுதி போட்டியில் துருக்கி வீராங்கனை சுர்மெனலி புஸேனாஸ் உடன் மோதிய லவ்லினா 0-5 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தார். தோல்வி அடைந்ததால் லவ்லினாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. தனது முதல் போட்டியிலேயே வெண்கலம் வென்று சாதித்துள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : 5 விக்கெட் வித்தியாசத்தில் …. நெல்லை ராயல் கிங்ஸ் வெற்றி …!!!

திண்டுக்கல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் 21- வது ஆட்டம் நேற்று  நடைபெற்றது . இதில் நெல்லை ராயல் கிங்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ்  அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் குத்துச்சண்டை : இந்தியாவுக்கு 3-வது பதக்கம் ….வெண்கலம் வென்றார் லாவ்லினா….!!!

ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 69 கிலோ எடைப்பிரிவில்  இந்தியாவின் லாவ்லினா வெண்கலப் பதக்கம்  வென்றார் . டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று 69 கிலோ எடைப்பிரிவில்  மகளிருக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை லாவ்லினா, துருக்கி வீராங்கனையான புசேனாஸ் சுர்மெனெலியுடன்  மோதினார் . ஆனால் 5-0  என்ற கணக்கில் லாவ்லினா தோல்வியடைந்தார். இதனால் லாவ்லினா வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதற்கு முன் பளு தூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கமும்,பேட்மிட்டணில் பி .வி.சிந்து […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் மல்யுத்தம் : இந்திய வீரர்கள் அசத்தல் …. அரையிறுதிக்கு முன்னேற்றம்….!!!

ஒலிம்பிக்கில் ஆடவர் மல்யுத்த போட்டியில் காலிறுதி சுற்றில் இந்திய வீரர்  தீபக் புனியா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் . டோக்கியோ  ஒலிம்பிக்கில் இன்று காலை நடைபெற்ற ஆண்கள் மல்யுத்தப் போட்டி நடைபெற்றது. இதில் 86 கிலோ எடை பிரிவுக்கான காலிறுதி சுற்றில் இந்திய வீரர் தீபக் புனியா, சீன வீரர் லின் சூசனை எதிர்கொண்டார் .இதில் 6-3  என்ற கணக்கில் வெற்றி பெற்ற தீபக் புனியா அரையிறுதிக்கு நுழைந்தார். அதேபோல் மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இந்திய […]

Categories
விளையாட்டு

BREAKING: ஒலிம்பிக்கில் இந்திய வீரர் அபாரம்…. போடு ரகிட ரகிட….!!!!

ஜப்பானின் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் 86 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் தீபக் புனியா காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நைஜீரிய வீரர் எகெரெகெமியை 12-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தீபக் புனியா காலிறுதிக்கு தகுதி பெற்றார்.இதையடுத்து சீன வீரருடன் மோதிய தீபக் புனியா 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். அரையிறுதிப் போட்டி இன்று மதியம் 2.45 மணிக்கு நடைபெறுகிறது

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BAN VS AUS : நசும் அகமது அசத்தல் பந்துவீச்சு …. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது வங்காளதேசம் ….!!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில்  வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றுள்ளது . வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில்  விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கை  தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் ஈட்டி எறிதல் : இந்தியாவின் நீரஜ் சோப்ரா அசத்தல் …. இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்….!!!

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் தகுதி சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெற்றி பெற்று  இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் . டோக்கியோ ஒலிம்பிக்கில் தற்போது தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது .இதில் இன்று காலை ஆடவருக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இதில் தனது முதல் வாய்ப்பிலேயே  86.65  மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து அசத்தியுள்ளார். இதனால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இந்நிலையில் வருகின்ற […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் : ஆடவர் குண்டு எறிதலில் …. இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் தோல்வி ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் குண்டு எறிதல் தகுதிச்சுற்றில் இந்தியாவின் தஜிந்தர்பால் சிங் தூர் தோல்வியடைந்தார் . டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவருக்கான குண்டு எறிதல் தகுதிச்சுற்று போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலில் குரூப்  ‘ஏ ‘பிரிவில் இடம் பிடித்தவர்களுக்கு நடந்த தகுதிச்சுற்று போட்டியில் 16 வீரர்கள் பங்கேற்றனர். இரண்டு குரூப்பிலும் சேர்த்து  முதல் 12 இடங்கள் பிடிக்கும் வீரர்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். இதில் ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா 3 வாய்ப்புகள் கொடுக்கப்படும். இதில் இந்திய வீரர் […]

Categories
விளையாட்டு

நாடு திரும்பிய பி.வி.சிந்துவுக்கு …. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு ….!!!

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மின்டண் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற பி.வி.சிந்து  இன்று நாடு திரும்பியுள்ளார் .  டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டண் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி சிந்து வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இந்நிலையில் டோக்கியோவில் இருந்து இன்று நாடு திரும்பிய பி.வி.சிந்துவுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் மூலம் ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி …. நாளை தொடங்குகிறது …!!!

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை  தொடங்குகிறது.  விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இதில் சமீபத்தில் நடந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது . இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் முதல் டெஸ்ட் போட்டி நாளை நாட்டிங்காமில்  டிரென்ட்பிரிட்ஜ் […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக்: மகளிர் மல்யுத்த போட்டியில் …. இந்தியாவின் சோனம் மாலிக் தோல்வி …!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில்  பெண்கள்  மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை  சோனம் மாலிக் தோல்வி அடைந்தார் . 32 வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று பெண்களுக்கான 62 கிலோ பிரிவு  மல்யுத்தப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய வீராங்கனை சோனம் மாலிக் ,மங்கோலியா வீராங்கனை போலர்துயா குரெல்கூ ஆகியோர் மோதினர். ஆனால் புள்ளி கணக்கில்  அடிப்படையில் சோனம் மாலிக் தோல்வி அடைந்தார்.இப்போட்டியில் தோல்வியடைந்தாலும் அவருக்கு போட்டியில் தொடர்ந்து விளையாட மற்றொரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்பது உறுதி… வெளியான தகவல்…!!!

ஐபிஎல் போட்டியில், வீரர்களுக்கு கொரோனா ஏற்பட்டதன் காரணமாக போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்க உள்ளதாக ஐசிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது  மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து வங்கதேசம் இடையேயான தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் : மகளிர் ஈட்டி எறிதலில்…. இந்திய வீராங்கனை அன்னு ராணி தோல்வி ….!!!

ஒலிம்பிக்கில் பெண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை அன்னு ராணி தோல்வியடைந்தார் . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில்  இன்று காலை நடந்த பெண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் 15 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் இந்திய வீரர்களை  அன்னு ராணி பங்கேற்றார். இதில் முதல் வாய்ப்பில் 50.35 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி  எறிந்தார் . 2-வது வாய்ப்பில் 53.19  மீட்டர் தூரம் எறிந்தார் . […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பதக்கம் வென்ற பி.வி சிந்துக்கு…. ரூ.30 லட்சம் பரிசு தொகை அறிவிப்பு… ஆந்திர முதல்வர் அதிரடி…!!!

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிட்டன் பிரிவில் பதக்கம் வென்ற இந்திய நாயகி பிவி சிந்துவுக்கு ரூபாய் 30 லட்சம் பரிசு தொகையை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் இந்தியாவிற்கு பதக்கங்களை பெற்றுத் தருவதற்கு முயற்சி செய்துவருகின்றனர். முதன்முதலாக 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவிற்காக மணிப்பூரை சேர்ந்த மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு சமர்ப்பித்துள்ளார். இதை தொடர்ந்து வெண்கல […]

Categories
விளையாட்டு ஹாக்கி

ஒலிம்பிக் ஹாக்கி : அரையிறுதியில் இந்திய ஆடவர் அணி …. போராடி தோல்வி …!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில்  ஆடவருக்கான ஹாக்கி அரையிறுதியில் இந்திய  அணி போராடி தோல்வியடைந்தது . டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஹாக்கி அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி பெல்ஜியம் அணியுடன் மோதியது. இதில் முதல் கால்பகுதி ஆட்டத்தில் 7-வது  மற்றும் 8- வது நிமிடத்தில் இந்திய அணியில் ஹர்மன்பிரீத் சிங் , மந்தீப் சிங்தலா இருவரும் தலா  ஒரு கோல் அடித்தனர்  .இதனால் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : திருப்பூரை பந்தாடிய மதுரை ….! 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி ….!!!

திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 81 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் – திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி  பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : இந்திய அணிக்கு வந்த நெருக்கடி …! காயத்தால் விலகிய முக்கிய வீரர் ….!!!

இந்தியா -இங்கிலாந்து  அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது . இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அணியின் தொடக்க வீரரான  மயங்க் அகர்வால் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது , பந்து அவருடைய ஹெல்மெட்டில் பலமாக  தாக்கியதால் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால்  இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் வட்டு எறிதல் : இந்திய வீராங்கனை கமல்ப்ரீத் கவுர் …. பதக்க வாய்ப்பை இழந்தார்…!!!

ஒலிம்பிக்கில் மகளிர் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் கமல்ப்ரீத் கவுர் 6-வது இடத்தை பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார் . டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் வட்டு எறிதல் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் 12 வீராங்கனைகள் கலந்து கொண்டனர் .ஒவ்வொரு வீராங்கனைகளுக்கும் தலா 8 வாய்ப்புகள் வழங்கப்படும். இதில் முதல் 3 வாய்ப்புகளில் முதல் 8 இடங்கள் பிடிக்கும் வீராங்கனைகளுக்கு மேலும் மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டது . இதில் இந்தியாவின் கமல்ப்ரீத் கவுர் 63.70  மீட்டர் தூரம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் …. ஷேன் வார்னே-க்கு கொரோனா உறுதி ….!!!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் . ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே-வுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவன் தற்போது லண்டன் ஸ்பிரிட் டி20 அணிக்கு பயிற்சியாளராக உள்ளார். இந்நிலையில் அணியில்  இருந்தவருக்கு  திடீர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது .இதனால் அணியின் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட போது ,ஷேன் வார்னே-வுக்கு  தொற்று […]

Categories
விளையாட்டு ஹாக்கி

‘இந்திய மகளிர் அணி ஜெயிச்சதும்’ …. துள்ளிக்குதித்த கமெண்டேட்டர் …. வைரலான வீடியோ ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்குள் நுழைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது . ஜப்பான் தலைநகர் டோக்கியோ 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற மகளிர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி ,ஆஸ்திரேலியாவுடன் மோதியது. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. This video of @tnrags & @rk_sports speaks volumes on the pride our […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் : வெனிசுலாவின் யுலிமார் ரோஜாஸ் ….. தங்கம் வென்று உலக சாதனை படைத்தார் ….!!!

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர்  லாங்க் ஜம்ப் போட்டியில் வெனிசுலா வீராங்கனை யுலிமார் ரோஜாஸ் தங்கப் பதக்கம் வென்று ,உலக சாதனை படைத்துள்ளார் . டோக்கியோ  ஒலிம்பிக்கில் மகளிருக்கான லாங்க் ஜம்ப் போட்டி  நேற்று நடந்தது .இதில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் 12 வீராங்கனைகள் பங்கேற்றனர். ஒவ்வொரு வீராங்கனைகளுக்கு தலா 6 வாய்ப்புகள் வழங்கப்படும் . இதில் எது அவர்களுடைய சிறப்பான தாண்டுதலாக  உள்ளதோ அதுவே போட்டியின் முடிவுக்கு எடுத்துக்கொள்ளப்படும். இதன்படி வெனிசுலா வீராங்கனை  யுலிமார் ரோஜாஸ் தனது 6-வது […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் வட்டு எறிதல் : இறுதிப்போட்டியில் பதக்கம் வெல்வாரா கமல்பிரீத் கவூர்…? ரசிகர்கள் எதிர்பார்ப்பு ….!!!

ஒலிம்பிக் வட்டு எறிதல் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவூர் பதக்கம் வெல்வாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர் . டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை  கமல்பிரீத் கவூர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். இதற்குமுன் நடைபெற்ற தகுதிச்சுற்றில் 64 மீட்டர் தூரத்திற்கு வட்டு எறிந்ததால் ,அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். இதனால் இன்றைய போட்டியில் 32-வது இடத்தில் இருக்கும் கமல்பிரீத் கவூர் வெற்றி பெற்று இந்தியாவுக்கு 4-வது பதக்கம்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021: திருப்பூர் தமிழன்ஸ்- மதுரை பாந்தர்ஸ் ….! இன்று மோதல் ….!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் இரவு நடைபெற உள்ள ஆட்டத்தில்  திருப்பூர் தமிழன்ஸ் – மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன . 5-வது சீசன்  டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரவு நடைபெற உள்ள 20-வது லீக் ஆட்டத்தில்  திருப்பூர் தமிழன்ஸ் – மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை நடந்த போட்டியில் திருப்பூர் அணி 2 வெற்றி ,2  தோல்வி என 5-புள்ளிகளைப் […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் : 50 மீட்டர் ரைபிள் பிரிவில் …. இந்திய வீரர்கள் தோல்வி ….!!!

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவருக்கான  50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர்கள் இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தனர். டோக்கியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவு தகுதிச் சுற்றுப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள்  ஐஸ்வர்யா பிரதாப் சிங் தோமர், மற்றும் சஞ்சீவ் ராஜ்புட் ஆகியோர் பங்கேற்றனர். இப்போட்டியில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர்களே  இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவார்கள். இதில் இந்திய வீரர்  ஐஸ்வர்யா பிரதாப் சிங் […]

Categories
விளையாட்டு ஹாக்கி

ஒலிம்பிக் ஹாக்கி : இந்திய மகளிர் அணிக்கு ….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு  முன்னேறியுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 32- வது ஒலிம்பிக் போட்டிகள்  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிருக்கான  ஹாக்கி போட்டியில் கால்இறுதி சுற்றில் இந்திய அணி தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணியுடன் மோதியது. இதில் முதல் கால் பகுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை .இதையடுத்து 2-வது கால் பகுதி ஆட்டத்தில் இந்திய அணி […]

Categories
விளையாட்டு

பி.வி சிந்துவின் பாசத்தால் உருகிய… வெள்ளி வென்ற தைவான் வீராங்கனை உருக்கம்…!!!!

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் பேட்மிட்டன் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை பண்ணுவாயாடை சூ இங், பி.வி சிந்து தன்னை ஊக்குவித்து தேற்றினார் எனக் கூறியுள்ளார். மேலும் உனக்கு உடல்நிலை சரியில்லை என்பது தெரியும். ஆனாலும் பிரமாதமாய் ஆடினாய். இந்த நாள் உனக்கான நாள் அல்ல என்று எனக்கு தெரியும் என்று அவர் கூறிய உண்மையான வார்த்தைகள் என்னை அழ வைத்து விட்டது என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் பி.வி.சிந்து 2016 ரியோ ஒலிம்பிக் வெள்ளிப்பதக்கத்துக்குப் […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக்: 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் …. இந்தியாவின் டுட்டி சந்த் தோல்வி ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் 200 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை டுட்டி சந்த் தோல்வியடைந்தார் . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளருக்கான 200 மீட்டர் ஒட்டப் பந்தய போட்டி நடைபெற்றது .இதில் இந்திய வீராங்கனை டுட்டி சந்த் பங்கேற்றார் . இதில் நடைபெற்ற தகுதிச் சுற்றுக்கான  ஹீட் 4 பிரிவில் இந்திய வீராங்கனை டுட்டி சந்த் 7-வது இடத்தை பிடித்து தோல்வியடைந்தார்  .இதனால் அவர் பதக்கம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021: சாய் கிஷோர் அசத்தல் …. 24 ரன்கள் வித்தியாசத்தில்…. சேப்பாக் அபார வெற்றி….!!!

திண்டுக்கல் டிராகன்ஸ்-க்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த  சேப்பாக் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.தொடக்க வீரர்கள் இருவரும் அதிரடியாக […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் ஹாக்கி… வரலாறு படைத்த இந்திய அணி… முதல்முறையாக காலிறுதிக்குத் தகுதி…!!!

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி பிரிவில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர் 1980 ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில், ஹாக்கியில் இந்திய அணி அறிமுகம் செய்யப்பட்டது. அந்தப் போட்டியில் மகளிர் பிரிவில் 6 அணிகள் மட்டுமே பங்கேற்ற நிலையில், நான்காவது இடத்தை இந்திய பெற்றது. அதன் பிறகு நடைபெற்ற ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் இந்திய மகளிர் அணி லீக் சுற்றுடன் வெளியேற்றப்பட்ட நிலையில் ,  40 ஆண்டுகளுக்கு பின்பு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : 6 விக்கெட் வித்தியாசத்தில் ….. சேலம் ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்தியது திருச்சி ….!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் சேலம்  ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று நடைபெற்ற 18-வது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் – சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் […]

Categories
விளையாட்டு ஹாக்கி

ஒலிம்பிக் ஹாக்கி: 41 ஆண்டுகளுக்கு பின்…. இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி…!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. ஆடவர் ஹாக்கி காலிறுதியில் இந்திய அணி, பிரிட்டன் அணியுடன் மோதியது. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பிரிட்டன் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அரையிறுதியில் இந்திய அணி பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது.

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

ஒலிம்பிக் : சாதனை படைத்த பி.வி.சிந்துவுக்கு …. பிரதமர் மோடி வாழ்த்து ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு அரசியல் தலைவர்கள்,பிரபலங்கள் என பலர்  சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றன  . டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிட்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி .சிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக்கில்              தொடர்ந்து 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை  பெற்றுள்ளார். We are all elated by the […]

Categories
சற்றுமுன் பேட்மிண்டன் விளையாட்டு

BREAKING: பிவி சிந்து அபாரம் – ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றார்…!!!

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் சீன வீராங்கனை பிவி சிந்து மோதினார். விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் பிவி சிந்து 21- 13, 21- 15 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

ஒலிம்பிக் பேட்மிண்டன் : இந்தியாவின் பி.வி.சிந்து ….வெண்கல பதக்கம் வென்று சாதனை ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார் . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் பேட்மிட்டண் பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ,சீன வீராங்கனை ஹி பி ஜியா எதிர்த்து மோதினார். ஆட்டத்தின்  தொடக்கத்தில் இருந்தே ஆக்ரோஷமாக செயல்பட்ட பி.வி .சிந்து முதல் செட்டை 21-13 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WI VS PAK : 7 ரன் வித்தியாசத்தில் …. வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி …. பாகிஸ்தான் அபார வெற்றி….!!!

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது .இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 51 ரன்களும் ,ரிஸ்வான் 46 ரன்களும் எடுத்தனர். […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

ஒலிம்பிக் : வெண்கல பதக்கம் வெல்வாரா பி.வி.சிந்து…? சீனா வீராங்கனையுடன் மோதல்….!!!

வெண்கல பதக்கத்துக்திற்கான போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து , சீன வீராங்கனை   ஹி பி ஜியாவ்வை எதிர்கொள்கிறார். இந்தியாவின் நட்சத்திர பேட்மின்டண்  வீராங்கனையும், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவருமான பி.வி.சிந்து தற்போது நடைபெற்று வரும் 32-வது ஒலிம்பிக் போட்டியில் லீக்  ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி வருகிறார். இதில் நேற்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில்     2-ம் நிலை வீராங்கனையான சீன தைபெ தாய் சு யிங்கிடம் 18-21, 12-21 என்ற நேர் செட் கணக்கில்    பி.வி.சிந்து தோல்வியடைந்தார். […]

Categories
விளையாட்டு ஹாக்கி

ஒலிம்பிக் ஹாக்கி : 41 வருசத்துக்கு பிறகு …. சாதனை படைக்குமா இந்திய அணி ….? இங்கிலாந்துடன் இன்று மோதல் ….!!!

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள்  இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன . டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஹாக்கி போட்டியில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி , 5-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியுடன் இன்று மோதுகிறது. இதில் நடந்த லீக் சுற்றுகளில் ‘ஏ ‘பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி 4 அணிகளுடன் மோதி கடைசி 3 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. இதையடுத்து’ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021: 2-வது வெற்றியை கைப்பற்றுமா சேப்பாக் ….? சேப்பாக் VS திண்டுக்கல் இன்று மோதல் ….!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று மாலை நடைபெறும் முதல் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ்‌- சேலம் ஸ்பார்டன்ஸ்  அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன 5-சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 14-வது நாளான இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது .இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ்‌- சேலம் ஸ்பார்டன்ஸ்  அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் திருச்சி அணி 6 புள்ளிகளுடன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021: மதுரை VS நெல்லை இடையிலான…. ஆட்டம் மழையால் ரத்து …. ரசிகர்கள் ஏமாற்றம் ….!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற  நெல்லை அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது .அதன்படி முதலில் பேட் செய்த மதுரை அணி 19.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் […]

Categories
தேசிய செய்திகள் விளையாட்டு

முக்கிய விளையாட்டு பிரபலம் காலமானார் – சோகம்…!!!

சண்டிகரை சேர்ந்த மூத்த தடகள வீராங்கனை மன் கவுர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 105. 100 வயதுக்கு பிறகு மாஸ்டர்ஸ் போட்டியில் பங்கேற்ற இவர் 2017-இல் 100 மீட்டர் ஓட்டத்திலும், தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்நிலையில் அவருடைய மறைவிற்கு முக்கிய பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் வீரர் …. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு …. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!

இலங்கை அணியின் இடது கை  வேகப்பந்து வீச்சாளரான உதனா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார். இலங்கை அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான இசுரு உதனா சர்வதேச  கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிடுவதற்கு இதுவே சரியான நேரம்  என நம்புகிறேன் .அத்துடன் உள்ளூர் மற்றும் டி20 லீக் போட்டிகள் நிச்சயம் விளையாடுவேன் “என்று அவர் கூறியுள்ளார். இவர்  இலங்கை அணிக்காக  இதுவரை 21 ஒருநாள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : பரபரப்பான ஆட்டத்தில் …. கோவையை வீழ்த்தி …. திருப்பூர் அணி த்ரில் வெற்றி ….!!!

கோவை அணிக்கு எதிரான ஆட்டத்தில் திருப்பூர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது . 5-வது சீசன்  டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற கோவை  அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதன்படி முதலில் களமிறங்கிய திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக தினேஷ் 39 ரன்கள் எடுத்தார். […]

Categories
விளையாட்டு ஹாக்கி

ஒலிம்பிக் ஹாக்கி : இந்திய மகளிர் அணி ….காலிறுதிக்கு முன்னேறி அசத்தல் ….!!!

டோக்கியோ ஒலிம்பிக் மகளிருக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது . 32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்று வருகின்றன. இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில்’ ஏ ‘பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய மகளிர் அணி 6 புள்ளிகளுடன் 4-வது இடத்தைப் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது. இதையடுத்து காலிறுதிப் போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஒலிம்பிக் டென்னிஸ் : தகர்ந்த பதக்க கனவு …. நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் தோல்வி….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர்  ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் வெண்கல பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பை  இழந்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் செர்பியாவை சேர்ந்த நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், ஸ்பெயின் வீரரான பேப்லோ கரீரியோ பஸ்டாவுடன் மோதினார். இதில் முதல் செட்டை 6-4  என்ற செட் கணக்கில் கரீரியோ கைப்பற்றினார். இதையடுத்து டை பிரேக்கர் வரை சென்ற போட்டியில் 2-வது செட்டை கடும் போராட்டத்திற்குப் பிறகு 7-6 […]

Categories

Tech |