Categories
டென்னிஸ் விளையாட்டு

டென்னிஸ் பயிற்சியாளர் நிக் பொல்லெட்டிரி மரணம்…. சோகம்…!!!!

அகாசி, ஷரபோவா, செரீனா மற்றும் வீனஸ் போன்ற பிரபல வீரர்களுக்கு பயிற்சி அளித்த பழம்பெரும் டென்னிஸ் பயிற்சியாளர் நிக் பொல்லெட்டிரி(91) வயது மூப்பால் காலமானார். 1978ல் ஐஎம்ஜி அகாடமியை தொடங்கியவர் நூற்றுக்கணக்கனோருக்கு பயிற்சியளித்தார். ஒரு காலத்தில் இவரது பயிற்சிக்கு கீழ் வந்தவர்கள் டாப் 10 வீரர்களாகவும் மிளிர்ந்தனர். சர்வதேச டென்னிஸ் அமைப்பு மற்றும் வீரர்கள் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
கிரிக்கெட் டென்னிஸ் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சோயிப் மாலிக்குடன் விவாகரத்தா?…. “உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன”…. சானியாவின் அதிர்ச்சி பதிவு..!!

சோயிப் மாலிக்குடன் விவாகரத்து செய்யப்போவதாக எழுந்துள்ள வதந்திக்கு மத்தியில் “உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன” என்று சானியா மிர்சா பதிவிட்டுள்ளார்.. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் என்பவரை இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா என்பவர் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியர்களுக்கு 4 வயதில் இஷான் என்ற மகன் இருக்கிறான். இந்த நிலையில் இந்த நட்சத்திர தம்பதிகள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

“சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி” இரட்டையர் பிரிவில் கனடா, பிரேசில் ஜோடி சாம்பியன் பட்டம்….!!!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவில் கனடாவை சேர்ந்த கேப்ரியல்லா டாப்ரோஸ்கி மற்றும் பிரேசிலைச் சேர்ந்த லுசா ஸ்டெபானி ஜோடி, ஜார்ஜியாவின் நடிலா ஜலாமிட்ஸ் மற்றும் ரஷ்யாவின் அன்னா லின்கோவா ஜோடியுடன் மோதியது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய கேப்ரியல்லா டாப்ரோஸ்கி-லுசா ஸ்டெபானி ஜோடி 6-1,6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றனர்

Categories
டென்னிஸ் விளையாட்டு

BREAKING : பிரபல NO.1 வீரர் திடீர் ஓய்வு….. ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி….!!!!

நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற பெருமைக்கு உரியவர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர். ஓய்வு பற்றி பெடரர் கூறும்போது, “தற்போது எனக்கு 41 வயதாகிறது. 24 ஆண்டுகளில் 1,500 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளேன். நான் கனவு கண்டதை விட டென்னிஸ் என்னை பெருமையாக நடத்தியது. தற்போது ஓய்வுக்கான நேரத்தை நான் அடையாளம் காண வேண்டியுள்ளது” என்றார்.

Categories
டென்னிஸ் விளையாட்டு

BREAKING : ஓய்வை அறிவித்தார் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர்..!!

2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான இவர், கடந்த 3 ஆண்டுகளாக முழங்கால் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததால், இப்போது விலகுவதற்கான நேரம் இது என்று முடிவு செய்துள்ளார் ஃபெடரர்.. அடுத்த வாரம் லண்டனில் நடக்கும் லாவர் கோப்பையில் விளையாடுவார் ரோஜர் பெடரர். ஆஸ்திரேலியா, பிரெஞ்சு, விம்பிள்டன், அமெரிக்க ஓபனில் விளையாடியுள்ள பெடரர் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி…. பரபரப்பான தகுதி சுற்று….. சாய்‌ சமர்தி அதிர்ச்சி தோல்வி….!!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் எஸ்டிடிஏ டென்னிஸ் ஸ்டேடியம் அமைந்துள்ளது. இங்கு சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி வருகிற 12-ஆம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் ஆட்டங்கள் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த தகுதி சுற்றி ஆட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த 24 வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த தகுதி போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் 6 வீராங்கனைகள் வருகிற 12-ஆம் தேதி நடைபெறும் போட்டியில் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

அமெரிக்கன் ஓபன் டென்னிஸ்….. அரை இறுதிக்கு முன்னேறிய ஸ்வியாடெக், ஷபலென்கா….!!!!

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் கால் இறுதியில் அமெரிக்காவை சேர்ந்த 8-வது வரிசையில் உள்ள ஜெசிகா பெகுலாவிடம் மோதினார். இதில் இகா 6-3, 7-6 என்ற நேர்செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். நடப்பு பிரெஞ்சு ஓபன் சாம்பியனான அவர் முதல்முறையாக அமெரிக்க ஓபனில் அரை இறுதிக்கு தகுதி பெற்று உள்ளார். பெகுலா 4-வது […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

“என்னுடைய சகோதரி மட்டுமே காரணம்” அவள் இல்லை என்றால் நான் இல்லை…. கண்ணீருடன் செரினா உருக்கம்….!!!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 3-வது சுற்றில் ஆஸ்திரேலியா வீராங்கனை அஜ்லா உடன் மோதிய செரினா வில்லியம் அதிர்ச்சி தோல்வியடைந்து போட்டியை விட்டு வெளியேறினார். இந்த போட்டிக்கு பிறகு செரினா வில்லியம்ஸ் தான் டென்னிசிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவர் ஓய்வு பெறுவதாக அறிவித்தவுடன் மைதானத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்றனர். கடந்த 1995-ஆம் ஆண்டு தன்னுடைய 14 வயதில் டென்னிஸ் உலகில் கால் பதித்த செரினா வில்லியம்ஸ் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ்….. 4-வது சுற்றுக்கு முன்னேறிய ரபேல் நடால்…. கேஸ்குயிட் அதிர்ச்சி தோல்வி‌….!!!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியின் 3-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த உலகின் 2-ம் நிலை வீரரானா ரபேல் நடால் பிரான்ஸ் வீரர் ரிச்சர்ட் கேஸ்குயிட்டுடன் மோதினார். இதில் ரபேல் நடால் 6-0, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதனால் கேஸ்குயிட்டுடனான 18 ஆட்டத்திலும் ரபேல் நடால் வெற்றி பெற்றுள்ளார். இதேபோன்று ஸ்பெயின் வீரர் கார் லோஸ் அல்காரஸ் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

“பரபரப்பான ஆட்டம்” ஆண்டி முர்ரேவை வீழ்த்தினார் பெரேட்டனி….. 4-வது சுற்றுக்கு முன்னேறி அசத்தல்….!!!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஆண்கள் ஒற்றை ஏற்படுவதற்கான 3-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் பிரிட்டனைச் சேர்ந்த ஆண்டிமுர்ரே இத்தாலி நாட்டைச் சேர்ந்த மேட்டில் பெரேட்டினியுடன் மோதினார். பரபரப்பாக நடந்த 2 செட்களில் ஆண்டிமுர்ரே தோல்வி அடைந்தார். அதன்பின் 3-வது செட்டைஆண்டிமுர்ரே தனதாக்கினார். ஆனால் 4-வது செட்டில் பெரேட்டினி போட்டியை தன்வசப்படுத்தி வெற்றி பெற்றார். இந்த போட்டியில் பெரேட்டினி 6-4, 6-4, 6-7, 6-3 என்ற […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி…. உலகின் 5-ம் நிலை வீரர் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி….!!!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்றுகள் நடைபெற்றது. இந்த போட்டியில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் கொலம்பிய வீரர் காலனுடன் மோதினார். இந்த போட்டியில் உலகில் 5-ம் நிலை வீரரான சிட்சிபாஸ் 0-6, 1-6, 6-3,‌ 5-7 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து முதல் சுற்றில் இருந்து வெளியேறினார்.

Categories
டென்னிஸ் விளையாட்டு

சர்வதேச அளவிலான மகளிர் டென்னிஸ் போட்டி…. செப் 12 முதல் தொடக்கம்…. வெளியான அறிவிப்பு….!!!

சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த போட்டியை தொடர்ந்து தற்போது சர்வதேச அளவிலான மகளிர் டென்னிஸ் போட்டி சென்னையில் நடைபெற இருக்கிறது. கடந்த 21 வருடங்களாக ஏடிபி ஆண்கள் டென்னிஸ் போட்டி சென்னையில் நடைபெற்றது. அதன் பிறகு கடந்த 2018-ஆம் ஆண்டு புனேவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் சர்வதேச அளவிலான மகளிர் டென்னிஸ் போட்டி சென்னையில் முதன்முதலாக நுங்கம்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. இந்த டென்னிஸ் போட்டியை செஸ் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

“நான் என் தோழியை காதலிக்கிறேன்”….. பிரபல டென்னிஸ் வீராங்கனை அறிவிப்பு….. வைரலாகும் புகைப்படம்…..!!!

பிரபல டென்னிஸ் வீராங்கனை டாரியா தனது தோழியான நடாலியாவை காதலிப்பதாக வெளிப்படையாக அறிவித்துள்ளார். ரஷ்யாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை டாரியா. இவர் சமீபத்தில் நடந்து முடிந்த பிரஞ்சு ஓபன் தொடரில் அறையிறுதி போட்டி வரை முன்னேறினார். இந்நிலையில் தற்போது தனது தோழியான நடாலியாவை காதலிப்பதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஒரே பாலினத்தை சேர்ந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள பல நாடுகள் சட்டபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் சில நாடுகள் இதற்கு தடை வழங்கியுள்ளன. ரஷ்யாவில் ஒருபால் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ்….. சானியா மிர்சா ஜோடி தோல்வி…. வருத்தத்தில் ரசிகர்கள்….!!!

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற அறை இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் சானியா மிர்சா – மேட் பாவிக் ஜோடி, டெசிரே கிராசிக்- நீல் குப்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டு விளையாடியது. அப்போது சானியா மிர்சா- மேட்பாவிக் ஜோடி 6-4, 5-7, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
டென்னிஸ் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ்….. ஹாலெப், ரிபாகினா அரையிறுதிக்கு முனேற்றம்….!!!

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று காலிறுதி சுற்று நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவாவுடன் மோதினார். அப்போது ஹாலெப் 6-2, 6-4 என்ற நேர் செட்டுகளில் வென்று அரையிறுதிக்கு சென்றுள்ளார். மற்றொரு போட்டியில் கஜஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, ஆஸ்திரேலிய வீராங்கனை அஜிலா டாம்ஜனோவிக்குடன் 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று தகுதி பெற்றுள்ளார்.

Categories
டென்னிஸ் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி…. 4-வது சுற்றுக்கு முன்னேறிய ரபேல் நடா….!!!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் நாட்டு வீரர் ரபேல் நடாவும், இத்தாலி நாட்டை சேர்ந்த  செனேகோவும் மோதினர். இந்த போட்டியில் 6-1, 6-2, 6-4 என்ற கணக்கில் ரபேல் நடா வெற்றி பெற்று 4-வது சுற்று முன்னேறினார். இதனைடுத்து‌ ஆஸ்திரேலிய நாட்டின் வீரர் கிர்கியோஸ் மற்றும் கிரீஸ் நாட்டு வீரர் சிட்சிபாசும் மற்றொரு சுற்றில் மோதினர். இந்தப் போட்டியில் 6-7, 6-3, 7-6 என்ற […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

“விம்பிள்டன் டென்னிஸ் போட்டி” 4-வது சுற்றுக்கு முன்னேறிய அலிஸ் கார்னெட்… .ஸ்வியா டெக்கின் வெற்றிப் பயணம் முடிவு….!!!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிரான்ஸ் நாட்டின் வீராங்கனை அலிஸ் கார்னெட்  மற்றும் போலந்து நாட்டின் வீராங்கனை ஸ்வியாடெக் ஆகியோர் மோதினர். இந்த போட்டியில் அலிஸ் கார்னெட் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்நிலையில் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஸ்வியாடெக்  37 வெற்றிகள் பெற்றிருந்தார். மேலும் அலீஸ் கார்னெட் 4-வது சுறறுக்கு முன்னேறி உள்ளதால் ஸ்வியா டெக்கின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

Categories
டென்னிஸ் விளையாட்டு

நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை…. யாருமே எதிர்பாக்கல…. திடீரென எடுத்த முடிவு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

ஆஸ்திரேலியாவின் மிகவும் சிறந்த முன்னணி டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லே பார்டி. இவர்  மூன்று முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். அது மட்டுமில்லாமல் உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று அவர்   ஓய்வு அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது ‘‘டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவிக்கும் போது எனக்கு கடினமானதாகவும், உணர்ச்சிகள் நிறைந்ததாகவும் இருந்தது. இந்த செய்தியை எப்படி உங்களிடம் பகிர்ந்து கொள்வது என்பது தெரியவில்லை. […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

இண்டியன் வெல்ஸ் டென்னிஸ்…. இப்படி ஆகும்னு நெனச்சு கூட பாக்கல…. இறுதிப்போட்டியில் அதிர்ச்சி கொடுத்த நடால்….!!!

அமெரிக்காவின் இண்டியன் வெல்ஸ் நகரில் பி.என்.பி பாரிபஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 4ம் நிலையில் உள்ள ரபேல் நடால் மற்றும் டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் இறுதி ஆட்டத்தில் மோதினர். இந்நிலையில்  20 வது வரிசையில் உள்ள பிரிட்ஸ் ஒரே செட்டில் நடாலை வீழ்த்தி பட்டம் வென்றார். நடால் அரையிறுதி போட்டியில் 3 மணி நேரமாக சக நாட்டை சேர்ந்த அல்காரசை போராடி தோற்கடித்து வென்றார். ஆனால் இறுதி ஆட்டத்தில் எதிர்பாராவிதமாக தோல்வியடைந்ததோடு இந்த […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் : பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி ….!!!

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்தார். ஜெர்மன் ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தரநிலையில் பின்தங்கி உள்ள சீனாவை சேர்ந்த ஜாங் யி மேனை எதிர்கொண்டார்.இதில் முதல் செட்டை 14-21 என்ற கணக்கில் இழந்த சிந்து ,அடுத்த செட்டை  21-15 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதையடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் 3-வது செட்டை ஜாங் யி மேன்  14-21 என கைப்பற்றினார். இறுதியாக […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

கத்தார் ஓபன் டென்னிஸ் : சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வி ….!!!

கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி கத்தாரில் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது.  இதில் நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்றில் உலக தரவரிசையில் 76-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கரோலின் கார்சியா, டாப் 5 வீராங்கனைகளில் ஒருவரான  சிமோனா ஹாலெப் ஆகியோர் மோதினர்.இதில் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற கார்சியா அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Categories
டென்னிஸ் விளையாட்டு

ரியோ ஓபன் டென்னிஸ் : ஸ்பெயின் வீரர் அல்கராஸ் …. சாம்பியன் பட்டம் வென்றார்….!!!

ரியோ ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.இதில் ஸ்பெயினை சேர்ந்த கார்லோஸ் அல்கராஸ், அர்ஜெண்டினா வீரர் டியகோ ஸ்கெவெர்ட்ஸ்மேன் ஆகியோர் மோதினர். இதில்  6-4, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்ற கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார்.

Categories
டென்னிஸ் விளையாட்டு

ரியோ ஓபன் டென்னிஸ் :கார்லோஸ் அல்கராஸ் அசத்தல் வெற்றி …. இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம் ….!!!

ரியோ ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் மற்றும் இத்தாலி பேபியோ போக்னினி ஆகியோர் மோதினார். இதில் 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற கார்லோஸ் அல்கராஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதனிடையே இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினாவை சேர்ந்த  டியகோ ஸ்கெவெர்ட்ஸ்மேனுடன் ,கார்லோஸ் அல்கராஸ் இருவரும் மோதுகின்றன .

Categories
டென்னிஸ் விளையாட்டு

மகளிர்  கோப்பை டென்னிஸ் : தொடர்ச்சியாக 20 போட்டிகள் …. சாதனை படைத்த கொன்டாவெய்ட்….!!!

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மகளிர்  கோப்பை டென்னிஸ் தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது . இப்போட்டியில் எஸ்தோனியா நாட்டை சேர்ந்த அனெட் கொன்டாவெய்ட் சாம்பியன் பட்டம் வென்றார்.இதன்மூலம் 1990-ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ச்சியாக 20  உள் அரங்க போட்டிகளை வெல்லும் 6-வது வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், 26 வயதான அனெட் கொன்டாவெய்ட் (5-7, 7-6 (7/4), 7-5) என்ற செட் கணக்கில் கிரேக்க வீராங்கனை மரியா சக்காரியை வீழ்த்தி சாம்பியன் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

மராட்டிய ஓபன் டென்னிஸ்…. மகுடம் சூடிய இந்திய வீரர்கள்….!!!!

பலேவாடி ஸ்டேடியத்தில் நேற்று மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றது. அதில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் மற்றும் ரோகன் போபண்ணா ஆகியோர் ஆடவர் இரட்டையர் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய நாட்டின் ஜான் பேட்ரிக் ஸ்மித் மற்றும் லூக் சாவில்லே ஆகியோரை எதிர்த்து விளையாடினர். மேலும் ஒரு மணி நேரம் மற்றும் 45 நிமிடங்கள் இந்த இறுதிப்போட்டி நீடித்தது. அதில் இந்திய வீரர்கள் 7-6, 3-6, 6-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினர். இதன் மூலம் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

“நா இத சொல்லிருக்கவே கூடாது”…. அவரசப்பட்டுட்டேன்… வருத்தம் தெரிவித்த இந்திய டென்னிஸ் வீராங்கனை….!!!!

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, அமெரிக்காவை சேர்ந்த ராஜீவ் ராமுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபனில் கலப்பு இரட்டையர் பிரிவில் காலிறுதியில் களமிறங்கினார். அதில் சானியா மிர்சா தோல்வியை சந்தித்தார். ஏற்கனவே இந்த ஆண்டில் சானியா மிர்சா டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் தோல்விக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சானியா மிர்சா ( வயது 35 ), “தனது ஓய்வு முடிவை அவசர கதியில் அறிவித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். ஓய்வை பற்றி யோசிக்கவில்லை. அதற்காக […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் :ஜோகோவிச் விளையாடுவாரா …? பட்டியல் வெளியீடு ஒத்திவைப்பு ….!!!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகின்ற 17-ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகின்ற        17-ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இரண்டு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே ஆஸ்திரேலியாவில் அனுமதி அளிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ள நிலையில், நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் தடுப்பூசி செலுத்தாமல் சென்றுள்ளார். இதனால் ஜோகோவிசை மெல்போர்ன்  விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் அவருக்கு […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் :தரவரிசை பட்டியலில் …. ஜோகோவிச், ஆஷ்லி பார்ட்டி முதலிடம் …..!!!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் நோவக் ஜோகோவிச் மற்றும் ஆஷ்லி பார்ட்டி ஆகியோர் முதலிடத்தை பிடித்துள்ளனர். ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளுள் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற           17-ஆம் தேதி தொடங்குகிறது.இப்போட்டியில் பங்கேற்கும் வீரர் ,வீராங்கனைகள் 32 பேருக்கு தரவரிசை வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீரரான        ஜோகோவிச்-க்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜோகோவிக் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி ….. இன்று முதல் ஆரம்பம் ….!!!

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும்  இந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடங்குகிறது. இந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் இன்று முதல் தொடங்குகிறது. இத்தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீரர்-வீராங்கனைகளான பி.வி.சிந்து, சாய்னா நேவால், வீரர்கள் ஸ்ரீகாந்த், லக்‌ஷயா சென், சமீர் வர்மா, பிரனாய் உட்பட பலர் பங்கேற்றனர். அதோடு பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர்,வீராங்கனைகளும் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். மேலும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ரசிகர்கள் இப்போட்டி நடைபெறுகிறது.மேலும் ரூபாய் 3 கோடி பரிசு […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: இந்திய ஜோடி அசத்தல் வெற்றி …. சாம்பியன் பட்டம் வென்றது….!!!

சர்வதேச டென்னிஸ் தொடரில் நடந்த ஆடவர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ராம்குமார் ஜோடி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. சர்வதேச டென்னிஸ் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற  ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ராம்குமார் ஜோடி,  டாமிஸ்லாவ் பிர்கிச் -சான்டியாகோ கோன்ஸலேஸ் ஜோடியை எதிர்த்து மோதியது. இதில் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற இந்திய ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் இன்று […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

மெல்போர்ன் சம்மர் செட்: ரபெல் நடால் அசத்தல் வெற்றி …. இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் ….!!!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மெல்போர்ன் சம்மர் செட் டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால் இறுதிசுற்றுக்கு முன்னேறியுள்ளார். மெல்போர்ன் சம்மர் செட் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், பின்லாந்து வீரர் எமில் ரூசுவுவோரி ஆகியோர் மோதினர். இதில் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற நடால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதைதொடர்ந்து நடைபெறும் ஆட்டத்தில் அமெரிக்க வீரர் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

சர்வதேச டென்னிஸ் தொடர் : அரையிறுதியில் சானியா மிர்சா ஜோடி அதிர்ச்சி தோல்வி ….!!!

சர்வதேச டென்னிஸ் தொடரில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் சானியா ஜோடி  தோல்வியடைந்து. ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் தொடருக்கு முன்னோட்டமாக சர்வதேச டென்னிஸ் தொடர் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் இரட்டையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் இந்தியாவின் சானியா மிர்சா-உக்ரைனின் நாடியா கிச்னோக் ஜோடி ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி- ஸ்டோர்ம் சான்டெர்ஸ் ஜோடியை எதிர்த்து மோதியது . இதில் 1-6, 6-2, 8-10 என்ற செட் கணக்கில் சானியா மிர்சா ஜோடி தோல்வியடைந்தது. இப்போட்டி […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

சர்வதேச டென்னிஸ் தொடர் : சானியா மிர்சா ஜோடி அசத்தல் வெற்றி ….அரையிறுதிக்கு முன்னேற்றம் ….!!!

சர்வதேச டென்னிஸ் தொடரில் நடந்த மகளிர்  இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் வெற்றி பெற்ற சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடருக்கு முன்னோட்டமாக சர்வதேச டென்னிஸ் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் மகளிர்  இரட்டையர் பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா- உக்ரைனின் நாடியா கிச்னோக் ஜோடி, அமெரிக்காவின் ஷெல்பி ரோஜர்ஸ் -இங்கிலாந்தின் ஹீதர் வாட்சன் ஜோடியை எதிர்த்து மோதியது. இதில் 6-0, 1-6, 10-5  என்ற செட் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

நம்பர் 1 வீரர் ஜோகோவிச் விசா ரத்து ….! ஆஸ்திரேலிய அரசு அதிரடி நடவடிக்கை ….!!!

மருத்துவச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க ஜோகோவிச்தவறிவிட்டதால், அவருடைய விசா ரத்து செய்யப்பட்டதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகின்ற      17-ஆம் தேதி தொடங்குகிறது. இப்போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என போட்டி அமைப்பு குழுவினர் மற்றும் அந்நாட்டு அரசு அதிகாரிகளும் உத்தரவிட்டு இருந்தனர். இந்த நிலையில் செர்பியாவை சேர்ந்த நம்பர் 1 வீரர் ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

அடிலெய்ட் டென்னிஸ் தொடர் :100-ம் நிலை வீராங்கனையிடம் ….சபலென்கா அதிர்ச்சி தோல்வி ….!!!

அடிலெய்ட் டென்னிஸ் தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் முன்னணி வீராங்கனை சபலென்கா அதிர்ச்சி தோல்வியடைந்தார். ‘அடிலெய்ட் 2022 இண்டர்நேஷனல்’ டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள  அடிலெய்ட் நகரில் நடந்து வருகிறது. இப்போட்டி ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது .இதில் இன்று நடந்த போட்டியில் உலகின் 2-ம் நிலை வீராங்கனையான சபலென்கா, 100-வது இடத்தில் இருக்கும் சோல்வேனியா நாட்டைச் சேர்ந்த வீராங்கனை காஜா ஜுவான் உடன் மோதினார். இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே காஜா ஜுவான் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஏடிபி டென்னிஸ் போட்டி : ரஷ்ய வீரர் டேனியல் மெட்விடேவ் அதிர்ச்சி தோல்வி ….!!!

ஏடிபி டென்னிஸ் போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில் டேனியல் மெட்விடேவ் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகின்ற 17-ஆம் தேதி தொடங்குகிறது .இப்போட்டியில் முன்னணி டென்னிஸ் வீரர் , வீராங்கனைகள் பங்கேற்கின்றனர் .இப்போட்டி ஜனவரி 17-ஆம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகிறது .இந்நிலையில் இத்தொடருக்கு முன்பாக ஏடிபி  டென்னிஸ் போட்டி தற்போது நடந்து வருகிறது .இதில் முன்னணி வீரர்கள் தங்கள் நாட்டின் சக வீரர்களுடன் குழுவாக இணைந்து விளையாடி வருகின்றனர் . […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

“என்ன 250 வது முறையாக எனக்கு கொரோனா பாதிப்பா” ….? பிரபல டென்னிஸ் வீரர் ஆதங்கம் ….!!!

பிரபல டென்னிஸ் வீரர் பெனாய்ட் பைரேவுக்கு 250 வது முறையாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரஸ், ஒமைக்ரான் வைரஸ் என கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது.இதில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு வீரர், வீராங்கனைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக  பிக்பாஷ் தொடர், ஆஷஸ் டெஸ்ட் , ஜூனியர் உலக கோப்பை என பல்வேறு போட்டிகளில் வீரர் , வீராங்கனைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கொரோனா வைரஸ் எதிரொலி ….! ரஷ்ய டென்னிஸ் வீராங்கனைக்கு கொரோனா ….!!!

 ரஷ்யாவை சேர்ந்த  டென்னிஸ் வீராங்கனை அனஸ்தேசியா பாவ்லியுசென்கோவா-வுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற ஜனவரி மாதம் 17-ஆம் தேதி தொடங்குகிறது. இப்போட்டியில் முன்னணி நட்சத்திர வீரர் , வீராங்கனைகள் பங்கேற்கின்றனர் .இத்தொடர் தொடங்குவதற்கு குறுகிய நாட்களே உள்ள நிலையில் போட்டியில் பங்குபெறும் வீரர்கள் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் .இதில் ரஃபேல் நடால், டெனிஸ் ஷபோவலோவ், ஒன்ஸ் ஜபேயுர், ஆண்ட்ரே ரூப்லெவ் ஆகியோர் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் …. நட்சத்திர வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ….!!!

டென்னிஸ் நட்சத்திர வீரரான ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரே ரூப்லெவ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகின்ற ஜனவரி மாதம் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது .இத்தொடரில் உலகின் முன்னணி டென்னிஸ் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றன. இப்போட்டி ஜனவரி 17-ஆம் தேதி முதல் தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் இப்போட்டி தொடங்குவதற்கு குறுகிய நாட்களே உள்ள நிலையில் இத்தொடரில் பங்குபெறும் நட்சத்திர வீரர் , வீராங்கனைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

கொரோனாவிலிருந்து விரைவில் மீண்டு வருவேன்….டென்னிஸ் வீரர் ரபெல் நடால் நம்பிக்கை ….!!!

கொரோனா தொற்றிலிருந்து விரைவில் மீண்டு வருவேன் என டென்னிஸ் வீரர் ரபேல் நடால் தெரிவித்துள்ளார். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான ஸ்பெயினை சேர்ந்த ரபேல் நடால் கடந்த வாரம் அபுதாபியில் நடைபெற்ற உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டார். இந்நிலையில் போட்டி முடிந்து நாடு திரும்பிய அவருக்கு கொரோனா  தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது .இதனால் அவர் வீட்டில்  தனிமைப்படுத்தப் பட்டார். இதுகுறித்து ரஃபேல் நடால் தெரிவிக்கையில்,’ சில லேசான கொரோனா […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : கரோலின் முச்சோவா போட்டிலிருந்து விலகல் ….!!!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து வீராங்கனை  கரோலின் முச்சோவா விலகியுள்ளர் . ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மெல்போர்னில் நடைபெற உள்ளது. இப்போட்டி ஜனவரி 17-ஆம் தேதி முதல் தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது .இந்நிலையில் உலகத் தரவரிசையில் 32-வது இடத்தில் இருப்பவரும் செக்குடியரசு வீராங்கனையுமான கரோலின் முச்சோவா இப்போட்டியில் இருந்து விலகியுள்ளார். இவர் 2021-ம்  ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அரையிறுதி வரை சென்றுள்ளார் .இந்த […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

டென்னிஸ் நட்சத்திர வீரர் ரபெல் நடாலுக்கு ….கொரோனா தொற்று உறுதி ….!!!

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ரபெல் நடாலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள பிரபல டென்னிஸ் வீரர் ரபெல் நடாலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவர் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஆண்டு பல போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். இந்த நிலையில் காயத்தில் இருந்து குணமடைந்த அவர் கடந்த மாதம் அபுதாபியில் நடந்த உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் கலந்து கொண்டார். தொடரில் அரையிறுதி வரை […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

தென் ஆப்பிரிக்க சர்வதேச பேட்மிண்டன் : இந்திய வீரர் அமான் பரோக்…! சாம்பியன் பட்டம் வென்று அசத்தல் ….!!!

தென் ஆப்பிரிக்க சர்வதேச பேட்மிண்டன் தொடரில் நடந்த இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அமான் பரோக் சஞ்சய் சாம்பியன் பட்டம் வென்றார் . உலக பேட்மிட்டன் கூட்டமைப்பின் சார்பாக தென் ஆப்பிரிக்க சர்வதேச பேட்மிண்டன் போட்டி கடந்த வாரம் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இதில் இந்திய வீரர் அமான் பரோக் சஞ்சய் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார். இந்நிலையில் நடந்த இறுதிப்போட்டியில் தரவரிசையில் 300 -வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் அமான் பரோக் சஞ்சய், 2-ம் நிலை […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : கனடா வீராங்கனை பியான்கா திடீர் விலகல்….!!!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து  கனடா வீராங்கனை பியான்கா விலகியுள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகின்ற ஜனவரி 17-ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இப்போட்டி ஜனவரி 17-ஆம் தேதி முதல் தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் முன்னாள் அமெரிக்க ஓபன் சாம்பியனான கனடா வீராங்கனை  பியான்கா ஆன்ட்ரீஸ்கு இததொடரில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,” கொரோனா  தொற்று பாதிப்பு காரணமாக பல வாரங்கள் தனிமைப்படுத்துதல் இருப்பதால் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: குரேஷியாவை வீழ்த்தி …. சாம்பியன் பட்டம் வென்றது ரஷ்யா ….!!!

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற ரஷ்ய அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது . டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கடந்த மாதம் 25-ஆம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. போட்டியில் மொத்தம் 18 நாடுகள் பங்கு பெற்றன. இதில்மாட்ரிட்டில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ரஷ்யா – குரேசியா அணிகள் மோதின. இதில் 2-0 என்ற கணக்கில் குரேஷியாவை  வீழ்த்திய  ரஷ்ய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது . […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ்: இந்திய வீரர் ராம்குமார் …. சாம்பியன் பட்டம் வென்றார்….!!!

ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் இறுதிப் போட்டிகளில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் வெற்றி பெற்றுள்ளார் . ஏடிபி மனாமா சேலஞ்சர் டென்னிஸ் போட்டி பஹ்ரைனில்  தலைநகர் மனாமாவில்  நடைபெற்று வந்தது.இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன், ரஷ்ய வீரரான கார்லோவ்ஸ்கியை எதிர்த்து மோதினார் . இதில் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே  ராம்குமார் ஆதிக்கம் செலுத்தினார். இதில் முதல்  செட்டை 6-1 என்ற கணக்கில் வென்றார். இதையடுத்து 2-வது செட்டை  6-4  என்ற கணக்கில் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

உலக டேபிள் டென்னிஸ் :இந்திய வீராங்கனை மணிகா பத்ரா தோல்வி ….!!!

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடந்த கால் இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா தோல்வியடைந்தார். உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஹூஸ்டனில் நடைபெற்று வருகிறது .இதில் கலப்பு இரட்டையர் மற்றும் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை மணிக்கா பத்ரா பங்கேற்றார்.இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் மணிகா பத்ரா -ஜி.சத்தியன் ஜோடி கால் இறுதிச்சுற்றில் ஜப்பான் ஜோடியை எதிர்கொண்டனர். ஆனால் 1-3 என்ற செட் கணக்கில் பத்ரா -ஜி.சத்தியன் ஜோடி தோல்வி அடைந்தது […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

உலக ஆடவர் டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ….!!!

உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நடந்த இறுதிப் போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார் .  ஏ.பி.டி இறுதிச்சுற்று என அழைக்கப்படும் உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்று வந்தது .இதில் நேற்று நடந்த இறுதி போட்டியில் தரவரிசையில் 2-ம் நிலை வீரரான ரஷ்யாவை சேர்ந்த டேனில் மெட்விடேவு, 3-வது இடத்தில் உள்ள ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் மோதினர். இதில் 6-4, 6-4 […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

உலக ஆடவர் டென்னிஸ் :அரைஇறுதியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி….!!!

உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடந்த அரையிறுதி  ஆட்டத்தில் வெற்றி பெற்ற அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் . ஏ.டி.பி இறுதிச்சுற்று என அழைக்கப்படும் உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்று வருகிறது .இதில் நேற்று முன்தினம் நடந்த அரையிறுதி போட்டியில் நம்பர் 1 வீரரான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச், தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவை எதிர்த்து மோதினார். இதில் 7-6 (7-4), […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

உலக ஆடவர் டென்னிஸ் :அரைஇறுதியில் ஜோகோவிச்-ஸ்வெரெவ் மோதல் ….!!!

உலக ஆடவர் டென்னிஸ் போட்டியில் போலந்தை சேர்ந்த ஹர்காக்சை வீழ்த்திய  அலெக்சாண்டர் ஸ்வெரெவ் அரைஇறுதிக்கு முன்னேறி உள்ளார். ‘டாப் 8’ வீரர்கள் மட்டும்  பங்குபெறும் உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ‘கிரீன்’ பிரிவில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் காயமடைந்த கிரீஸ் நாட்டை சேர்ந்த சிட்சிபாசுக்கு பதிலாக இடம்பெற்ற இங்கிலாந்தை சேர்ந்த கேமரூன் நோரியும் ,நார்வே வீரரான  கேஸ்பர் ரூட்டும் மோதினர் . இதில் 6-1, […]

Categories

Tech |