3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது பாகிஸ்தான் அணி. முதலில் ஒருநாள் தொடரும், பின்னர் டி20 தொடரும் நடக்கவுள்ளது. வரும் 8ம் தேதி முதல் ஒருநாள் போட்டி நடக்கவுள்ள நிலையில், இங்கிலாந்து அணியை சேர்ந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 3 வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தை சேர்ந்த 4 பேர் என மொத்தம் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதன் விளைவாக ஒயின் மோர்கன் தலைமையிலான […]
Category: விளையாட்டு
இங்கிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையேயான 5 நாள் கொண்ட தொடர் போட்டியை காண்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று வெளியிட்டார். இந்தியா- இங்கிலாந்து ஐந்தாவது ஒருநாள் போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தப் போட்டியானது டிரன்ட்பிரிட்ஜ் என்ற பகுதியில் நடக்க உள்ளது. இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளதாவது: விளையாட்டுப்போட்டிகள், உள்அரங்குகள், மைதானங்கள் போன்றவற்றில் ரசிகர்கள் அமர்ந்து பார்ப்பதற்கான கட்டுப்பாடுகள் […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ். தோனி அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் பல உலக சாதனைகளை படைத்துள்ளார். இதில் இவருடைய சிறந்த ‘டாப் 3’ சாதனைகளை தற்போது பார்க்கலாம். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி ஒரு வீரனாகவும் , சிறந்த கேப்டனாகவும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.இன்றளவும் இவருடைய சில சாதனைகள் யாராலும் முறியடிக்கப்படாமல் உள்ளது.ஒரு கேப்டனாக களத்தில் இருக்கும் போது அதன் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சரியான முடிவுகளை எடுத்து அணியை வெற்றி பாதைக்கு வழி வகுத்துள்ளார். […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் உலகின் நாயகனான மகேந்திர சிங் தோனிக்கு இன்று பிறந்தநாள். 1981 ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி ராஞ்சி ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பம். தனது பொழுதுபோக்குகள் அனைத்தையும் சாலை ஓரம் நண்பர்களோடு விளையாடுவதில் கழித்தவர். இளம் வயதிலிருந்து இவருக்கு கால்பந்து மற்றும் பேட்மிட்டன் மிகவும் பிடித்த விளையாட்டு. கால்பந்து அணியின் கோல் கீப்பராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய தோனி, ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் […]
பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் போட்டி வருகிற 8-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இங்கிலாந்து அணியில் 7 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது . இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வருகிற 8ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் அணியின் வீரர்கள் 3 பேர் , நிர்வாக […]
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், ஆஷ்லி பார்ட்டி இருவரும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர் . விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது . இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிக், 20- வது நிலையில் இருக்கும் சிலி வீரர் கிறிஸ்டியன் காரினை எதிர்கொண்டார். இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கத்தை செலுத்திய ஜோகோவிச் கிறிஸ்டியன் காரினை வீழ்த்தி 6-2, 6-4, […]
மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் நிச்சயம் விளையாடுவேன் என்று ஷ்ரேயாஸ் அய்யர் கூறியுள்ளார் . ஐபிஎல் 2021 சீசனுக்கான போட்டி கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்று வந்தது. இந்த போட்டிக்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் இடம்பெற்றிருந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனான ஷ்ரேயாஸ் அய்யருக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் காரணமாக 14-வது ஐபிஎல் சீசனில் ஷ்ரேயாஸ் அய்யர் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது. […]
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் இந்தியாவிற்காக பல சாதனைகள் செய்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தார். இவர் ஓய்வு அறிவித்தது இவரது ரசிகர்களை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியது. தோனி தலைமையிலான இந்திய அணி பல சாதனைகளை செய்துள்ளது. இவரைப் பற்றி பல வீரர்களும் புகழ்ந்து கூறுவது உண்டு. அந்த வகையில் இந்திய […]
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்று தந்த கேப்டன் என்ற உலக சாதனையை மிதாலி ராஜ் பெறுகிறார். இதையடுத்து இவருக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்துக்கு எதிராக தான் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்று தந்த கேப்டன் என்ற உலக சாதனையை மிதாலி ராஜ் படைத்துள்ளார். மிதாலி ராஜ் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பதவியேற்றதிலிருந்து […]
இந்த ஆண்டு இறுதியில் ஐபிஎல் மெகா ஏலத்தை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் 4 வீரர்கள் வரை தக்க வைத்துக்கொள்ளலாம். அதில் 3 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் அல்லது 2 இந்திய வீரர்கள் மற்றும் 2 வெளிநாட்டு வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம். அதேபோல ஒவ்வொரு அணியின் மொத்த வீரர்களின் சம்பளத் தொகை ரூ.90 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இப்போதைக்கு புதிய அணிகளை வாங்க […]
பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் ட்விட்டர் பதிவிற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர் . உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பாஜக கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதில் மொத்தமாக 75 தலைவர் பதவிகளில் 67 இடங்களை பாஜக கட்சி கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர். அந்த வகையில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் ட்விட்டர் பக்கத்தில் […]
விம்பிள்டன் டென்னிசில் கலப்பு இரட்டையருக்கான பிரிவில் இந்திய ஜோடி சானியா, போபண்ணா வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு தகுதி பெற்றனர் . விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது . இதில் கலப்பு இரட்டையருக்கான பிரிவு ஆட்டத்தில் இந்தியாவை சேர்ந்த சானியா மிர்சா – ரோகன் போபண்ணா ஜோடி, பிரிட்டனை சேர்ந்த எமிலி வெப்லி – ஸ்மித் ஹைடன் மெக்ஹக் ஜோடியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் இந்திய […]
இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கிடையிலான 3-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கிடையேயான 3-வது ஒருநாள் போட்டி லண்டனில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் இலங்கை அணி பேட்டிங்கில் களமிறங்கியது . ஆனால் 41.1 […]
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனைஆஷ்லி பார்ட்டி, ரஷ்யாவின் மெட்வதேவ் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர் . விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி, செக் குடியரசு வீராங்கனையான சினி கோவாவை எதிர்கொண்டார். இதில் 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஆஷ்லி பார்ட்டி வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இதையடுத்து ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் […]
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய வீரர்,வீராங்கனைகள் வருகின்ற 14-ஆம் தேதி டோக்கியோ செல்கின்றனர் . உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற 23-ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணி சார்பில் 63 வீரர்கள், 52 வீராங்கனைகள் என மொத்தமாக 115 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்தப் போட்டியில் குத்துச்சண்டை, பேட்மிட்டன் ,ஜூடோ […]
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் செக்குடியரசு அணியை வீழ்த்தி டென்மார்க் அணி அரைஇறுதிக்குள் நுழைந்தது . யூரோ கோப்பை கால்பந்து தொடரில் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நேற்று நடைபெற்ற 3-வது கால்இறுதி ஆட்டத்தில் டென்மார்க் , செக் குடியரசு அணிகள் மோதிக்கொண்டன. இதில் தொடக்கத்திலிருந்தே போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் முதல் பாதி ஆட்டத்தில் 5-வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் தாமஸ் டெலானி தலையால் முட்டி கோலாக்கினார் . இதையடுத்து […]
இந்த ஆண்டு தொடங்க உள்ள ரஞ்சிக் கோப்பை தொடரானது வருகிற நவம்பர் 16-ஆம் தேதி முதல் தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது . 2021 2022- ம் ஆண்டுக்கான உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 லீக் தொடர் அக்டோபர் 20-ஆம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையடுத்து ரஞ்சி கோப்பைக்கான தொடர் நவம்பர் 16-ஆம் […]
இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில் முதல் 2 ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. ஆனால் ஆட்டத்தில் மழை காரணமாக 47 ஓவராக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற […]
ஒருநாள் போட்டியில் அதிக தோல்விகளை பெற்ற அணி என்ற பெருமையை இலங்கை அணி பெறுகின்றது. இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்தது. இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தோல்விகளை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை இலங்கை அணி பெற்றுள்ளது. இதுவரை 860 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி 428 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. தோல்விகளின் பட்டியலில் இலங்கை அணி முதல் இடத்தை பிடிக்கின்றது. இதைத் தொடர்ந்து […]
ஆண்ட்டிகுவாவில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 2வது டி20 சர்வதேச போட்டியின் போது மே.இ.தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணியின் சினெல் ஹென்றி மற்றும் செடியன் நேஷன் என்ற இரு வீராங்கனைகள் அடுத்தடுத்து மைதானத்திலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முதலில் சினெல் ஹென்றி மயங்கி விழ அவரை ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் சென்றனர். 10 நிமிடங்களுக்குப் பிறகு செடியன் நேஷன் என்ற வீராங்கனையும் மயங்கி விழுந்தார், இவரையும் ஸ்ட்ரெச்சரில் கொண்டு சென்றனர். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இப்போது உடல் நிலை […]
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது . யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்ட்கில் நடந்த முதல் காலிறுதி போட்டியில் ஸ்பெயின் – சுவிட்சர்லாந்து அணிகள் மோதிக் கொண்டன .இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஸ்பெயின் அணி வீரர் ஜார்டி ஆல்பா 8-வது நிமிடத்தில் கோல் அடிக்க , அந்தப் பந்து சுவிட்சர்லாந்து வீரர் டெனிஸ் ஜகாரியாவின் […]
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் வெற்றி பெற்று 4 -வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் . லண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது . இதில் 19 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவரும் உலகின் முதல் நிலை வீரருமான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச், அமெரிக்க வீரர் டெனிஸ் குட்லாவை தோற்கடித்து , 6-4, 6-3, 7-6 (9-7) என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு […]
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இத்தாலி வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது . 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் (யூரோ ) கடந்த மாதம் 11-ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி நள்ளிரவில் முனிச் நகரில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் – இத்தாலி அணிகள் மோதிக்கொண்டது.இதில் முதல் பாதி ஆட்டத்தில் இத்தாலி 2 கோல் அடித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பெல்ஜியம் அணி 47- […]
விம்பிள்டன் டென்னிஸ் கலப்பு இரட்டையருக்கான முதல் சுற்றில் இந்திய ஜோடி போபண்ணா, சானியா ஜோடி அபார வெற்றி பெற்றது . ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் கலப்பு இரட்டையருக்கான பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவை சேர்ந்த ரோகன் போபண்ணா, சானியா மிர்சா ஜோடி சக இந்திய ஜோடியான ராம்குமார் , அங்கீதா ரெய்னாவுடன் மோதியது. இதில் குறிப்பாக கடந்த 1968-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இரு […]
டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ள முதல் இந்திய நீச்சல் வீராங்கனை என்ற சிறப்பை மானா படேல் பெற்றுள்ளார். கொரோனா தொற்றால் பாதிப்பால் ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகிற ஜூலை 23 -ம் தேதி முதல் நடைபெற உள்ளது .இதில் இந்தியா சார்பில் 3-வது நீச்சல் வீரராக மானா படேல் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் இவர் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த 60 வது தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் 100 […]
லண்டன் நகரில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் . லண்டன் நகரில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நேற்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்றில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்த சுவிட்சர்லாந்து வீரரான ரோஜர் பெடரர் , பிரான்ஸ் நாட்டு வீரரான காஸ்குட்டுடன் மோதி ,7-6, 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற பெடரர், 3-வது […]
இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது . இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது . இதில் இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது ஒருநாள் போட்டி லண்டனில் நேற்று நடந்தது . இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் இலங்கை அணி பேட்டிங்கில் களமிறங்கியது. இறுதியாக 50 ஓவர் முடிவில் […]
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது . வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தென் ஆப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்டி நேற்று செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் வெஸ்ட் இண்டியன்ஸ் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. இறுதியாக 20 ஓவர் முடிவில் 6 […]
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் களமிறங்கிய சானியா மிர்சா வெற்றியோடு தனது போட்டியை துவங்கியுள்ளார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா போட்டியிடுகிறார். இதில் முதல் போட்டியிலேயே இவர் வெற்றி பெற்றுள்ளார். இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் சாண்டர்ஸ்ஸோடு இணைந்து களமிறங்கிய சானியா மிர்சா, அலெக்சா மற்றும் டசிரே கிராவ்செக் அணியை 7-5. 6-3 என்ற இரண்டு செட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளார். கடைசியாக 2017 ஆம் ஆண்டு ஆடிய சானியா மிர்சாவிற்கு ரசிகர்கள் பலத்த […]
5-வது டிஎன்பிஎல் டி20 போட்டி ஜூலை 19ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை போட்டியை நடத்த உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் கொரோனா தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் ஜூலை 19ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை போட்டியை நடத்த இருப்பதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது .இந்த போட்டியை நடத்த தமிழக அரசின் அனுமதியை பெற்று போட்டி நடத்தப்படும் என்றும் […]
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் மீண்டும் நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறினார் . ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் ஸ்மித்தை பின்னுக்குத் தள்ளி நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் 901 புள்ளிகளை எடுத்து மீண்டும் முதல் இடத்தை கைப்பற்றினார் . இதையடுத்து 2 வது இடத்தில் 891 புள்ளிகளுடன் ஸ்மித் […]
சஜன் பிரகாஷை தொடர்ந்து 2 வது இந்திய நீச்சல் வீரராக ஸ்ரீஹரி நடராஜன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் . இத்தாலியில் தலைநகர் ரோமில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்று சர்வதேச நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் பந்தயத்தில் இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜன் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் 53.77 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய தேசிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் அவர் ஒலிம்பிக் […]
காயத்தால் மன்னாரினோ விலகியதால் ,ரோஜர் பெடரர் 2 வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார். விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் உலகின் 6ம் நிலை வீரரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவருமான சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் முதல் சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் நாட்டு வீரரான அட்ரியன் மனாரினோவுடன் மோதினர் . இதில் இருவரும் தலா 2 செட்டுகளை கைப்பற்றி இருந்தனர். இதில் வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டில் வீரர் […]
கடந்த 1966 ஆம் ஆண்டிற்கு பிறகு இங்கிலாந்து அணி நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது . யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று லண்டனில் நடைபெற்ற 2 வது சுற்றில் முன்னாள் சாம்பியனான ஜெர்மனி இங்கிலாந்துடன் மோதியது. இதில் இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் 2 வது பாதி ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் இங்கிலாந்து அணி அதிரடி ஆட்டத்தை காட்டியது. இதில் 75 வது […]
ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருதுக்கு தமிழக வீரர் அஸ்வின், மிதாலி ராஜ் பெயர்களை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது . விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு மத்திய அரசு சார்பில் ராஜீவ்காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா ,துரோணாச்சார்யா விருதுகள் வழங்கப்படுகிறது .அதன்படி இந்த ஆண்டுக்கான ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான அஸ்வின் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து இந்திய மகளிர் அணியில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியின் கேப்டன் மிதாலி ராஜ் […]
இந்திய அணியின் போட்டி அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக டி20 உலகக் கோப்பையை முதலில் இந்தியாவில் நடத்துவதற்கு ஐசிசி முடிவு செய்திருந்தது. அதன்படி, 7 -வது டி20 உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர் , நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டே இருப்பதால், இந்த உலகக் கோப்பை t20 ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் […]
இலங்கை- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் இலங்கை அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. அதன்படி 42.3 ஓவர்களில் இலங்கை அணி […]
முதல் சுற்றில் ஏற்பட்ட காயம் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இருந்து செரீனா வில்லியம்ஸ் வெளியேறினார் . கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்பட்டது . இந்த நிலையில் இந்த ஆண்டு தொடங்கியுள்ள விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.இதில் பங்கு பெறும் வீரர் வீராங்கனைகள் அனைவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப்போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் […]
அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை டி20 உலக கோப்பை போட்டி நடைபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக டி20 உலகக் கோப்பையை முதலில் இந்தியாவில் நடத்துவதற்கு ஐசிசி முடிவு செய்திருந்தது. அதன்படி, 7 -வது டி20 உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர் , நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டே இருப்பதால், இந்த உலகக் […]
டி20 உலக கோப்பை போட்டி அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது . 7 -வது டி20 உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர் , நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகத்தை ஐசிசி தேர்வு செய்துள்ளது. இந்த உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்தியாவில் […]
ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியலில் இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் டாப் 5 இடத்திற்குள் நுழைந்துள்ளார். இந்திய பெண்கள் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இந்நிலையில் இந்தியா – இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கிடையேயான 3 ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பிரிஸ்டலில் நடந்த முதல் நாள் ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் மிதாலி ராஜ் அதிரடி காட்டினார். அவர் 108 பந்துகளில் 7 பவுண்டரிகள் அடித்து 72 […]
விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் தரவரிசையில் 4-ம் நிலை வீரரான கிரீசை சேர்ந்த சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார் . விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 4-ம் நிலை வீரரான கிரீசை சேர்ந்த சிட்சிபாஸ், அமெரிக்க வீரர் பிரான்சிஸ் டியாபோவிடம் மோதினர் .இதில் 4-6, 4-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சிஸ் வெற்றி பெற்று , சிட்சிபாஸ்க்கு அதிர்ச்சி தோல்வியளித்தார். இதையடுத்து பெண்களுக்கான ஒற்றையர் […]
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரைபிள் வீராங்கனை கோனிகா லயாக் தான் மாநில அளவில் தங்கம் வென்ற போதும் தன்னிடம் சொந்தமான வாய்ப்பில்லை என்று கடந்த ஜனவரி மாதம் டுவிட் செய்திருந்தார். இதை பார்த்த நடிகர் சோனு சூட் ரைபிள் வாங்க தேவையான பணத்தை தான் தருவதாக உறுதி அளித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 26ஆம் தேதி 3 லட்சம் மதிப்பிலான ரைபிள் ஒன்றை வீராங்கனைக்கு சோனு சூட் பரிசளித்துள்ளார். இதனால் ரைபிள் வீராங்கனை கோனிகா லயாக் […]
இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி நேற்று தனி விமானம் மூலமாக இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருப்பதால், இலங்கை தொடருக்கான இந்திய அணியில் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த இலங்கைத் தொடரில் இடம்பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் மும்பையில் […]
விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் முதல் சுற்றில் வெற்றி பெற்றார் . ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று போட்டியில் உலகில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிச் , இங்கிலாந்து வீரரான ஜேக் டிராப்பரை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் டிராப்பர் கைப்பற்றினார்.இதையடுத்து அதிரடி […]
2021 ஆம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற அக்டோபர் – நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.இந்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரியம் ஐசிசி-யிடம் இன்று தெரிவித்துள்ளது. இதனை […]
குரோஷியாவின் ஓசிஜெக்கலில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை ராகி சரனோபாத் தங்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள 15 இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர், வீராங்கனைகளில் சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா, மானு பாகெர், இளவேனில், அஞ்சும் மோட்ஜில், ராஹி சர்னோபாத் உள்ளிட்ட 13 பேர் மற்றும் 7 பயிற்சியாளர்கள், 6 உதவி ஊழியர்கள் ஆகியோர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கடந்த மே 12ம் தேதி […]
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த ஆண்டு டி20 உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடக்கவிருந்த நிலையில், கொரோனா காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐசிசி வெளியிடும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் செக் குடியரசு, பெல்ஜியம் அணிகள் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறியது . யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று 2-வது சுற்று ஆட்டத்தில் செக் குடியரசு – நெதர்லாந்து அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டி புடாபெஸ்ட் நகரில் நடைபெற்றது .இதில் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.ஆனால் 2-வது பாதி ஆட்டத்தில் செக் குடியரசு வீரர் தாமஸ் ஹோல்ஸ் 68-வது நிமிடத்தில் ஒரு கோலை அடிக்க , இவரை […]
இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி பிரிஸ்டலில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மந்தனா 10 ரன்களிலும் , ஷபாலி 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகளை இழக்க மறுபுறம் கேப்டன் மிதாலி ராஜ் நிலைத்து […]