Categories
உலக செய்திகள்

முன்னாள் போப் ஆண்டவர் 16-ம் பெனட்டிக் இன்று காலமானார்…!!!!!

கடந்த 2005 முதல் 2013 -ஆம் வருடம் வரை கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக இருந்தவர் 16-ம் பெனடிக்ட். இவர் கடந்த 2013 -ஆம் வருடம் போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகி உள்ளார். பின்னர் குரு மடத்தில் தங்கி ஓய்வெடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு வாடிகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக […]

Categories
உலக செய்திகள்

“பயங்கரவாதம் மூலம் இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த முடியாது”… மத்திய வெளியுறவு துறை அமைச்சர் பேச்சு…!!!!!!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சைப்ரஸ் நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “பயங்கரவாதத்தின் மூலமாக இந்தியாவை யாரும் பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த முடியாது. அதை நாம் ஏற்றுக் கொள்ளவும் முடியாது. அனைவருடனான உறவை சுமூகமான முறையில் பேணுவதற்கே இந்தியா விரும்புகிறது. ஆனால் அதற்காக சுமூகமான உறவு என்பதற்கு மன்னித்துக் கொண்டே இருப்பது அல்ல. விலகி நின்று பயங்கரவாதத்தை வேடிக்கை பார்ப்பது என்று அர்த்தம் கிடையாது. ஏனென்றால் இந்தியா இதில் தெளிவாக […]

Categories
உலக செய்திகள்

2022 க்கு குட்பை… கிரிபால்டி தீவில் 2023 புத்தாண்டு பிறந்தது…!!!!!

2023 ஆம் புத்தாண்டை வரவேற்க உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் தயாராக இருக்கின்றனர். இந்நிலையில் உலகின் முதல் நாடாக மத்திய பசுபக்கில் உள்ள கிரிபால்டி தீவில் 2023 ஆம் புத்தாண்டு பிறந்தது. அதனை தொடர்ந்து இந்தியாவிலும் இன்னும் சில மணி நேரங்களில் 2023 புத்தாண்டு பிறக்க உள்ளது. இந்த புத்தாண்டை எதிர்பார்த்து இந்திய மக்களும் உற்சாகத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த புத்தாண்டின் கடைசி நாளான இன்று 2022 ஆம் ஆண்டுக்கு குட்பை  சொல்லியும் வருகிற 20203 […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவு…. இரங்கல் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி…!!!

இந்திய பிரதமரான நரேந்திர மோடியின் தாயார் மரணத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தாயான ஹீராபென்னிற்கு 99 வயதான நிலையில், இன்று அதிகாலையில் மருத்துவமனையில் உயிரிழந்தார். தாயாரின் இறப்பு செய்தியை அறிந்தவுடன் பிரதமர் மோடி உடனடியாக குஜராத் மாநிலத்திற்கு சென்றார். அங்கு தன் தாயின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அதன் பிறகு, இறுதி சடங்குகள் நடந்தது. அதனைத்தொடர்ந்து காந்திநகரில் இருக்கும் மயானத்தில் அவரின் உடலை […]

Categories
அரசியல் உலக செய்திகள்

BREAKING: நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் 2023 புத்தாண்டு பிறந்தது!!

உலகில் முதல் நாடாக நியூசிலாந்து நாட்டின் புத்தாண்டு பிறந்தது. அந்நாட்டின் ஆக்லாந்து நகரம் வானவேடிக்கை மற்றும் ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நாக்லாந்தில் ஆயிரக்கணக்கானவர்கள் ஓன்று கூடி புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். மக்கள் ஒருவருக்கொருவர் கட்டியணைத்து வாழ்த்துக்களை கூறி புத்தாண்டை மகிழ்வுடன் வரவேற்று வருகின்றனர். இதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறந்தது. சிட்னி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பட்டாசுகள் வெடிக்க மக்கள் 2023 புத்தாண்டை வரவேற்றனர்.

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் குறைந்த கொரோனா…. நீக்கப்பட்ட கட்டுப்பாடுகள்…!!!

இந்தோனேசிய நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, பிரேசில், கொரியா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகமாக பரவத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், இந்தோனேசிய அரசு கொரோனா விதிமுறைகள் நீக்கப்படுவதாக தெரிவித்திருக்கிறது. அந்நாட்டு அதிபரான ஜோகோ விடோடோ கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். அந்நாட்டில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தில் 1.7 நபர்கள் என்ற அளவிற்கு குறைந்துவிட்டது. கொரோனா தொற்றின் பாதிப்புகள் குறைந்ததால், கொரோனாவிற்கு எதிரான […]

Categories
உலக செய்திகள்

“வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து சகிக்க முடியாது” … தென்கொரியா அதிபர் பேச்சு…!!!!

வடகொரியா முன்னெப்போதும்  இல்லாத விதமாக தென்கொரிய பகுதிகளில் ஏவுகணை சோதனையை நடத்தி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மாதம் அதி நவீன ஏவுகணையான கண்டம் விட்டு கண்ட பாயும் ஏவுகணை உட்பட பல்வேறு ஏவுகணை ஏவி சோதனைகளை நடத்தியுள்ளது. இந்நிலையில் “வடகொரியா இன்று குறைந்தபட்சம் ஒரு குறிப்பிடப்படாத பாலிஸ்டிக்  ஏவுகணையை ஏவியதாக தென்கொரியா  ராணுவம் கூறியுள்ளது”. மேலும் தென்கொரிய தீபகற்பத்தில் ராணுவ பதட்டங்கள் இந்த வருடம் கடுமையாக அதிகரித்துள்ளது. இது குறித்து தென் கொரிய அதிபர் […]

Categories
உலக செய்திகள்

மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு…. மொத்தமாக 33 வருடங்கள் சிறை தண்டனை…!!!

மியான்மர் நாட்டின் முன்னாள் தலைவரான ஆங் சான் சூகிக்கு ஊழல் போன்ற பல வழக்குகளின் கீழ் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் மேலும் 7 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மியான்மரில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் தேதி அன்று ராணுவம் ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு, நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி உட்பட முக்கியமான தலைவர்களை வீட்டு சிறையில் அடைத்தனர். ராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டது, ஊழல் போன்ற பல வழக்குகளின் […]

Categories
உலக செய்திகள்

BREAKING: உலகிலே முதல் நாடாக நியூசிலாந்தில் 2023 புத்தாண்டு பிறந்தது: வாழ்த்துக்கள் கூறி மக்கள் உற்சாகம்!!

உலகில் முதல் நாடாக நியூசிலாந்து நாட்டின் புத்தாண்டு பிறந்தது. அந்நாட்டின் ஆக்லாந்து நகரம் வானவேடிக்கை மற்றும் ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நாக்லாந்தில் ஆயிரக்கணக்கானவர்கள் ஓன்று கூடி புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். மக்கள் ஒருவருக்கொருவர் கட்டியணைத்து வாழ்த்துக்களை கூறி புத்தாண்டை மகிழ்வுடன் வரவேற்று வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

#BREAKING : முன்னாள் போப்பான 16 ஆவது பெனடிக்ட் உடல் நலக்குறைவால் காலமானார்..!!

முன்னாள் போப்பான 16 ஆவது பெனடிக்ட் வாடிகனில் உள்ள தனது இல்லத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். முன்னாள் போப் பெனடிக்ட் வாடிகனில் உள்ள தனது இல்லத்தில் உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 95… 2013 ஆம் ஆண்டில், இடைக்காலத்தில் இருந்து கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பதவியை ராஜினாமா செய்த முதல் போப்பாண்டவர் ஆனார். முன்னாள் போப் 16ம் பெனடிக்ட், நீண்டகால நோயின் பின்னர் தனது 95வது வயதில் காலமானார் என்று வாடிகன் சனிக்கிழமை அறிவித்தது. வாடிகன் […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி!!… முன்னாள் WWE மல்யுத்த வீரர் 37 வயதில் திடீர் மரணம்…. சோகத்தில் ரசிகர்கள்….!!!!

பிரபலமான முன்னாள் மல்யுத்த வீரர் Jacin strife (37). இவர் சில காலமாக உடல் நலக்குறைவினால் அவதிப்பட்டு வந்த நிலையில், திடீரென மரணம் அடைந்துள்ளார். முன்னாள் மல்யுத்த வீரர் ஸ்டிரைஃப் உயிரிழந்ததை அவருடைய சகோதரர் சமூக வலைதளத்தின் மூலம் அறிவித்துள்ளார். அதோடு நிதி நெருக்கடியில் தவிக்கும் தன்னுடைய குடும்பத்தினருக்காக நிதி திரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும்WWE  ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த மல்யுத்த வீரர் உயிரிழந்ததை நடித்து மிகுந்த கவலையில் இருப்பதோடு, ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து வருகிறார்கள்.

Categories
உலக செய்திகள்

சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்… இங்கிலாந்து அரசு அதிரடி அறிவிப்பு…!!!!!

சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸ்  பிஎஃப் 7  தீவிரமடைந்து வருகிறது. இந்த கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு பல்வேறு நாடுகளும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. அந்த வகையில் சீனாவில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு நடவடிக்கைகளை விதிப்பது பற்றி பரிசீலனை செய்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அரசும் இந்த நடவடிக்கை குறித்து பரிசீலனை செய்து வருகிறது. இதன்படி சீனாவில் இருந்து வரும் பயணிகள் கொரோனா நெகடிவ்  சான்றிதழை கொண்டு வர வேண்டும். […]

Categories
உலக செய்திகள்

“சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்”… பிரான்ஸ், ஸ்பெயின் உத்தரவு…!!!!!

சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸ்  பிஎஃப் 7 வேகமாக பரவி வருவதால் பல்வேறு நாடுகள் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக நடத்த உத்தரவிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளும் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயம் ஆக்கியுள்ளது. மேலும் பிரெஞ்சு மக்கள் சீனாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு பிரான்ஸ் அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் சுகாதார அதிகாரிகள் கூறியதாவது, புதிய வகை கொரோனா வைரஸ் மாறுபாடுகளை அடையாளம் […]

Categories
உலக செய்திகள்

பிரபல செய்தி தொகுப்பாளர் காலமானார்…. பெரும் சோகம்…!!!

அமெரிக்காவின் புகழ்பெற்ற செய்தி தொகுப்பாளர் பார்பரா வால்டர்ஸ் (93) இன்று காலமானார். அமெரிக்காவில் மாலை செய்திகளை தொகுத்து வழங்கிய முதல் பெண் என்ற பெருமைக்குரியவர் இவர். 50 ஆண்டுகால செய்தித்துறை பயணத்தில் 12 எம்மி விருதுகளை பார்பரா வென்றுள்ளார். இன்று உருவாகும் பெண் பத்திரிகையாளர்களுக்கு இவர் தான் முன்னோடி.

Categories
உலக செய்திகள்

2023 இல் பூமியை உலுக்கப் போகும் “3 பெரிய ஆபத்துகள்”…. பாபா வங்காவின் பரபரப்பு கணிப்பு..!!!

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்காவின்(82) கணிப்பு இதுவரை 85% நடந்துள்ளதால், அவரின் கணிப்புகள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தனது சிறு வயதில் பார்வையை இழந்த இவர் உலகில் நடக்கக்கூடிய முக்கிய நிகழ்வுகளை கணித்து சொல்ல தொடங்கிவிட்டார். கடந்த 50 வருடங்களாக 100க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன்கூட்டியே கணித்து சொன்னவர். அவைகளில் பல ஒவ்வொரு காலகட்டத்திலும் நடந்து வருகின்றன. அந்த வகையில், பல ஆண்டுகளுக்கு பின் நடக்கப் போகும் விஷயங்களை முன்னரே அறிந்து சொன்ன பாபா வாங்கா, 2023ஆம் […]

Categories
உலக செய்திகள்

ஏவுகணை தாக்குதல்களை தீவிர படுத்திய ரஷ்யா… உக்ரைனின் பல பகுதிகளில் மின்வெட்டு…ஜெலன்ஸ்கி தகவல்….!!!!!

கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யாவின் படைகள் போர் நடத்த தொடங்கியது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்தது. இருப்பினும் இரு தரப்பிலும் பெரிய அளவிலான உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் போரில் ரஷ்ய இராணுவம் உக்ரைனில் சில பகுதிகளை கைப்பற்றியுள்ளது. ரஷ்ய இராணுவம் கடந்த மார்ச் மாதம் உக்ரைனின் கெர்சன் பகுதியை கைப்பற்றிய நிலையில் அதனை உக்ரைன் படை கடந்த மாதம் போராடி மீட்டது. இந்நிலையில் உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்ய […]

Categories
உலக செய்திகள்

ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை… மியான்மர் ராணுவ கோர்ட் அதிரடி உத்தரவு…!!!!!!

மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல வருடங்களாக போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி(77). கடந்த 2020 -ஆம் ஆண்டு இவர் தலைமையிலான ஜனநாயக லீக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. அந்த தேர்தலில் மோசடி நடைபெற்றதாக கூறி ஆங் சான் சூகி ஆட்சியை கவிழ்த்து மீண்டும் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. இதனை தொடர்ந்து ஆங் சான் சூகி வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது கிளர்ச்சியை தூண்டியது, ஊழல் முறைகேடு போன்ற பல்வேறு […]

Categories
உலக செய்திகள்

குகை பாதையில் திடீர் தீ விபத்து… 6 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!!

தென் கொரியாவின் தலைநகரான சியோல் அருகே கியோங்  பகுதியில் தரைக்கு மேலே செல்லும் குகை பாதையில் முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த விபத்தில் ஆறு பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் இருந்து வெளியான நச்சுப் புகையை சுவாசித்த 20 பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீயணைப்பு படையினர் அவர்களை […]

Categories
உலக செய்திகள்

“ஒரே நேர்கோட்டில் 7 கோள்கள்”…. இன்னும் சில நிமிடங்களில் வானில் நிகழும் அற்புதம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

பிரபஞ்சத்தில் ஒரு அதிசய நிகழ்வு இன்று இரவு 9 மணிக்கு நடைபெற இருக்கிறது. அதாவது நம் சூரிய குடும்பத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கோள்களும் இன்று இரவு 9 மணிக்கு ஒரே நேர்கோட்டில் வானத்தில் தெரியும். இதில் பூமி தவிர சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களையும் வானத்தில் பார்க்கலாம். இந்நிலையில் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் போன்ற கோள்களை டெலஸ்கோப் அல்லது பைனாகுலர் போன்றவைகள் கொண்டு தான் பார்க்க முடியும். ஆனால் புதன், வெள்ளி, செவ்வாய், சனி போன்ற […]

Categories
உலக செய்திகள்

திக் திக் திக்….. ஒரே நாளில் 420 மரணம்…. பெரும் ஷாக்கில் உலக நாடுகள்…!!

உலக அளவில் சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவிலும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விதமான கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஜப்பான் நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 420 பேர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

ஜனவரி 5-ஆம் தேதி முதல்…. சீன மக்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை… அமெரிக்க அரசு அறிவிப்பு…!!!

அமெரிக்க அரசு, வரும் ஜனவரி மாதம் ஐந்தாம் தேதியிலிருந்து சீன மக்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, பல நாடுகள் சீனாவிலிருந்து வரும் மக்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவும் சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கியிருக்கிறது. இது பற்றி நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பிற்கான அமெரிக்க மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சீன நாட்டிலிருந்து அமெரிக்கா வருபவர்கள், எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக  […]

Categories
உலக செய்திகள்

ஆங் சான் சூகி மீதான வழக்கு… இன்று தீர்ப்பு வழங்குகிறது மியான்மர் ராணுவ நீதிமன்றம்…!!!!!

பல வருடங்களாக மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி (77). கடந்த 2020 -ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவர் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. ஆனால் இதில் மோசடி நடைபெற்றதாக கூறி ஆங் சான் சூகியின் ஆட்சியை கவிழ்த்து விட்டு ராணுவம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட ஆங் சான் சூகி மீது ராணுவத்திற்கு எதிரான கிளர்ச்சியை துண்டியது, அலுவலக […]

Categories
உலக செய்திகள்

நம்ம உறவு எப்படி இருக்கு…? ரஷ்யா – சீனா அதிபர்கள் காணொளி காட்சி வாயிலாக இன்று பேச்சு வார்த்தை…!!!!!!

கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் காணொளி காட்சி வாயிலாக இன்று பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, இன்று நடைபெற உள்ள பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது பற்றியும், பிராந்திய அளவிலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது பற்றியும் இரு நாட்டு அதிபர்களும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் தீவிரமடையும் கொரோனா… உலக சுகாதார அமைப்பு கவலை…!!!!!!

சீனாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால் சீன பயணிகளுக்கு பல்வேறு நாடுகள் கொரோனா பரிசோதனையை  கட்டாயமாக்கி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவிலும் சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து உலக சுகாதாரத்துறை அமைப்பின் தலைவர் டெட் ரோஸ் அதோனோம் கூறியதாவது, “சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. மேலும் சீனாவில் தொற்றுப் பரவலை கருத்தில் கொண்டு சில நாடுகள் அறிமுகப்படுத்தியுள்ள கட்டுப்பாடுகள் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

தீ விபத்து: 19 பேர் பலி…. சற்றுமுன் சோகம்…!!!!

கம்போடியாவில் உள்ள நட்சத்திர விடுதி ர ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 19 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும் தீ விபத்தில் சிக்கியுள்ள பலரது நிலைமை தெரியவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எப்படி தீ விபத்து நடந்தது என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

சீனாவில் இருந்து மேலும் ஆபத்தான மாறுபாடுகள்…. எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்…!!

BF-7 வைரஸ் மாறுபாட்டின் பரவலால், சீனா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளில் மீண்டும் ஒரு பதற்றம் உருவாகியுள்ளது. இது குறித்து மருத்துவ நிபுணர்கள் முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளனர். அதாவது சீனாவில் இருந்து மேலும் ஆபத்தான மாறுபாடுகள் வெளிவர வாய்ப்புள்ளதாக  எச்சரித்துள்ளார். அங்குள்ள ஜீரோ கோவிட் கொள்கை நீக்கப்பட்டதே அதற்குக் காரணம் எனவும், சீனாவின் முழு மக்களும் இப்போது ஒரே நேரத்தில் வைரஸுக்கு ஆளாகியிருப்பதால் அதிக மாறுபாடுகள் உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

பெண்களுக்கான கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு… “பல நடவடிக்கை இடைநிறுத்தப்பட வேண்டியிருக்கும்”… ஐ.நா எச்சரிக்கை…!!!!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் சில உதவி திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. பெண் உதவி பணியாளர்களுக்கு தலிபான் தலைமையிலான நிர்வாகம் தடை விதித்துள்ள காரணங்களினால் பல நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட வேண்டி இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. பெண்கள் பல்கலைக்கழகங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து பெண் உதவி பணியாளர்கள் மீதான தடையை கடந்த சனிக்கிழமை தலிபான் […]

Categories
உலக செய்திகள்

பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி…. 37 பேர் படுகாயம்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

தென் கொரியாவில் உள்ள குவாச்சியோன் நகரில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. இந்த பகுதியில் உள்ள சுரங்க பாதை வழியாக சென்ற பேருந்து மற்றும் ட்ரக் நேருக்கு நேராக  மோதிக்கொண்டதில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பிறகு 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதோடு 35 பேருக்கு பலத்த காயங்களும் ஏற்பட்டுள்ளது. இது குறித்த தகவலின் பேரில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. 7,000 மக்கள் பரிதாப பலி…. ஐ.நா வெளியிட்ட தகவல்…!!!

உக்ரைன் நாட்டில் நடக்கும் போரில் தற்போது வரை 7000 மக்கள் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக ஐ.நா தகவல் வெளியிட்டுள்ளது. ரஷ்யா, கடந்த பிப்ரவரி மாதத்தில் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தொடங்கியது. அந்த போர், சுமார் 10 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த, கடும் போரில் உக்ரைன் நாட்டின் பல நகர்கள் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் நாட்டில் தற்போது வரை  போரில் அப்பாவி பொதுமக்கள் 7 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பனிப்புயலின் தாக்கம்… உறைநிலைக்கு சென்ற நயகரா நீர்வீழ்ச்சி…!!!!

அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக வீசி வரும் பனிப்புயல் காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடுமையான பனிப்பொழிவினால் வீடுகள், வாகனங்கள் மற்றும் கட்டிடங்கள் பணியில் உறைந்து காணப்படுகிறது. இதனால் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பனிப்பொழிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 தாண்டியுள்ளது. இந்நிலையில் கடுமையான பனிப்பொழிவின் காரணமாக நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதியும் உறைந்து போய் காணப்படுகிறது. மேலும் சில இடங்களில் நீர்வீழ்ச்சியில் உள்ள பனிக்கட்டிகளையும் தாண்டி தண்ணீர் கொட்டும் காட்சிகளும், […]

Categories
உலக செய்திகள்

பல்வேறு நாடுகளில் twitter சேவை முடக்கம்… வெளியான தகவல்…!!!!!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றிய பின் நிர்வாக ரீதியிலும், ட்விட்டரில் பல்வேறு வசதிகளிலும் மாற்றங்களை செய்து வருகிறார். தற்போது ட்விட்டர் பல நாடுகளில் முடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ட்விட்டரில் எந்த பதிவுகளையும் காண முடியவில்லை எனவும், எர்ரர் மெசேஜ்கள் மட்டுமே காண்பிக்கப்பட்டதாகவும் பலர் தெரிவித்துள்ளனர். ஆனால் சில மணி நேரங்களிலேயே ட்விட்டர் வழக்கம்போல் செயல்பட தொடங்கியுள்ளது. இருப்பினும் ட்விட்டர் நிறுவனம் இதற்கான காரணம் என்ன என்பது குறித்து […]

Categories
உலக செய்திகள்

வியட்நாமில் விபத்துக்குள்ளான படகு…. தாயகம் திரும்பிய இலங்கை தமிழர்கள்…!!!

வியட்நாமிற்கு அருகில் கடலிலிருந்து மீட்கப்பட்ட இலங்கை தமிழர்கள் 152 பேர் தாய் நாட்டிற்கு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வியட்நாமிற்கு அருகில் பெரிய படகு ஒன்றில் பயணித்த இலங்கை தமிழர்கள் 302 பேர் விபத்தில் சிக்கினர். அந்த படகு கடலில் கவிழ்ந்து விழுந்து தத்தளித்து. நீரில் மூழ்கியவர்களை கடற்படையினர் போராடி மீட்டு விட்டார்கள். அதன் பிறகு, அவர்கள் வியட்நாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த படகில் பயணித்தவர்கள் வேறு நாட்டில் குடியேறும் நோக்கில் தப்பியதாக கூறப்பட்டிருக்கிறது. இதனிடையே, இலங்கை வெளியுறவு அமைச்சகமானது, […]

Categories
உலக செய்திகள்

பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்… தலீபான்களை கடுமையாக கண்டித்த ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்…!!!

இந்தியா தலைமையிலான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலானது, தலிபான்களை கடுமையாக கண்டித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலீபான்கள் பெண்களின் அடிப்படை உரிமைகளையும் சுதந்திரத்தையும் பறிக்கக்கூடிய வகையில் கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தினர். அந்த வகையில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்க, தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற, தடை அறிவிக்கப்பட்டது. இதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில், தற்போது இந்திய நாட்டின் தலைமையில் இயங்கும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலானது, பெண்கள் மீதான கடும் கட்டுப்பாடுகளுக்கு தலிபான்களை கடுமையாக […]

Categories
உலக செய்திகள்

சூடானில் கோர விபத்து…. லாரி மீது பயங்கரமாக மோதிய பேருந்து…. 16 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

சூடான் நாட்டில் நின்றுகொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் 16 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூடான் என்னும் வடக்கு ஆப்பிரிக்க நாட்டின் தலைநகரான கார்டூமிலிருந்து டார்பர் மாகாணத்தில் இருக்கும் பேசர் நகரத்திற்கு சென்ற பேருந்தில் 30-க்கும் அதிகமான பயணிகள் இருந்திருக்கிறார்கள். அந்த பேருந்து, ஓம்துர்மன் நகரத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையில் கட்டுப்பாடின்றி சென்ற பேருந்து சாலையோரத்தில் நின்ற லாரியின் மீது பயங்கரமாக மோதியது. பயத்தில், […]

Categories
உலக செய்திகள்

இருமல் மருந்தை கொடுத்ததால் 18 குழந்தைகள் பலி… உஸ்பெகிஸ்தான் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!!!

இருமல் மருந்து கொடுத்ததால் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் அரசு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. நொய்டாவில் உள்ள ‘மேரியன் பயோடெக்’ எனும் நிறுவனம் “டாக்-1 மேக்ஸ்” என்னும் இருமல் மருந்தை தயாரித்துள்ளது. இந்த இருமல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், ஆய்வக பரிசோதனையில் எத்தலின் கிளைகால் எனும் நச்சுப்பொருள் இருப்பதாகவும் உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் […]

Categories
உலக செய்திகள்

புதிய வகை கொரோனா… “சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு கிடையாது”… ஆஸ்திரேலியா வெளியிட்ட அறிவிப்பு…!!!!!!

சீனாவில் புதிய வகை கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் கட்டுப்பாடுகளை விதிப்பது  குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.  இது குறித்து ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிஸ் கூறியதாவது, “சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நாட்டிற்குள் அனுமதிக்கும் விதிகளில் ஆஸ்திரேலியா எந்த மாற்றமும் செய்யவில்லை. மேலும் சுகாதார நிபுணர்களிடமிருந்து நாங்கள் தகுந்த ஆலோசனைகளை தொடர்ந்து பெறுகிறோம். இதனையடுத்து உலகெங்கிலும் பரவி வரும் புதிய […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் ஜனவரி 8-ம் தேதி முதல்… மீண்டும் பாஸ்போர்ட் வழங்கும் பணி தொடக்கம்… வெளியான அறிவிப்பு…!!!!!

சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி எனும் பெயரில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு விட்டது. மேலும் வருகிற 8-ம் தேதி முதல் சர்வதேச பயணிகளுக்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுகிறது. கடந்த 2020 -ஆம் ஆண்டு தொடக்கம் முதல் சீனாவில் கொரோனா தொற்றால் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் வருகிற ஜனவரி 8-ஆம் தேதி முதல் பாஸ்போர்ட்டுகள் வழங்கும் பணி தொடங்க உள்ளதாக சீன அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் சீன […]

Categories
உலக செய்திகள்

இருமல் மருந்தால் 18 குழந்தைகள் மரணம்…. உஸ்பெகிஸ்தானில் பெரும் அதிர்ச்சி….!!!!

இந்தியாவில் உள்ள நொய்டாவை சேர்ந்த மாரியோன் பயோ டெக் நிறுவனம் தயாரித்த Doc-1 Max-1 syrup இன்று இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. அதன் பிறகு குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட இருமல் மருந்தை ஆய்வகத்தில் சோதித்ததில் எத்திலின் கிளைகோல் என்ற நச்சுப்பொருள் மருந்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த மருந்தை மருத்துவர்களின் பரிந்துரையின்றி பெற்றோர்கள் மருந்தகத்தில் வாங்கி இருக்கலாம் அல்லது மருந்தகத்தின் பரிந்துரையின் படி […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: இருமல் மருந்து குடித்த 13 குழந்தைகள் பலி…. மீண்டும் அதிர்ச்சி…!!!

உஸ்பெக்கிஸ்தானில் இருமல் மருந்து குடித்து 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டாக்-1 மேக்ஸ் மருந்தை குடித்துதான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நொய்டாவில் உள்ள மரியோ பயோடெக் நிறுவனம் இந்த மருந்தை தயாரித்து வருகிறது. இதில், எத்திலீன் கிளைகோல் என்ற வேதிப்பொருள் இருந்துள்ளது. இதையடுத்து, இந்தியாவில் இந்த மருந்து, மாத்திரைகள் திரும்பப்பெறப்பட்டன.

Categories
உலக செய்திகள்

Breaking: உலகம் முழுவதும் ட்விட்டர் முடக்கம்…. பயனர்கள் கடும் அவதி…!!!!

உலகம் முழுவதும் இன்று காலை 6.30 மணி முதல் ட்விட்டர் முடங்கியுள்ளது. ஏற்கனவே லாக்இன் செய்திருந்தவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. ஆனால், புதிதாக ட்விட்டரை லாக்இன் செய்பவர்களால் உள்ளே நுழைய முடியவில்லை. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக முடங்கியுள்ளதால், பயனர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

Breaking: வெள்ளத்தில் மூழ்கி 29 பேர் பலி…. பெரும் சோகம்…!!!

பிலிப்பைன்சில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. பல நகரங்கள் வெள்ளக்காடாகின. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 12 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

OMG… உறைந்த ஆற்றுக்குள் விழுந்து 3 இந்தியர்கள் பலி… சுற்றுலா சென்ற இடத்தில் நடந்த விபரீதம்….!!!!!!

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த நாராயண முட்டனா- ஹரிதா தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. அமெரிக்காவில் அரிசோனா மாகாணம் சந்த்லர் நகரில் நாராயணா தனது குடும்பத்தினருடன்  வசித்து வருகிறார். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு நாராயணா  முட்டனாவுடன் 3 குடும்பத்தினரை சேர்ந்த 11 பேருடன் கொகொனியோ நகரில் உள்ள ஆற்றுப்பகுதிக்கு சுற்றுலாவிற்கு சென்று உள்ளனர். அங்கு நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவின் காரணமாக ஆறு முழுவதும் பனியால் உறைந்து உள்ளது. அப்போது நாராயண முட்டனா […]

Categories
உலக செய்திகள்

ஜப்பானிய தோட்டத்தில் முறிந்து விழுந்த ராட்சத மரம்… 2 பேர் படுகாயம்… பெரும் பரபரப்பு…!!!!!

அர்ஜென்டினாவில்  உள்ள பியூனஸ் அயர்ஸ் ஜப்பானிய தோட்டம் உலகின் மிகப்பெரிய தோட்டங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த தோட்டத்தில் சகுரா, கட்சுரா மற்றும் அசேலியா போன்ற ஜப்பானிய தாவரங்கள் இருக்கிறது. இதனை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். அந்த வகையில் இங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மரங்களை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தபோது ஒரு ராட்சத மரத்தில் உள்ள ஒரு பெரும் பகுதியின் கிளை முறிந்து விழுந்ததில் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் […]

Categories
உலக செய்திகள்

உச்சத்தில் கொரோனா… “தடுப்பூசியா வேண்டவே வேண்டாம்”… சீனாவில் ஓட்டம் பிடிக்கும் முதியவர்கள்…!!!!!!

சீனாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி உள்ளது. பல நகரங்களில் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வருகின்றது. மேலும் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது. இந்த கொரோனா தொற்று உலக நாடுகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆனால் சீனாவில் சர்வதேச பயணிகளை தனிமைப்படுத்துவதற்காக பிறப்பித்திருந்த உத்தரவையும் விலக்கிக் கொள்ளப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர். இது குறித்து சீன அதிகாரிகள் கூறும்போது, “உலக அளவில் பெருமளவில் இறப்புகளை ஏற்படுத்திய டெல்டா வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபர் புதினை விமர்சித்தவர் மரணம்… வெளியான பிரேத பரிசோதனை அறிக்கை… தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!!

பாவெல் ஜென்ரிகோவிச் ஆன்டோவ் என்பவர் ரஷ்யாவின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கல்வி கொடையாளராக அறியப்பட்டவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒடிசாவிற்கு சுற்றுலா பயணத்திற்காக நண்பர்களுடன் வந்த போது ராயகடா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் ஓட்டலின் மூன்றாவது தளத்தில் உள்ள ஜன்னல் வழியே கீழே விழுந்த அவர் மரணம் அடைந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

சீன மக்களுக்கு கட்டாய பரிசோதனை…. ஜப்பான் அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!

சீன நாட்டிலிருந்து வரும் மக்களுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று ஜப்பான் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. சீன நாட்டில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து பல நாடுகளும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக விமான நிலையங்களில் மக்களுக்கு தீவிர பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஜப்பான் அரசு, சீன நாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறது. இது பற்றி அந்நாட்டின் பிரதமரான புமியோ கிஷிடா தெரிவித்திருப்பதாவது, வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

கண்ணிவெடியில் சிக்கி வெடித்து சிதறிய பேருந்து…. 10 நபர்கள் பரிதாப பலி…!!!

ஆப்பிரிக்காவில் கண்ணிவெடியில் மாட்டி பேருந்து வெடித்து சிதறியதில் பத்து நபர்கள் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். புர்கினோ பாசோவில் கடந்த 2013 ஆம் வருடத்திலிருந்து பல தீவிரவாத அமைப்புகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் மேற்கொள்ளும் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருகிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் பக்கத்து நாடுகளுக்கு குடிபெயர்ந்திருக்கிறார்கள். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. மேலும் தீவிரவாதத்தை அழிப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டது. இருப்பினும், அங்கு தீவிரவாத தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், புர்கினோ பாசோ […]

Categories
உலக செய்திகள்

இடைவிடாமல் கொட்டித்தீர்த்த பேய்மழை…. வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலி…!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் பலத்த மழையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஆறு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் கடந்த திங்கட்கிழமை பலமான காற்று வீசியதோடு பலத்த மழை விடாமல் பெய்தது. இந்த கனமழையால் அங்கிருக்கும்  நகர்களில் வெள்ளம் சூழ்ந்தது. மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் வெள்ளம் புகுந்து நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் மூழ்கியது. பலத்த மழை மற்றும் வெள்ள பாதிப்பால் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் ஒரு லட்சம் மக்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

கீழே விழுந்து விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்…. வீரர்கள் மூவர் உயிரிழந்த பரிதாபம்…!!!

நைஜரில் இராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்ததில் இராணுவ வீரர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரிய நாட்டின் ராணுவத்திற்குரிய மில் எம்ஐ-17 என்ற வகை ஹெலிகாப்டர் நைஜர் நாட்டின் நியாம் என்னும் நகருக்கு புறப்பட்டு சென்றிருக்கிறது. அதில் ராணுவ வீரர்கள் மூவர் இருந்திருக்கிறார்கள். அந்நகரில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது எதிர்பாராத விதமாக விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, விமான நிலையத்திற்குள் விழுந்து தீப்பற்றி எரிந்தது. அதனைத்தொடர்ந்து, […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபர் புதினை விமர்சித்தவர் மரணம்…. பின்னணி என்ன?…. போலீஸ் தீவிர விசாரணை….!!!!!

ஒடிசாவில் ஒருவார இடைவெளியில் அடுத்தடுத்து 2 ரஷ்ய சுற்றுலாப்பயணிகள் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் ஒருவர் ரஷ்ய எம்பியும், அதிபர் புதினை விமர்சித்தவர் எனவும் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது ரஷ்ய அதிபர் புதினை விமர்சித்தவரும், அந்நாட்டு பணக்கார நாடாளுமன்ற உறுப்பினருமான பவெல் அன்டனவ் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தார். இந்நிலையில் பவெல் அன்டனவ் தான் தங்கி இருந்த அறையில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் உலக அளவில் பெரும் […]

Categories

Tech |