Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கை கோட்டை தான்…! குஷியில் இந்தியர்கள்…. தலைகீழான நிலைமை …!!

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற உள்ள முதல் ஒருநாள் போட்டியானது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. மேலும் இந்த அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இரு அணிகளுக்கு                       இடையேயான முதல் ஒருநாள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : முதல் ஒருநாள் போட்டி …. கொழும்பில் தொடங்குகிறது ….!!!

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையான முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் தொடங்குகிறது . விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதே நேரத்தில் ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. மேலும் இந்த அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் போட்டி : வீரர்கள் தங்கும் கிராமத்தில் …. ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ….!!!

ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் வீரர்கள் தங்கி இருந்த கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது  . டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற 23 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டி தொடங்க இன்னும் சிறிது நாட்களே உள்ள நிலையில் போட்டியில் பங்கு பெறும் வீரர் ,வீராங்கனைகள் தங்கி இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை ஒலிம்பிக் கமிட்டி சங்க […]

Categories
விளையாட்டு

‘நான் ஜப்பானில் இருக்க விரும்புகிறேன்’ …. மாயமான ஒலிம்பிக் வீரர் …. தேடும் பணியில் போலீசார் ….!!!

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்ற உகாண்டா அணி வீரர் ஒருவர் மாயமானதால் போலீசார் அவரை தேடி வருகின்றனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற 23 -ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் ஜப்பானுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் உகண்டா அணியில் பளுதூக்கும் வீரரான ஜூலியஸ் செகிடோலெக்கோ என்பவர்  ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக ஜப்பானுக்கு சென்றுள்ளார். அங்கு மேற்கு ஜப்பானில் உள்ள  இசுமிசானோ என்ற நகரில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENG VS PAK : ரிஸ்வான், பாபர் அசாம் அசத்தல் …. முதல் டி20 போட்டியில்…. பாகிஸ்தான் அபார வெற்றி ….!!!

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது . இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதற்கு முன் நடந்த 3 ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நாட்டிங்காமில் நடந்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலகக்கோப்பை போட்டி : ஒரே குரூப்ல இந்தியா, பாகிஸ்தான் …. ரசிகர்கள் செம ஹேப்பி …!!!

இந்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கும் அணிகளின்  பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது . 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி வருகின்ற அக்டோபர் 17-ம் தேதி முதல் தொடங்கி நவம்பர்      14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதற்காக 16 அணிகள் பங்கேற்கும் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் சூப்பர் 12 பிரிவில் குரூப் 1 , குரூப்2 என 2 அணிகளாக […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி …. நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் பங்கேற்பு ….!!!

பிரபல டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளார். உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து டோக்கியோவில் அவசரநிலை பிரகடனம்  செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னணி டென்னிஸ் வீரர்- வீராங்கனைகளான பெடரர், நடால், டொமினிக் திம், செரீனா வில்லியம்ஸ் உட்பட பலர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். ஆனால் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரும் ,உலகின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நாங்க அப்பவே சொன்னோம் …. ஆனா அவரு கேட்கல ….. பிசிசிஐ எச்சரிக்கையை மீறிய பண்ட் ….!!!

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர்களில்  ரிஷப் பண்ட் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது . இதில் சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதற்கிடையே 20 நாட்கள் இந்திய வீரர்களுக்கு ஓய்வு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலகக்கோப்பை…. இந்தியா Vs பாகிஸ்தான் மோதல்…. ஐசிசி அறிவிப்பு…!!!!

இந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் 12 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரித்து ஐசிசி அறிவித்துள்ளது. இதில் குரூப் 1 இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், குரூப் 2 இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன. மற்ற நான்கு இடங்களுக்கு தகுதிச்சுற்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENG VS PAK : தொடரை வெல்லுமா பாகிஸ்தான் ….? முதல் டி 20 போட்டி இன்று தொடக்கம் ….!!!

இங்கிலாந்து -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி 20 போட்டி இன்று நடைபெறுகின்றது . இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக இங்கிலாந்து அணியில் 3  வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் அனைத்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டர். இதனால் இரு அணிகளுக்கு இடையே நடந்த  3 ஒருநாள் போட்டியில்  பென் ஸ்டோக்ஸ் தலைமையிலானா புதிய இங்கிலாந்து அணி களமிறங்கி 3-0 என்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENGW VS INDW : 3-வது டி20 போட்டி …. இந்தியாவை வீழ்த்தி ….தொடரை வென்ற இங்கிலாந்து …!!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த  3-வது டி-20 போட்டியில் இங்கிலாந்து  அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது . இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான 3 -வது டி20 போட்டி  நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இறுதியாக 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு  153 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக  ஸ்மிரிதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி தரவரிசை …. கோலியை பின்னுக்கு தள்ளி ….. முதலிடத்தை பிடித்த பாபர் அசாம் ….!!!

ஐசிசியின் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணி கேப்டன்  விராட் கோலி 2வது இடத்திற்கு பின் தங்கியுள்ளார் ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இதில் பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் 873 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பிடித்தார் . இந்நிலையில் ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி 857 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு பின் தங்கியுள்ளார். இதையடுத்து ரோகித் சர்மா 825 புள்ளிகளுடன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரிஷப் பண்ட்க்கு கொரோனா உறுதி…. ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதனால் அணியில் இருந்து விலகி 20 நாட்களுக்கு தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரிஷப் பண்ட முதல் டெஸ்டில் விளையாட வாய்ப்பில்லை என்று தெரிகிறது. இவர் சமீபத்தில் லண்டனில் நடந்த யூரோ கோப்பை கால்பந்து தொடரை பார்க்க சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: இங்கிலாந்தில் இந்திய வீரர்களுக்கு கொரோனா…. பெரும் அதிர்ச்சி….!!!!!

இங்கிலாந்தில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 இந்திய அணி வீரர்களும் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2 வீரர்களில் ஒருவருக்கு நெகட்டிங் வந்த நிலையில் மற்றொருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். நியூசிலாந்துடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்திலேயே இருக்கிறது. இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடருக்கு முன் 20ந்தேதி துவங்கும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா விளையாடுகிறது.  இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 டெஸ்ட் தொடரின் முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENG VS PAK : மீண்டும் களமிறங்கும் கேப்டன் மோர்கன் …. வீரர்கள் பட்டியல் வெளியானது ….!!!

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் உட்பட முக்கிய வீரர்கள் களமிறங்குகின்றனர். இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பு இங்கிலாந்து அணி வீரர்கள் உட்பட   7 பேருக்கு கொரோனா  தொற்று பாதிப்பு உறுதியானது. இதனால் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் உட்பட முக்கியமான வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.இதன் காரணமாக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான புதிய இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

SHOCKING: விம்பிள்டன் டென்னிஸில் சூதாட்டம்… விசாரணைக்கு உத்தரவு….!!!

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் போட்டி லண்டனில் சமீபத்தில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரரான ஜோகோவிச்சும் (செர்பியா), பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல்நிலை வீராங்கனை ஆஸ்லே பார்டியும் (ஆஸ்திரேலியா) பட்டம் வென்றனர். இந்நிலையில் ஒற்றையர் போட்டியில் ஜெர்மனி வீரர் ஆடிய முதல் சுற்று ஆட்டத்திலும், ஆண்கள் இரட்டையர் முதல் சுற்று ஆட்டத்திலும் முடிவு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் உள்ளது. இதனால் இந்த இரண்டு ஆட்டங்களிலும் சூதாட்டம் நடந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி …. பிரபல வீரர் ரோஜர் பெடரர் விலகல் ….!!!

காயம் காரணமாக ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக  சுவிட்சர்லாந்தை சேர்ந்த     பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் தெரிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஜூலை 23ஆம் தேதி தொடங்குகிறது . இந்நிலையில் கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு வீரர், வீராங்கனைகள்  ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர் . இந்த நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர்  ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் …. பங்கேற்கும் அதிபரின் மனைவி ….!!!

அமெரிக்க அதிபர்  ஜோ பைடனின் மனைவியான ஜில் பைடன், ஒலிம்பிக்  தொடக்க விழாவில் பங்கேற்க உள்ளார் .  டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற 23-ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு தகுதி பெற்ற வீரர் – வீராங்கனைகள் அனைவரும் டோக்கியோவிற்கு செல்ல தயாராகி வருகின்றனர். இந்நிலையில் வருகின்ற ஜூலை 23-ஆம் தேதி நடைபெறும் தொடக்க விழாவில் வீரர்-வீராங்கனைகள் தங்களுடைய  நாட்டின் கொடிகளை ஏந்தி அணிவகுத்து சொல்வார்கள். இந்த […]

Categories
உலக செய்திகள் குத்து சண்டை விளையாட்டு

FLASH NEWS: மிகவும் பிரபலமான WWE வீரர் காலமானார் – சோகம்…!!!

பிரபல மல்யுத்த வீரர் பால் ஓரன்டார்ப்(71) உடல்நலக்குறைவால் ஜார்ஜியாவில் உள்ள பயேட்டவில்லவில் காலமானார். இவர் முதல் WrestleMania சண்டையில் பங்கேற்று நான்கு பேரில் ஒருவராக புகழ்பெற்றவர். Wristling-ல் ஹால் ஆப் பேம் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர். இவரது இறப்பை மகன் உறுதி செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். இதையடுத்து பால் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WI VS AUS : கிறிஸ் கெயிலின் சிக்ஸர் மழை …. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி …தொடரை வென்ற வெஸ்ட் இண்டீஸ்….!!!

வெஸ்ட் இண்டீஸ் – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டியில்  வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ் – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி செயிண்ட் லூசியாவில்  நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இறுதியாக 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ஹென்ரிக்ஸ் 33 ரன்கள் , பின்ச் 30 ரன்கள், […]

Categories
கால் பந்து விளையாட்டு

நிறவெறி தாக்குதலுக்கு… இங்கிலாந்து கேப்டன் பதிலடி…!!!

இத்தாலிக்கு எதிரான யூரோ கால்பந்து இறுதியாட்டத்தில், பெனால்டி தவறவிட்ட இங்கிலாந்தின் ராஸ் போர்ட், சான்ச்சோ, சாகா மீது ரசிகர்கள் கடுமையான நிறவெறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரையும் இங்கிலாந்தை சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறும் படியும், அவர்களது இனத்தை பற்றி தவறாக பேசியும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இனவெறியை தூண்டும் வகையில் கடுமையான பதிவுகளை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். அவர்களுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து கேப்டன் கேன் “தைரியமாக […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஒலிம்பிக் போட்டி : டென்னிஸ் வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு விலகல் ….!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கனடா டென்னிஸ் வீராங்கனைவ பியான்கா ஆன்ட்ரீஸ்கு ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகியுள்ளார் . டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஜூலை 23-ஆம் தேதி ஜப்பானில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். மேலும் இந்த போட்டியில் கலந்துகொள்ளும் வீரர் ,வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் கொரோனா தொற்று  அச்சத்தால் வீரர் ,வீராங்கனைகள் சிலர் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இந்த […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் விளையாட்டு

BREAKING: பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்…. மாரடைப்பால் மரணம் – சோகம்…!!!

மிகப் பிரபல இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யாஷ்பால் சர்மா மாரடைப்பால் காலமானார். இவர் 1983 உலக கோப்பை வென்ற கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். இவர் இதுவரை 37 ஒருநாள் போட்டிகள், 42 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் இந்திய அணி தேர்வுக் குழுவிலும் இருந்துள்ளார். இந்நிலையில் இவருடை மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
டென்னிஸ் விளையாட்டு

ரூ.1100 கோடி பரிசுத்தொகை ஈட்டிய முதல் வீரர்… நோவக் ஜோகோவிக்…!!!

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி நேற்று இரவு நடந்தது. இதில் உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவர் நோவக் ஜோகோவிக் பெரிட்டினி என்ற இத்தாலி வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.இதன் மூலம் ஜோகோவிச் புதிய சாதனை படைத்தார். 34 வயதான அவர் 20 கிராண்ட்சிலாம் பட்டம் பெற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் மற்றொரு சாதனையும் இவர் படைத்துள்ளார். அது என்னவென்றால் ரூபாய் 1100 கோடி பரிசுத் தொகை ஈட்டிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2-வது டி20 போட்டி …. ஷபாலி , தீப்தி ஷர்மா அதிரடி …. இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்தியா ….!!!

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி 20போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய மகளிர் அணி விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று நடந்தது . இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் இந்திய அணி முதலில் களமிறங்கியது. இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு […]

Categories
கால் பந்து விளையாட்டு

தோல்வியடைந்த கோபத்தில்…. இத்தாலி ரசிகர்களை தாக்கிய இங்கிலாந்து ரசிகர்கள்…!!!

யூரோ கால்பந்து இறுதிப் போட்டியில் இத்தாலி அணி இங்கிலாந்தை வீழ்த்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த இங்கிலாந்து ரசிகர்கள் மைதானத்தில் இருந்து வெளியே வந்த இத்தாலி ரசிகர்களை தாக்க துவங்கின.ர் இந்த ஆட்டம் இங்கிலாந்தின் வெம்பிலி மைதானத்தில் நடைபெற்றதால் இங்கிலாந்து ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதனால் அந்த இடம் கலவரம் போல் காட்சியளித்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. https://youtu.be/fZADLaZ5zrU

Categories
டென்னிஸ் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் : 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று ….. சாதனை படைத்த ஜோகோவிச்….!!!

விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் பெரேட்டினியை வீழ்த்திய ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார் . ‘கிராண்ட்ஸ்லாம்’போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இறுதி சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் , 7-வது இடத்தில் இருக்கும் இத்தாலி வீரர் பெரேட்டினியை எதிர்கொண்டார். இந்த போட்டி கிட்டத்தட்ட 3 மணி நேரம் 23 நிமிடங்கள் வரை நீடித்தது. இதில் 6-7,6-4,6-4 6-3 […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : இங்கிலாந்தை வீழ்த்தி …. கோப்பையை வென்ற இத்தாலி…!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் 2-வது முறையாக இத்தாலி அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது . 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) தொடரின் இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்றது . இந்திய நேரப்படி இன்று அதிகாலையில் நடைபெற்ற போட்டியில் தரவரிசையில்    7-வது இடத்திலுள்ள இத்தாலி அணி, இங்கிலாந்துடன் மோதியது. இதில் இங்கிலாந்து வீரர்  லூக் ஷா ஆட்டம் தொடங்கிய 2- வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து இத்தாலி அணிக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடங்கப்பா என்ன ஒரு கேட்ச்….! பவுண்டரி லைனில் செம பீல்டிங் …. மிரள வைத்த இந்திய வீராங்கனை ….!!!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய வீராங்கனை ஹர்லின் தியோல் பவுண்டரி லைனில் பிடித்த கேட்ச் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது . இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே முதல் டி20 போட்டி நார்தாம்ப்டனில்  நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு களமிறங்கிய இந்திய அணி 178 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது . ஆனால் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் : ஜோகோவிச்,பெரெட்டினி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் ….!!!

விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த முதல் இத்தாலிய வீரராக மேட்டியோ பெரெட்டினி சாதனை படைத்தார் . விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும் , ‘ நம்பர் 1’ வீரருமான செர்பியாவை சேர்ந்த  ஜோகோவிச்,  கனடா வீரர் டெனிஸ் ஷபோவலோவுடன் மோதினார் . இதில் 7-6, 7-5, 7-5  என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். இதையடுத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENGW VS INDW : முதல் டி20 போட்டி …. 18 ரன்கள் வித்தியாசத்தில்…. இங்கிலாந்து அணி வெற்றி ….!!!

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று இங்கிலாந்தில் உள்ள  நார்த்தம்ப்டனில்  நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இறுதியாக 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 177 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக நடாலி சீவர் 55 ரன்கள், ஆலன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: தோனி விலகினால் IPL-ல் இருந்து விலகுவேன்…. பிரபல வீரர் அதிர்ச்சி….!!!!

பிரபல இந்திய வீரர் மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) பற்றிய ஒரு முக்கியச் செய்தி வெளியாகி உள்ளது. தல தோனி என்னும் எத்தனை வருடங்களுக்கு ஐபிஎல் விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி காஷி விஸ்வநாதன் எம்.எஸ்.தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை (MS Dhoni’s cricket career) குறித்து பேசியுள்ளார். தோனி இப்பவும் ழு உடற்தகுதியுடன் இருப்பதால் சென்னை அணிக்காக மேலும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனியின் நம்பரை ‘ரிடையர்’ செய்ய வேண்டும்… சபா கரீம் வேண்டுகோள்….!!

தோனியின் நம்பரை ‘ரிடையர்’ செய்ய வேண்டும் என்று விக்கெட் கீப்பர் சபா கரீம் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவரை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. இவர் கடந்த சில மாதங்ளுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்தார். மற்ற போட்டிகள் ஆனால் ஐபிஎல் போன்ற தொடர்களில் தொடர்ந்து விளையாடுவதாக தெரிவித்திருந்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் சரி, ஐபிஎல் போட்டிகளிலும் இவரது ஜெர்சி நம்பர் 7. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ்-ஆஸ்திரேலியா …. முதல் டி20 போட்டி …. நாளை தொடங்குகிறது …!!!

வெஸ்ட் இண்டீஸ்-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை தொடங்குகிறது . வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 டி20  மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த இரு அணிகள் மோதிக்கொள்ளும் முதல் டி 20 போட்டி நாளை தொடங்குகிறது. இதில் ஆஸ்திரேலியா அணியின்  மிட்செல் மார்ஷ், டேனி கிறிஸ்டியன், அலெக்ஸ் கேரி, ஜோஷ் பிலிப், ஆஸ்டன் அகர், ஹென்ரிக்ஸ் ஆகிய வீரர்கள் உள்ளனர் . சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கை அணி பேட்டிங் பயிற்சியாளர் …. கிரான்ட் பிளவருக்கு கொரோனா தொற்று உறுதி ….!!!

இலங்கை அணி பேட்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று உறுதியானது . இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி தற்போது தாயகம் திரும்பி உள்ளது. இந்நிலையில் அணி வீரர்கள் ,பயிற்சியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் அணியின் பேட்டிங் பயிற்சியாளரான கிரான்ட் பிளவருக்கு கொரோனா தொற்று  இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனிடையே இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி வருகின்ற 13 ஆம் தேதி கொழும்புவில் நடைபெற உள்ள நிலையில் […]

Categories
கால் பந்து விளையாட்டு

அடேங்கப்பா! ஒரு டிக்கெட்டின் விலை ரூ.15 லட்சம்…!!!

யூரோ கால்பந்து போட்டியில் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் டென்மார்க்கை இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதற்கான இறுதி ஆட்டம் இங்கிலாந்தில் லண்டன் நகரில் உள்ள வெம்பிலி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில் இத்தாலி- இங்கிலாந்து அணிகள் மோதுகின்ற யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் ஜூலை 12ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து இந்த போட்டிக்கான டிக்கெட் ரூ.15 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் : வீரர்களை ஊக்கப்படுத்தும் பிரதமர் மோடி …. 13-ஆம் தேதி கலந்துரையாடல்…!!!

 ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள  இந்திய சார்பில் 120-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற       23-ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா சார்பில் 120-க்கும் மேற்பட்ட வீரர் ,வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய வீரர்,வீராங்கனைகளுடன் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் : ஆஷ்லி பார்ட்டி , பிளிஸ்கோவா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் …!!!

 விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில்  ஆஷ்லி பார்ட்டி, கரோலின பிளிஸ்கோவா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்  . விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன்  வீராங்கனையான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லி பார்ட்டி,  ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பரை  எதிர்கொண்டார். இதில் 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்கில் ஆஷ்லி பார்ட்டி வெற்றி பெற்று  இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதைத் தொடர்ந்து நடந்த மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENG VS PAK : மலான்,ஜாக் கிராலி அசத்தல் …. 9 விக்கெட் வித்தியாசத்தில்…. இங்கிலாந்து அபார வெற்றி ….!!!

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான  முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி  முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் குவித்தது. […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : 55 வருடங்களுக்கு பிறகு சாதனை ….! இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இங்கிலாந்து…!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் டென்மார்கை வீழ்த்தி இங்கிலாந்துஅணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. யூரோ கோப்பை கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இதில் லண்டனில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள  இத்தாலி அணி ஸ்பெயின் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. இந்நிலையில் இன்று  நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – டென்மார்க் அணிகள் மோதிக்கொண்டது. தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் அதிரடி ஆட்டத்தை காட்டியதால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL தொடர்: அட்டவணை வெளியீடு….!!!

கொரோனா காரணமாக கடந்த வருடம் அனைத்து போட்டிகளும் ரத்து செய்யப்பட்டன. அந்த வகையில் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடர் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வருடமும் கொரோனா அதிகளவில் பரவி வந்தாலும் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக ஓரளவிற்கு சற்று குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ரத்து செய்யப்பட்ட டிஎன்பிஎல் தொடர் இந்த வருடம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான அட்டவணை வெளியாகியுள்ளது. ஜூலை 19ஆம் தேதி போட்டி தொடங்குகிறது. முதல் போட்டியில் […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

BREAKING: CSK-வில் தோனி – சற்றுமுன் அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

மகேந்திரசிங் தோனி ஐபிஎல் போட்டியில் சென்னையில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்வார் என்று சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்,  தோனி விளையாட தகுதியுடன் இருப்பதாகவும், அவரை அணியில் இருந்து விடுவிக்க காரணம் ஒன்றும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.  இதனால் தோனி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆரம்பமாகும் டிஎன்பிஎல் கிரிக்கெட் திருவிழா ….! 19-ஆம் தேதி தொடங்குகிறது ….!!!

5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 போட்டி (டிஎன்பிஎல்) வருகின்ற 19-ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 போட்டி (டிஎன்பிஎல்) வருகிற 19-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கும்  இந்த போட்டி சேலம் ,கோவை ,திண்டுக்கல் மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்தப் போட்டி முழுமையாக சென்னை சேப்பாக்கம்  எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடத்த முடிவு […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட் விளையாட்டு

புதிய இங்கிலாந்து அணி அறிவிப்பு.. கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் களமிறங்குகிறார்..!!

இங்கிலாந்தின் வீரர்கள் மூவருக்கும், அணி நிர்வாகிகள் நான்கு பேருக்கும் கொரோனா ஏற்பட்டதால் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புதிய இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் அணியானது, இங்கிலாந்தில் ஒருநாள் போட்டி 3 மற்றும் டி20 போட்டிகள் உடைய தொடர்களில் ஆடுகிறது. எனவே அங்கு தனிமைப்படுத்துதலுக்கு பின்பு தற்போது பாகிஸ்தான் அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டுள்ளது. அப்போது போட்டிக்கு முன்பாக வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், இங்கிலாந்து வீரர்கள் மூவருக்கும், நிர்வாகிகள் 4 பேருக்கும் கொரோனா இருந்தது […]

Categories
விளையாட்டு ஹாக்கி

BREAKING: மிகப் பிரபல இந்திய விளையாட்டு வீரர் காலமானார்… சோகம்…!!!

இரண்டு ஒலிம்பிக் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் லெஜண்ட் என்று அழைக்கப்படும் கேசவ் தத் காலமானார். உலக ஹாக்கியில் இந்திய அணிக்காக மிகவும் அருமையாக விளையாடி இரண்டு தங்கப் பதக்கங்களை வாங்கி கொடுத்த லெஜெண்ட் ஆன முன்னாள் ஹாக்கி வீரர் கேசவ் சந்திர தத் காலமானார். இவருக்கு வயது 92. வயது முதிர்ச்சி காரணமாக கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் அதிகாலை 12.30 மணியளவில் உயிரிழந்தார். இவர் ஆடிய பத்து ஆண்டுகளில் இவர் தலைமையில் ஆடிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிறந்தநாள் அன்று தோனியுடன் மோதல்… பரபரப்பு…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் உலகின் நாயகனான மகேந்திர சிங் தோனிக்கு இன்று பிறந்தநாள். டோனியின் பிறந்தநாளான இன்று அவரின் புகைப்படங்கள் மற்றும் வாசகங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 2011இல் உலகக் கோப்பையை வென்றது உள்ளிட்ட அவரது சாதனைகள் குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இப்படியான நிலையில் உலகக்கோப்பையை வென்றதற்கு தோனி காரணம் அல்ல என்று தொடர்ந்து கூறிவரும் காம்பீர் இன்று தோனி பிறந்தநாள் அன்று தனது பேஸ்புக் கவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி மகளிர் கிரிக்கெட் தரவரிசை …. மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்தில் மிதாலி ராஜ்….!!!

ஐசிசி மகளிர் ஒருநாள் தொடருக்கான பேட்டிங்  தரவரிசை பட்டியலில் மிதாலி ராஜ் மீண்டும்   ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ளார் . ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்டிங்  தரவரிசை பட்டியலில் இந்திய மகளிர் அணியின் கேப்டனான  மிதாலி ராஜ் 562 புள்ளிகள் எடுத்து மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ளார் .சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக மூன்று அரை சதங்கள் (72, 59, 75 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணி வீரர்களுக்கு …. 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி ….!!!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய  அணி வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்தப்பட உள்ளது . இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி தொடங்குகிறது. இதற்கு […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : பெனால்டி ‘ஷூட் அவுட்டில்’ இத்தாலி அணி வெற்றி …!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இத்தாலி , ஸ்பெயின் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது .  16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி(யூரோ)விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.  இதில் இந்திய நேரப்படி லண்டனில் இன்று அதிகாலையில் நடந்த அரையிறுதி சுற்றில்  தரவரிசை பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கும் இத்தாலியும், 6-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் அணியும் மோதிக்கொண்டது. இதில் போட்டியின்  தொடக்கத்திலிருந்தே விறுவிறுப்பாக நடந்த முதல் பாதியில்  ஆட்டத்தில் இரு அணிகளும் […]

Categories
விளையாட்டு

40-வது பிறந்தநாளில் 40 அடியில் கட்அவுட்…. தெறிக்கவிடும் தோனி ரசிகர்கள்….!!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பிறந்தநாளை ரசிகர்கள் பலரும் இன்று கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் முக்கிய பிரபலங்கள் அனைவரும் காலை முதலே தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இந்நிலையில் தோனியின் 40வது பிறந்தநாளை குறிப்பிடும் வகையில் சென்னை அருகே உள்ள சாத்தங்குப்பத்தை சேர்ந்த ரசிகர்கள் 40 அடியில் கட்அவுட் வைத்துள்ளனர். அதில் கேப்டனாக தோனி எந்தெந்த ஆண்டில் எந்த கோப்பைகளை வென்றார் என்பதை குறிப்பிட்டுள்ளனர்.

Categories

Tech |