Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : 5 விக்கெட் வித்தியாசத்தில் …. திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி ….!!!

திருச்சிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பீல்டிக்கை தேர்வு செய்தது . அதன்படி முதலில் பேட்டிங் செய்த  திருச்சி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. இதில் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

ஒலிம்பிக் பேட்மிட்டண் : இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி …. அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்…!!!

ஒலிம்பிக்கில் மகளிருக்கான பேட்மிட்டண் போட்டியில் 2-வது லீக் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்றார் . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 25-ஆம் தேதி நடைபெற்ற மகளிருக்கான பேட்மிட்டண் போட்டியில் ‘ஜே’ குரூப்பில் இடம் பிடித்திருந்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்து , இஸ்ரேல் வீராங்கனையுடன் மோதி 2-0 (21-7, 21-10) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் இன்று நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் ஹாங்காங் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி தான் காரணம்…. பிரபல கிரிக்கெட் வீரர் கொடுத்த ஷாக்…!!!!

இந்திய முன்னாள் கேப்டன் தோனியால் தான் தன்னுடைய வாய்ப்பு பறிபோனது என பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார். தனக்கு ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தவில்லை. மேலும் வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்த வேளையில் தோனியின் வருகை அனைத்தையும் மாற்றி விட்டது. அவர் சிறந்த விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் இரண்டுமாக இருந்தார் என கூறியுள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WI VS AUS : வெஸ்ட் இண்டீசை பந்தாடிய ஆஸ்திரேலியா…! ஒருநாள் தொடரை வென்றது ….!!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது .  வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் மற்றும்       5  டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் நடைபெற்ற டி20 தொடரில்4-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டி நடைபெற்று வந்தது. இதில் நடந்த முதல் 2  போட்டிகளில் இரு அணிகளும் தலா […]

Categories
விளையாட்டு

இணையதளத்தில் வைரலாகும்… ” ஜூனியர் மீராபாய்” வீடியோ…!!!

ஜப்பானில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவிற்கு மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வாங்கி பெருமை சேர்த்துள்ளார். பெண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றதை அடுத்து அவருக்கு பல தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களையும், பரிசுகளையும் வழங்கி வருகின்றன. இந்நிலையில் மீராபாய் சானு பளுதூக்கிய வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. Junior @mirabai_chanu this s called the inspiration pic.twitter.com/GKZjQLHhtQ — sathish sivalingam weightlifter (@imsathisholy) July 26, 2021 அப்படி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : திருச்சி VS திண்டுக்கல் அணிகள் …. இன்று மோதல் ….!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் 11- வது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று இரவு  நடைபெற உள்ள 11- வது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ்  அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.இதுவரை நடந்த  போட்டிகளில் திருச்சி வாரியர்ஸ் அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் தரவரிசையில்  4 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய வீரருக்கு கொரோனா….. டி20 போட்டி ஒத்திவைப்பு….!!!!

கொழும்பில் இன்று இந்தியா – இலங்கை இடையே நடைபெறவிருந்த 2வது டி20 போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய நட்சத்திர வீரர் குர்ணல் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் 8 இந்திய அணியினர் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், மீதமுள்ள இந்திய வீரர்களுக்கு மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதியானால் நாளை இலங்கை மற்றும் இந்தியா மோதும் 2வது […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் : இந்திய வீரர் சரத் கமல் ….போராடி தோல்வி ….!!!

ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் உலகத்தர வரிசையில் 2-வது இடத்தில் உள்ள சீன வீரரிடம், இந்தியாவின் சரத் கமல் தோல்வியடைந்தார் . டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு  டேபிள் டென்னிஸ் போட்டி  நடைபெற்றது. இதில் நடத்த 3-வது சுற்றில் இந்திய வீரரான சரத் கமல், சீனாவை சேர்ந்த              லாங் மா-வை  எதிர்கொண்டார். இதில் பலம் வாய்ந்த சீன வீரருக்கு ஈடுகொடுக்கும் வகையில் சரத் கமல் […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் குத்துச்சண்டை : இந்திய வீராங்கனை லவ்லினா …. காலிறுதிக்கு முன்னேறினார் ….!!!

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர்  குத்துச்சண்டையில் போட்டியில்  இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். 32-வது டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்  மகளிருக்கான 69 கிலோ எடைபிரிவு  குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன், ஜெர்மனி வீராங்கனை நடின் அபேட்ஸ்-ஐ எதிர்கொண்டார். இதில் 28-29, 29-28, 30-27, 30-27, 27-30 என புள்ளிகளைப் பெற்று 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்ற  லோவ்லினா காலிறுதிக்கு […]

Categories
மற்றவை விளையாட்டு

மீராபாய் சானுவுக்கு ரூ.2 கோடி பரிசு…. பதவி உயர்வு…. வெளியான தகவல்…!!!

ஜப்பானின் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்குதல் போட்டியில் 49 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றவர் மீராபாய் சானு. இவர் இந்திய ரயில்வே துறைக்கு விளையாடியவர். இந்நிலையில் அவருக்கு இரண்டு கோடி ரூபாய் பரிசுத் தொகையையும், பதவி உயர்வும் வழங்கப்பட இருக்கிறது என்று ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Categories
விளையாட்டு ஹாக்கி

ஒலிம்பிக் ஹாக்கி : ஸ்பெயினை வீழ்த்தி …. இந்திய ஆண்கள் அணி அபார வெற்றி ….!!!

ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள்  ஹாக்கி அணி ஸ்பெயின் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது . டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று ஆண்களுக்கான ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் நடந்த    3-வது லீக் சுற்றில்  ஏ பிரிவில் உள்ள இந்திய ஆண்கள் அணி, ஸ்பெயின் அணியுடன் மோதியது. இதில் தொடக்கத்திலிருந்தே இந்திய அணி ஆதிக்கத்தைச் செலுத்தியது. அப்போது ஆட்டத்தின்     14-வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் சிம்ரன்ஜித் சிங் முதல் கோலை அடித்தார்.இதற்கு அடுத்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : தொடரை கைப்பற்றுமா இந்தியா ….? 2-வது டி20 போட்டி …. இன்று நடக்கிறது ….!!!

இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று தொடங்குகிறது.  இலங்கையில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : நெல்லையை வீழ்த்தி …. திருப்பூர் தமிழன்ஸ் முதல் வெற்றி ….!!!

நெல்லை அணிக்கு எதிரான ஆட்டத்தில்  திருப்பூர் தமிழன்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் – நெல்லை ராயல் கிங்ஸ்  அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த நெல்லை அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சூர்யபிரகாஷ்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

Exclusive: தோனி ரிட்டன்ஸ் – இந்திய அணி ஜெர்சியில்…. வா தல…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த வருடம் திடீரென கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனையடுத்து அவருடைய ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கி இருந்தனர். இதையடுத்து தற்போதுள்ள இந்திய வீரர்கள் அணிந்துள்ள ரெட்ரோ கிட் ஜெர்சியை தோனி அணிய முடியவில்லையே என்று வருத்தப்பட்டனர். இந்நிலையில் விளம்பரப் படத்திற்காக தோனி இந்திய அணியின் ரெட்ரோ கிட் ஜெர்சியை அணிந்துள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்போதைய டிரெண்டிங்கில் தோனி தான் நம்பர் […]

Categories
கால் பந்து விளையாட்டு

பெண்கள் ஹாக்கி: இந்தியா போராடி தோல்வி…!!!

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கி பிரிவில் இந்தியா 0-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியிடம் தோல்வி அடைந்தது. கடந்த ஆட்டத்தில் நம்பர் ஒன் அணியான நெதர்லாந்திடம்  5-1 என  தோல்வியடைந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் இந்தியா மேலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனாலும் ஜெர்மனியின் தாக்குதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்தது. புதன்கிழமை நடைபெறும் 3-வது ஆட்டத்தில் பிரிட்டன் அணியுடன் இந்தியா மோதும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories
கால் பந்து விளையாட்டு

கால்பந்து விளையாட்டில் கலக்கும் தோனி… வைரலாகும் புகைப்படம்…!!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி மற்றும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் கால்பந்து விளையாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. மும்பையில் ஆல் ஸ்டார்ஸ் கால்பந்து கிளப் சார்பில் நடத்தப்பட்ட நட்பு ரீதியிலான போட்டியில் ரன்வீர் சிங், தோனி இருவரும் ஒரே அணியில் விளையாடினார். பிரபலங்கள் இருவரும் ஆல் ஸ்டார்ஸ் கால்பந்து கிளப்பின் ஒரு பகுதியாகும். இது இந்தியாவில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் போது தொண்டுக்கான வருமானத்தை […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் போட்டியில் மேலும் 16 பேருக்கு கொரோனா… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் தற்போது கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் ஒத்தி வைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டி இந்த வருடம் மிகுந்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகின்றது. பாதுகாப்பு கருதி இந்த முறை ஒலிம்பிக் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. வீரர்கள் பயிற்சியாளர்கள் கமிட்டியினர் என அனைவரும் பரிசோதனைக்குப் பிறகு ஒலிம்பிக் கிராமத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. தற்போது போட்டியில் பங்கேற்கும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : இங்கிலாந்து பறக்கவுள்ள 2 வீரர்கள் …. வெளியான புது அப்டேட் …!!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான  முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற ஆகஸ்ட்  4-ம் தேதி தொடங்குகிறது . விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு  எதிராக 5  டெஸ்ட் போட்டிகளில்  விளையாட உள்ளது. இதில்  இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் டெஸ்ட் போட்டிக்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில் மற்றும்  அவேஷ் கான் ஆகியோர் […]

Categories
விளையாட்டு

நாடு திரும்பிய மீராபாய் சானுக்கு …. விமான நிலையத்தில் உற்சாக  வரவேற்பு

டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு  வெள்ளிப் பதக்கம்  வென்று சாதனை படைத்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு  வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். அவருக்கு அரசியல் தலைவர்கள் ,பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜப்பானில் இருந்து இன்று டெல்லி திரும்பிய மீராபாய் சானுக்கு விமான நிலையத்தில் உற்சாக  […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் : இந்திய வீராங்கனை மணிகா பத்ரா …. அதிர்ச்சி தோல்வி ….!!!

டேபிள் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மணிகா பாத்ரா தோல்வியடைந்தார். டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா 3-வது சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இந்நிலையில் 3-வது சுற்றுக்கான போட்டியில் மணிகா பத்ரா,  ஆஸ்திரியா வீராங்கனை  சோபியா பொல்கானோவாவுடன்  மோதினார். இதற்கு முன் நடந்த முதல் 2 சுற்றுகளில் சிறப்பாக விளையாடிய மணிக்கா இந்த சுற்றில்  தவறவிட்டார். இதில் 8-11, 2-11, 5-11, 7-11 என […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021: நெல்லை VS திருப்பூர் அணிகள் …. இன்று மோதல் …!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று நடைபெற உள்ள 10-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் – திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற உள்ள 10-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் – திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கு முந்தைய ஆட்டத்தில்  திருச்சியிடம் தோற்ற நெல்லை அணி , […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் வாள்வீச்சு : தமிழக வீராங்கனை பவானி தேவி …. 2-வது சுற்றில் தோல்வி …..!!!

ஒலிம்பிக்கில் வாள்வீச்சு போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி 2-வது சுற்றில் தோல்வியடைந்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 -வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று காலை வாள்வீச்சு போட்டியில் முதல் சுற்றுப்  நடைபெற்றது. இதில் பெண்களுக்கான தனிநபர் சப்ரே பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி , துனிசியா வீராங்கனை நடியாவை எதிர்கொண்டார் . இதில் 15-3 என்ற கணக்கில் நடியாவை வீழ்த்திய  பவானி தேவி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதையடுத்து 2-வது […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் குத்துச்சண்டை: இந்திய வீரர் ஆசிஷ்குமார் தோல்வி….!!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் 75 கிலோ எடை பிரிவுக்கான முதல் சுற்றுப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் ஆசிஷ்குமார் சீனாவின் டுஹேடாவுடன் மோதினார். இருவரும் தொடக்கத்தில் இருந்து கடுமையாக போராடினர். மொத்தம் 3 சுற்றுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் புள்ளிகள் அடிப்படையில் 5-0 என்ற கணக்கில் சீன வீரர் டுஹேடா வெற்றிப்பெற்றார். ஆசிஷ் குமாரின் இந்த தோல்வியால் குத்துச்சண்டையில் 75 கிலோ எடை பிரிவில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு எட்டாக் கனியானது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WI VS AUS : 2-வது ஒருநாள் போட்டி …. வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி ….!!!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில்  வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது . வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இருஅணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி பார்படாசில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : மணிபாரதி, ஹரி நிஷாந்த் அதிரடி …. திண்டுக்கல் டிராகன்ஸ் அபார வெற்றி ….!!!

கோவைக்கு  எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி அபார வெற்றி பெற்றது. 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதிக் கொண்டன . இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 20 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. இதில் தொடக்க வீரராக […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் வில்வித்தை: கால்இறுதி சுற்றில் …. இந்திய ஆண்கள் அணி தோல்வி….!!!

ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான வில்வித்தை போட்டியின் கால்இறுதி சுற்றில் இந்திய ஆண்கள் அணி தோல்வியடைந்தது. டோக்கியோ  ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான வில்வித்தை போட்டி இன்று நடைபெற்றது. இதில்  இந்தியா சார்பில் அதானு தாஸ், பிரவின் ஜாதவ் மற்றும் தரூன்தீப் ராய் ஆகியோர் கஜகஸ்தான் அணியை எதிர் கொண்டனர். இப்போட்டியில் 6-2 என்ற கணக்கில் கஜகஸ்தான் அணியை வீழ்த்திய  இந்திய அணி கால்இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதையடுத்து நடந்த கால்இறுதி சுற்றில் இந்திய அணி, தென் கொரிய அணியுடன் மோதியது. இதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : 3 விக்கெட் வித்தியாசத்தில்…. மதுரையை வீழ்த்தியது திருச்சி வாரியர்ஸ் ..!!!

மதுரைக்கு எதிரான 8-வது லீக் ஆட்டத்தில் திருச்சி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5-வது சீசன் டிஎன்பிஎல் டி-20 போட்டியில் 8-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் மதுரை பாந்தர்ஸ் – ரூபி  திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன . இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை குவித்தது. […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் : இந்திய வீரர் சரத் கமல் …. 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் ….!!!

ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சரத் கமல் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள்  ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிசில்  2-வது சுற்றுக்கான போட்டி  நடைபெற்றது.இப்போட்டியில் இந்திய வீரர் சரத் கமல் போர்ச்சுக்கல் வீரரான தியாகோ அபோலோனியாவை எதிர்கொண்டார் . இதில் 2-11, 11-8, 11-5, 9-11, 11-6, 11-9 என்ற கணக்கில் இந்திய வீரர் சரத் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021: மீண்டும் தொடங்கும் ஐபிஎல் …. சென்னை vs மும்பை மோதல்….வெளியான போட்டி அட்டவணை ….!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி தொடங்கி  நடைபெற்று வந்த 14-வது சீசன் ஐபிஎல் போட்டி கொரோனா  தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனால் மீதமுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில்நடக்க உள்ள  மீதமுள்ள ஐபிஎல் போட்டி அட்டவணையை பிசிசிஐ நேற்று வெளியிட்டுள்ளது. […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் வில்வித்தை : இந்திய ஆண்கள் அணி …. கால்இறுதி சுற்றுக்கு முன்னேற்றம் ….!!!

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய ஆண்கள் அணி  கால்இறுதி சுற்றுக்கு முன்னேறியது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை ஆண்களுக்கான  வில்வித்தை போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியில் அதானு தாஸ், பிரவீன் ஜாதவ் மற்றும் தருண் தீப்ராய் ஆகியோர் கஜகஸ்தான் அணியை எதிர்கொண்டனர். இதில் முதல்  2 செட்டை இந்திய அணி கைப்பற்ற , 3- வது செட்டை கஜகஸ்தான் அணி வென்றது. இறுதியாக 4-வது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : சூர்யகுமார் , புவனேஸ்வர் அசத்தல் ….! 38 ரன்கள் வித்தியாசத்தில்…. இந்தியா அபார வெற்றி ….!!!

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது . இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதசா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது .இறுதியாக 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 46 ரன்களும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் தொடர் அறிவிப்பு: முதல் போட்டியில் CSK vs MI மோதல்…!!!

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர்-19 ஆம் தேதியில் இருந்து மீண்டும் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-  மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. அக்டோபர் 10  குவாலிபயர்-1 , அக்டோபர் 11 இல் எலிமினேட்டர், அக்டோபர் 13 இல் குவாலிபயர், அக்டோபர் 15ல் இறுதி போட்டி நடைபெற உள்ளது.

Categories
விளையாட்டு

டேபிள் டென்னிஸ் : இந்திய வீராங்கனை மணிகா பத்ரா …. 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் ….!!!

ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில்  இந்திய வீராங்கனை  மணிகா பத்ரா வெற்றி பெற்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் 2-ம் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா உக்ரேன் வீராங்கனை  பெசோட்ஸ்காவை எதிர்கொண்டார். இதில் 4-3 என்ற செட் கணக்கில் பெசோட்ஸ்காவை வீழ்த்தி வெற்றி பெற்ற மணிகா பத்ரா 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக்கில்  3-வது சுற்றுக்கு முன்னேறிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : டாஸ் வென்ற இலங்கை ….! பீல்டிங் தேர்வு செய்தது ….!!!

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி 20 போட்டி  இன்று தொடங்குகிறது . ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில்  இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி 20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதசா மைதானத்தில் தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தப்போட்டியில் அறிமுக வீரராக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி களமிறங்குகிறார். […]

Categories
விளையாட்டு ஹாக்கி

ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி : 2-வது லீக் போட்டியில் …. இந்திய அணி தோல்வி ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில்  இந்திய அணி  ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.   32-வது டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது .இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஹாக்கி லீக் சுற்றில் ‘ஏ’ பிரிவுக்கான 2-வது லீக் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்டன. இதில் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இறுதியில் இந்திய அணி 1-7 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது. இதில் இந்தியா சார்பில் சிங் தில்பிரீத் 34-வது நிமிடத்தில் கோல் அடித்தார். […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஒலிம்பிக் போட்டி : டென்னிஸ் இரட்டையர் பிரிவில் …. சாய்னா -அங்கிதா ஜோடி தோல்வி ….!!!

டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்திலேயே இந்தியாவின் சானியா மிர்சா -அங்கிதா ரெய்னா ஜோடி தோல்வியடைந்தது . டோக்கியோ  ஒலிம்பிக்கில் பெண்கள்  இரட்டையர் பிரிவுக்கான  டென்னிஸ் போட்டி இன்று நடைபெற்றது. இதில்  இந்திய வீராங்கனைகள்  சானியா மிர்சா – அங்கிதா ரெய்னா ஜோடி , உக்ரைன் நாட்டை சேர்ந்த சகோதரிகளான நாடியா- லுட்மைலா ஜோடியுடன் மோதினர் . இதில் முதல் செட்டை சாய்னா – அங்கிதா ஜோடி 6-0 என்ற செட் கணக்கில் எளிதாக […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஒலிம்பிக் டென்னிஸ் : ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே பார்ட்டி …. அதிர்ச்சி தோல்வி ….!!!

ஒலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் முதல் சுற்றில்  நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லே பார்ட்டி தோல்வியடைந்து  அதிர்ச்சியளித்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள்  ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் சமீபத்தில் நடந்த விம்பிள்டன் டென்னிசில்  சாம்பியன் பட்டத்தை வென்றவரும், நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லே பார்ட்டி, ஸ்பெயின் வீராங்கனை சாரா சொர்ரிபெஸ் டோர்மோவுடன் மோதினார் . இந்த போட்டியில்  ஆஷ்லே பார்ட்டி எளிதாக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட […]

Categories
குத்து சண்டை விளையாட்டு

ஒலிம்பிக் குத்துச்சண்டை: இந்திய வீரர் மணிஷ் கவுசிக் தோல்வி….!!!!

ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா நேற்று முடிவடைந்ததையடுத்து இன்று காலை முதல் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக தொடங்கி உள்ளது. ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டியில் சீனா முதல் தங்க பதக்கத்தை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டியின் 63 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மணிஷ் கவுசிக் தோல்வி அடைந்தார். குத்துச்சண்டை ஆடவர் 63 கிலோ எடைப் பிரிவில் முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS இலங்கை மோதும் ….. முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது ….!!!

இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று தொடங்குகிறது . ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. இதில் நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில்  3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. அதன்படி இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி […]

Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் : துடுப்பு படகு போட்டி …. அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி ….!!!

 ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டியில்  இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் லால் ஜாட்- அரவிந்த் சிங் ஜோடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர் . 32-வது டோக்கியோ ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் துடுப்பு படகு போட்டியில் ஆண்கள்  லைட்வெயிட் இரட்டையர் ஸ்கல்ஸ்  ஹீட்  தகுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இப்போட்டி இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு நடைபெற்றது .இதில் இந்தியா சார்பில் அர்ஜூன் லால் ஜாட் – அரவிந்த் சிங் ஜோடி கலந்துகொண்டனர். […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் :10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் …. இந்திய வீராங்கனைகள் அதிர்ச்சி தோல்வி ….!!!

மகளிர்  10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் தோல்வியடைந்தனர் . டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான 10 ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் இந்திய வீராங்கனைகள்  யஷாஸ்வினி தேஸ்வால், மானு பாகெர் கலந்துகொண்டனர் . 6 சுற்றுகள்  கொண்ட போட்டியில் யஷாஸ்வினி முறையே 94,98,94,97,96 என மொத்தமாக 574 புள்ளிகளை பெற்று 13-வது இடத்தை பிடித்தார். இப்போட்டியில் முதல் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

ஒலிம்பிக் பேட்மிண்டன் : இந்திய வீராங்கனை பி.வி சிந்து …. முதல் சுற்றில் வெற்றி ….!!!

பேட்மிண்டன் போட்டியில் பெண்கள்  ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி சிந்து வெற்றி பெற்றுள்ளார் . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று வரும் பல்வேறு வகையான விளையாட்டுகளில் வீரர்-வீராங்கனைகள் வெற்றி பெற்று பதக்க வேட்டையைத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற  பேட்மிட்டண் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில்  இந்திய வீராங்கனை பி.வி .சிந்து , இஸ்ரேல் வீராங்கனை செனியா பெர்லிகர்போவாவை  எதிர்கொண்டார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : அபராஜித், ரஞ்சன் அசத்தல் …. நெல்லை ராயல் கிங்ஸ் அபார வெற்றி…!!!

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி  7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது . டிஎன்பிஎல் டி20 போட்டியின்  6-வது லீக் ஆட்டம் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள்  மோதிக் கொண்டன .இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இறுதியாக சேப்பாக் அணி 20 ஓவர் முடிவில் 7 […]

Categories
விளையாட்டு ஹாக்கி

தோல்வியுடன் தொடங்கிய இந்தியா… நெதர்லாந்து அபார வெற்றி…!!!

ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில், மகளிர் ஹாக்கிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 1-5 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணியிடம் தோல்வியை சந்தித்தது. ஆட்டத்தின் பாதி நேரம் வரை 1-1 என்ற சமநிலையில் இருந்தது. ஆனால் மூன்றாம் குவாட்டரில் 3 நிமிடங்களில் நெதர்லாந்து 2 கோல் அடிக்க இந்திய அணியால் எதிரணியின் வெற்றியை தடுக்க முடியவில்லை. இந்தியாவுக்காக கேப்டன் ராணி ராம்பால் ஒரு கோல் அடித்தார்.

Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் : நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் …. முதல் சுற்றில் வெற்றி ….!!!

டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்றார் . 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரும், நம்பர் ஒன் வீரருமான செர்பியா சேர்ந்த ஜோகோவிச் பொலிவியா வீரரான  ஹூகோ டெலியனுடன் மோதினார் . இதில் 6-2, 6-2 என்ற […]

Categories
விளையாட்டு

இந்தியாவிற்கு முதல் பதக்கம்… மீரா பாய் சானுக்கு கமல் வாழ்த்து…!!!!

ஜப்பான் டோக்கியோவில் நேற்று கோலாகலமாக ஒலிம்பிக் போட்டிகள் துவங்கியது. “டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்று தந்த வீராங்கனை மீரா பாய் சானுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்று தந்த வீராங்கனை மீரா பாய் சானுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

Categories
விளையாட்டு

குத்துச்சண்டை: ஜப்பான் எதிராக இந்திய வீரர் தோல்வி….!!!

ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டுகளில் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார் இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிரிஷன். ஜப்பான் நாட்டை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் Okazawa உடனான போட்டியில் விகாஸ் 0 – 5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். விகாஸ் வெல்டர்வெயிட் பிரிவில் இந்த போட்டியில் பங்கேற்று விளையாடினார்.  Okazawa தற்போது அடுத்த சுற்றான ரவுண்ட் ஆப் 16-க்கு முன்னேறி சென்றுள்ளார்.

Categories
விளையாட்டு

டேபிள் டென்னிஸ் முதல் சுற்றில் …. இந்திய வீராங்கனை மணிகா பத்ரா வெற்றி …!!!

டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார் . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டேபிள் டென்னிஸ் போட்டியில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா கிரேட் பிரிட்டன் வீராங்கனை  டின்-டின் ஹோவை எதிர்த்து மோதினார் . இதற்கு முன் நடந்த கலப்பு இரட்டையர் பிரிவில் தோல்வியை சந்தித்த மணிகா பத்ரா மகளிர் ஒற்றையர் பிரிவில் அசத்தினார். இதில் முதல் […]

Categories
விளையாட்டு

டேபிள் டென்னிஸ்….. முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சுதிர்தா வெற்றி…..!!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று 32-வது ஒலிம்பிக் போட்டியின் திறப்பு விழாவானது தொடங்கி,தற்போது போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,இன்று நடைபெற்று வரும் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சுதிர்தா முகர்ஜி,ஸ்வீடனைச் சேர்ந்த லிண்டா பெர்க்ஸ்ட்ராமை எதிர்கொண்டார். இதனையடுத்து,பெர்க்ஸ்ட்ரோம் 5-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார். இதனால்,முதல் ரவுண்டில் 11-5 என்ற கணக்கில் சுதிர்தா ஆட்டத்தை இழந்தார்.அதன்பின்னர்,ஆட்டத்தை கைப்பற்ற முயற்சித்தார். இந்நிலையில்,சுதிர்தா 5-11, 11-9, 10-12, 9-11, 11-3, 11-9, 11-5 என்ற […]

Categories
விளையாட்டு ஹாக்கி

டோக்கியோ ஒலிம்பிக் : நியூசிலாந்தை வீழ்த்தி …. இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெற்றி …!!!

நியூசிலாந்து அணியை வீழ்த்தி  3-2 என்ற கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 32-வது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று காலை நடந்த ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன. இதில் ஆட்டம் தொடங்கிய 6-வது நிமிடத்தில் நியூசிலாந்து  தனது முதல் கோலை பதிவு செய்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 10-வது நிமிடத்தில் இந்திய வீரர் ருபிந்தர் பால் சிங் முதல் கோலை அடிக்க , 1-1 என்ற கோல் இரு […]

Categories

Tech |