வடகொரியா, தென்கொரிய நாட்டிற்குள் அத்துமீறி ட்ரோன்களை அனுப்பியது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது. வடகொரியா அடிக்கடி ஏவுகணை பரிசோதனைகள் மேற்கொண்டு தென்கொரியாவையும், அமெரிக்காவையும் அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக, கொரிய தீபகற்பத்தில் பதற்ற நிலை நீடிக்கிறது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று தென்கொரிய நாட்டிற்கு ஐந்து ட்ரோன்களை வடகொரியா அனுப்பியிருக்கிறது. தென்கொரிய நாட்டின் எல்லைக்குள் அவை அத்துமீறி புகுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரிய நாட்டின் எல்லைக்கு அருகில் இருக்கும் ஜியோங்கி மாகாணத்திற்குள் அந்த ட்ரோன்கள் நுழைந்து வட்டமிட்டுள்ளன. அதில், […]
Category: உலக செய்திகள்
உலகம் முழுவதும் twitter பயன்படுத்தும் 40 கோடி பேரின் பர்சனல் கணக்குகள் திருடப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது 40 கோடி டுவிட்டர் தரவுகளை ஹேக்கர் ஒருவர் திருடி விற்பனைக்கு வைத்துள்ளதாக இஸ்ரேலிய உளவுத்துறை நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் சிஇஓ சுந்தர் பிச்சை, நடிகர் சல்மான் கான் இந்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம், உலக சுகாதார நிறுவனம், நாசா, அரசு நிறுவனங்கள், அமைப்புகள், அரசியல் தலைவர்கள் போன்றோர்களின் தகவல்களும் அடங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 40 […]
பாகிஸ்தானில் சமீப காலங்களாக பயங்கரவாத தாக்குதல் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அங்குள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, “நாட்டில் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. அதனை அரசு மிக விரைவில் நசுக்கும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் மாகாண அரசாங்கங்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் உதவியுடன் அரசாங்கம் பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் இல்லாதொழிக்கும்” என அவர் உறுதியளித்துள்ளார்.
ஜப்பானில் புகுஷிமா மற்றும் பிற பேரிடர் பாதித்த பகுதிகளின் மறு சீரமைப்பு துறையின் மந்திரியாக இருந்தவர் கென்யா அகிபா. இவர் அரசியல் மற்றும் தேர்தல் நிதிகளை தன்னுடைய சொந்த தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் புமியோ கிஷிடா, கென்யா அகிபாவை மந்திரி பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட கென்யா அகிபா நேற்று பிரதமரை சந்தித்து தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் புமியோ […]
தைவானில் கட்டாய ராணுவ சேவை ஒரு வருடமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. சீனாவில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது சீனாவில் இருந்து தைவான் தனி நாடாக மாறியது. ஆனால் தற்போது சீனா தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி தைவானை ஆக்கிரமிப்பதற்காக படைப்பலத்தை பயன்படுத்த தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சீன ராணுவம் அடிக்கடி தைவனை சுற்றி வளைத்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதனால் சீனாவிடம் இருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக தைவான் […]
உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]
ஜப்பானில் பனிப்பொழிவு இயல்பை விட மூன்று மடங்கு அதிகமானதால், 17 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடக்கு கடற்கரையின் நிலைமை இன்னும் நிலைமை மோசமாக உள்ளது. பல நகரங்களில் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள முக்கிய தீவு ஒன்றில், மின் நிலையம் அழிந்ததால், 20,000 வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. வீடுகளில் மின்சாரம், ஹீட்டர் போன்றவை செயல்படாததால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். சாலைகள் மற்றும் பாலங்களில் அடி அடியில் பனி குவிந்துள்ளது. இதனால் […]
உகாண்டா நாட்டை சேர்ந்தவர் மூசா. 61 வயதாகும் இவர் பல திருமணங்கள் செய்து பல பிள்ளைகளை பெற்றுள்ளார். இந்நிலையில் 12 மனைவிகள் மற்றும் 102 பிள்ளைகளை கொண்ட உகாண்டா நாட்டு மூசா ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறார். அதாவது குடும்பத்தை கவனித்துக்கொள்ள சரியான வருமானம். இல்லாததால் அவர் தன் மனைவிகளை கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ள சொல்ளியுள்ளாராம். 67 வயதாகும் மூசாவுக்கு 102 பிள்ளைகளும், 568 பேரக்குழந்தைகளும் உள்ளனர். அவருக்கு 6 வயது முதல் 51 வயது வரை பிள்ளைகள் […]
சீனாவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது. சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோவேக் தடுப்பூசியின் திறன் குறைவாக இருந்த போதிலும் பிற தடுப்பூசிகளை சீனா பயன்படுத்தவில்லை. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் அந்த நாடு வேக்சின்கள் பக்கம் திரும்பி உள்ளது. அதிலும் குறிப்பாக தலைநகர் பெய்ஜிங்கில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அதனால் விரைவில் சுகாதார மையங்களுக்கு பைசரின் கொரோனா மருந்தை விநியோகம் செய்ய முடிவு செய்திருக்கிறது. இந்நிலையில் சீனா கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ள […]
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் பாகிஸ்தானுக்கு சொந்தமான மூன்று தூதராக கட்டிடங்கள் அமைந்துள்ளது. அதில் வாஷிங்டன் வடகிழக்கு சர்வதேச கோர்ட்டுக்கு அருகே அமைந்துள்ள கட்டிடத்திலும், இதே போல் வாஷிங்டனின் மாகாணம் மாஸசூசெட்ஸ் அவின்யூவில் உள்ள ஒரு கட்டிடத்திலும் பாகிஸ்தான் தூதரகம் செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த கட்டிடம் செயல்பாட்டில் இல்லை இதற்கிடையே வாஷிங்டனின் வடமேற்கில் ஆர் ஸ்ட்ரீட் பகுதியில் 1950 -ஆம் வருடம் முதல் 2000 வருடம் வரை பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு பிரிவு இந்த கட்டிடத்தில் […]
அமெரிக்கா, கனடா, ஐரோப்பியா போன்ற பல்வேறு மேற்கத்திய நாடுகளில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவு பனிப்பொழிவை சந்தித்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை புத்தாண்டு பண்டிகைகளுக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் இது போன்ற கடுமையான பனிப்பொழிவு மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. மேலும் பனி பொலிவுடன் சேர்ந்து பனிபுயலும் வீசி வருகிறது. இந்நிலையில் நியூயார்க்கின் சில பகுதிகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் 23 […]
பல வருடங்களாக மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி (77). கடந்த 2020 -ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவர் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. ஆனால் இதில் மோசடி நடைபெற்றதாக கூறி ஆங் சான் சூகியின் ஆட்சியை கவிழ்த்து விட்டு ராணுவம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட ஆங் சான் சூகி மீது ராணுவத்திற்கு எதிரான கிளர்ச்சியை துண்டியது, அலுவலக […]
நைஜீரிய நாட்டில் பேருந்தின் டயர் வெடித்து, விபத்து ஏற்பட்டதில் ஆறு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரிய நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் பவுச்சி என்னும் மாகாணத்தின், கஞ்சுவா என்னும் நகரத்தில் பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று பேருந்தின் டயர் வெடித்ததில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி, ஆறு நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 16 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த […]
உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. டேஸ்ட் அட்லஸ் நடத்திய கருத்துக்கணிப்பின்படி உணவுகள் மற்றும் பானங்களுக்கான வாக்குகள் அடிப்படையில் 2022-ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் மொத்தம் 95 நாடுகள் இடம் பெற்றுள்ள நிலையில், இத்தாலியன் உணவுகள் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் கிரீஸ் மற்றும் ஸ்பெயின் இருக்கிறது. அதன்பிறகு இந்தியா 4.54 மதிப்பெண்களைப் பெற்று 5-ம் இடத்தில் இருக்கிறது. இந்த பட்டியலில் இந்திய உணவு வகைகளைச் சேர்ந்த […]
அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகள் பனிப்புயலால் நிலைகுலைந்து போய் உள்ளன. சுமார் இரண்டு கோடி மக்கள் இந்த புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இதுவரை 59 பேர் பலியாகி உள்ளனர். குறிப்பாக நியூயார்க் நகரில் மட்டும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். 15 லட்சம் பேர் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர். தட்பவெப்பம் -50 டிகிரிக்கு சரிந்து, சாலைகள் பணியால் மூடப்பட்டுள்ளன. எதிரே உள்ளதை கூட பார்க்க முடியாமல் பல இடங்களில் விபத்து ஏற்படுகின்றது. இதன் எதிரொலியாக 59 […]
செர்பியா நாட்டின் பைரோட் நகரில் இருந்து அம்மோனியா வாயுவை ஏற்றிக் கொண்டு சென்றிருந்த சரக்கு ரயில் எதிர்பாராத விதமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலில் இருந்த அம்மோனியா வாயு கசிந்து காற்றில் கலந்தது. இந்நிலையில் விஷவாயு கலந்த காற்றை சுவாசித்த 51 பேருக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா நாட்டில் உருவான பனிப்புயலால், சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் நான்கு நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் கடும் பனிப்புயல் ஏற்பட்டதில் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள். அதே நேரத்தில் அமெரிக்க நாட்டின் பக்கத்து நாடான கனடா நாட்டிலும் பனிப்புயல் உருவாகி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாண்ட்ரீல் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா உட்பட பல மாகாணங்களில் பனிப்புயல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை நேரத்தில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் […]
இங்கிலாந்தில் இருக்கும் கேளிக்கை விடுதி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் ஒரு பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் இருக்கும் வலாசே என்ற நகரில் இரவு நேரத்தில் மட்டும் இயங்கக்கூடிய ஒரு கேளிக்கை விடுதி அமைந்திருக்கிறது. அதில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அதிக மக்கள் கூட்டம் இருந்தது. அந்த சமயத்தில் அங்கிருந்த ஒரு நபர் திடீரென்று தன் துப்பாக்கியால் மக்களை நோக்கி சரமாரியாக சுட தொடங்கினார். இந்த தாக்குதலில் ஒரு இளம் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அவரது காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் கிறிஸ்துமஸ் பரிசாக ரூ.7 கோடி மதிப்புள்ள வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அதனை பார்த்த ரொனால்டோ திகைத்துப் போய் நின்ற வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ரொனால்டோ தன்னுடைய புதிய வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் காரின் படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொனால்டோ அவருடைய புதிய காரை பார்த்து […]
செர்பியா நாட்டின் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், அம்மோனியா வாயு வெளியேறியதில் 51 நபர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செர்பியாவின் பைரோட் நகரத்திலிருந்து, புறப்பட்ட சரக்கு ரயில் ஒன்று அம்மோனியா வாயுவை எடுத்துச் சென்றது. அந்த தண்டவாளத்தில் ரயில் சென்று கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று தடம் புரண்டதில் விபத்து ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, அந்த சரக்கு ரயிலில் வைக்கப்பட்டிருந்த அம்மோனியா வாயு வெளியேறி காற்றில் கலந்து விட்டது. அந்த நச்சு காற்றை சுவாசித்த 51 நபர்கள் […]
அமெரிக்காவில் கடந்த சில தினங்களாகவே வீசி வரும் கடுமையான பனிப்புயலால் ஒட்டுமொத்த நாடும் உறைந்து காணப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை திடீரென தோன்றிய வெடிகுண்டு சூறாவளியால் 15 லட்சம் பேருக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதன் பின் சீர் செய்யும் பணி நடைபெற்றது. மக்கள் கொரோனா பெருந்தொற்றால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்திற்கு தயாரான நிலையில் கொண்டாட்டங்களில் மீண்டும் ஈடுபட முடியாமல் திணறினர். இந்த குளிர்கால சூறாவளியால் நாடு முழுவதும் பனி படர்ந்து சாலைகள் மூடப்பட்டுள்ளதால் வாகனங்களில் […]
சீன விமான படையின் 43 விமானங்கள் கடந்த 24 மணி நேரத்தில் தைவான் ஜலசந்தியின் எல்லையை கடந்ததாக தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனா தனது ராணுவ நடவடிக்கை உரிமை கோரும் தீவுக்கு அருகே தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது. சீனா தைவானை தன்னுடைய சொந்த பகுதி எனக் கூறி கடந்த ஞாயிற்றுக்கிழமை தைவனை சுற்றியுள்ள கடல் மற்றும் வான்வெளியில் போர் பயிற்சி நடத்தியதாக கூறியுள்ளது. இந்நிலையில் சீனாவின் கோரிக்கைகளை கடுமையாக நிராகரிக்கும் தைவான் சீனா பிராந்திய அமைதியை […]
வடகொரியாவின் போர் விமானங்கள் தென்கொரிய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது. வடகொரியா மற்றும் தென் கொரியா இடையே பல ஆண்டுகளாக எல்லை மோதல் பிரச்சனை நீடித்து வருகிறது. இதனால் வடகொரியா அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் வடகொரியாவின் ஆளில்லாத டிரோன் விமானங்கள் இன்று தென்கொரிய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது. இதனை பார்த்து உஷாரான தென்கொரிய விமானப்படை போர் விமானங்கள், உளவு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் விரைந்து சென்றனர். இதனையடுத்து வடகொரியா ஆளில்லாத […]
பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்தவர் கால்பந்து ஜாம்பவான் பீலே ஆவார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை பாலோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பெருங்குடலில் இருந்த புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இதனால் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் நேற்று […]
பிரபல நாட்டில் தலைப்பாகை மற்றும் தாடி வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் சீக்கிய இனத்தை சேர்ந்த ஆண்கள் தலைப்பாகையும், தாடியும் வைத்துள்ளனர். இவர்கள் அதனை தங்களது மத அடையாளமாக கருதுகின்றனர். இந்நிலையில் அமெரிக்க நாட்டின் கடற்படைக்கு ஏகாஷ் சிங்க், ஐஸ்கிரத் சிங், மிலாப் சிங் என்ற 3 சீக்கியர்கள் தேர்வாகியுள்ளனர். ஆனால் அவர்கள் பயிற்சியில் பங்கேற்க வேண்டும் என்றால் தலைப்பாகையையும், தாடியையும் அகற்ற வேண்டும் என கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் நீதிமன்றத்தில் […]
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போரில் நடுநிலை வகிப்பதாக சீன வெளியுறவு மந்திரி கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் உக்ரைன் போர் தொடர்பில் ரஷ்யாவிற்கு, சீனா ஆதரவளிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், சீன நாட்டின் தலைநகரான பிஜிங்கில் நடந்த ஒரு நிகழ்வில் அந்நாட்டின் வெளியுறவு மந்திரியாக இருக்கும் வாங் யி தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டின் சூழலைப் பொறுத்தவரை ஒருவருக்கு ஆதரவாக இயங்காமல், எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றி […]
நேபாள நாட்டின் புதிய பிரதமராக பிரசண்டா புஷ்பா கமல் தாஹல் பதவி ஏற்றுக்கொண்டார். நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சித் தலைவரான பிரசண்டா 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்றார். நேபாள நாடாளுமன்றத்தின் 275 உறுப்பினர்களின் 165 பேர் பிரசன்னாவுக்கு ஆதரவு அளித்ததையடுத்து பிரதமர் ஆனார். பிரசண்டாவுக்கு நேபாள நாட்டின் ஜனாதிபதி வித்யா தேவி பண்டாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். #PushpaKamalDahal 'Prachanda' takes oath as New PM of #Nepal, sworn in by President […]
கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக ட்விட்டரில் வெறுக்கத்தக்க பேச்சு, குழந்தைகள் சித்திரவதை, தற்கொலை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழு என்கிற ஆலோசனை குழு அமைக்கப்பட்டது. இதில் வெறுப்பு, துன்புறுத்துதல் மற்றும் பிற தீங்குகளை ட்விட்டர் எவ்வாறு சிறப்பாக எதிர்த்து போராட முடியும் என்பதற்கான நிபுணத்துவம் மற்றும் வழிகாட்டுதல்களை இந்த குழு வழங்கி வந்தது. இந்நிலையில் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழுவை எலான் மஸ்க் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கலைத்து நடவடிக்கை […]
ஸ்பெயின் நாட்டில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பொன்டேவேத்ரா என்ற மாகாணத்தின் செர்டெடோ-கோடோபேட் நகரத்தில் ஒரு பேருந்து சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென்று அந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதனைத்தொடர்ந்து சாலை ஓரத்தில் இருக்கும் ஆற்றினுள் கவிழ்ந்து விழுந்து விட்டது. இதில் அந்த பேருந்தில் பயணித்த 6 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்து தொடர்பில் […]
பிரபல நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகள் குறித்து சர்வதேச ஊடகங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஈரான் நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் ஒரு இளம் பெண்ணை சரமரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்நாட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை அரசு இரும்பு […]
சீனாவில் தற்போது பி எஃப் 7 வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் சீனாவில் தினமும் கொரோனா தொற்று பாதிப்பு எத்தனை பேருக்கு ஏற்படுகிறது, அதில் எத்தனை பேர் கொரோனாவால் உயிரிழக்கின்றனர் என்பது குறித்த உண்மையான தகவல்களை அரசு வெளியிடுவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் லண்டனை சேர்ந்த சுகாதார தரவு நிறுவனம் ‘ஏர் பினிட்டி’ கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சீனாவில் தினமும் ஏறத்தாழ […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லை மோதல் நீடித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் எல்லையை தாண்டிய தாக்குதல்களை தடுப்பதற்காக தங்களின் எல்லை பாதுகாப்பை மேம்படுத்த நிதி வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. மேலும் அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ இதனை கூறியுள்ளார். […]
ரஷ்யாவின் தென்மேற்கு பகுதியில் சைபீரியா பிராந்தியத்தில் உள்ள கெமரோவோ நகரில் முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த முதியோர் இல்லம் முறையான அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஏராளமான முதியவர்கள் தங்கி இருக்கின்றனர். இந்நிலையில் முன்தினம் இரவு இந்த முதியோர் இல்லத்தில் திடீரென தீ பிடித்தது. ஆனால் நள்ளிரவு நேரம் என்ற காரணத்தினால் முதியவர்களால் உடனடியாக வெளியேற முடியவில்லை. இதற்கிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் […]
உக்ரைனும் அதன் ஆதரவு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு மறுப்பதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா 11 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பல நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். மேலும் இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் ரஷியா உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி தன்னுடன் இணைத்து கொண்டது. இதனால் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. மேலும் போரை முடிவுக்கு […]
பிரபல நாட்டில் பெண்கள் என்.ஜி.ஓ பணிகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தற்போது தலீபான்களின் ஆட்சி நடைபெறுகிறது. இதனால் தலீபான்கள் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக பல தடைகளை விதித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பெண்கள் உயர்கல்வி பயில கூடாது என தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற தலீபான்கள் தடை விதித்துள்ளனர். இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து அமெரிக்கா கூறியதாவது, “உலகம் முழுவதும் […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அந்த வகையில் பெண்களுக்கு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலவும் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச அளவிலும் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில் ஹெராத் நகரில் இன்று உயர்கல்வி தடைக்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மாகாண ஆளுநரின் இல்லத்தை […]
சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் காரணமாக சீனாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகள் நிரம்பி வழிகின்றன. அதேபோல் உயிரிழப்புகளும் அதிக அளவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஏராளமான உடல்கள் மயானங்களில் குவிந்து கிடப்பதாகவும், இடைவிடாமல் தகனம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த கொரோனா பலி எண்ணிக்கை தொடர்பாக சீன அரசு சரியாக தகவல் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சீனாவில் கொரோனாவால் ஒருவர் கூட இறந்ததாக […]
அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானின் உறவு புதுப்பிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் நாட்டுக்கு தொடர்ந்து பல்வேறு விதமான உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது. அதாவது ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே போர் தொடங்கிய போது மீண்டும் அமெரிக்கா பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டியது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானால் பாகிஸ்தான் நாட்டின் எல்லைப் பகுதிகளில் நடத்தப்படும் தாக்குதல்களை தடுப்பதற்காக பாகிஸ்தான் நாட்டுக்கு கூடுதல் நிதி உதவி வழங்குவதாக அமெரிக்கா புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ […]
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் தன் மனைவியுடன் கிறிஸ்துமஸ் மரத்தை வைத்து அலங்கரித்து புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். உலக நாடுகளில் கிறிஸ்தவ மக்கள் இன்று இயேசு கிறிஸ்துவின் பிறப்பான கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக வருடந்தோறும் அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக நடைபெறும். ஆனால், இந்த வருடத்தில் பனிப்புயலால் அமெரிக்க மக்கள் தங்கள் குடியிருப்புகளிலேயே எளிமையாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தன் ட்விட்டர் […]
அமெரிக்காவில் குளிர்கால புயல் எப்போதும் இல்லாத அளவுக்கு அதி தீவிரமாக இருக்கிறது. மோசமான வானிலை காரணமாக அமெரிக்காவின் இயல்பு நிலை முற்றிலும் முடங்கியுள்ளது. இங்குள்ள பல மாநிலங்களில் வெப்பநிலையானது மைனஸ் 0 டிகிரி செல்சியஸிற்கும் குறைவாகவே இருக்கிறது. அதே சமயம் தொடர்ந்து பனிப்பொழிவு நீடித்துக் கொண்டே இருப்பதால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் எதுவும் இன்றி அமெரிக்கா களை இழந்து காணப்படுகிறது. அதோடு பனிப்பொழிவின் காரணமாக சாலைப்போக்குவரத்து முதல் விமான போக்குவரத்து வரை அனைத்து போக்குவரத்துகளும் கடுமையான அளவுக்கு முடங்கியுள்ளது. […]
சீனாவில் தற்போது உருமாறிய பிஎப்7 கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் நடைபெறுகிறது. சீனாவில் மில்லியன் கணக்கான மக்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெய்ஜிங், ஷாண்டங் மாகாணத்தில் உள்ள கிங்டோவோ உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் தொற்றின் பாதிப்பு அதிக அளவில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரு நாளைக்கு 4,90,000 முதல் 5,30,000 பேர் வரை சீனாவில் […]
வருடம் தோறும் டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி இயேசு கிறிஸ்துவின் இறப்பை கொண்டாடும் விதமாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்தவர்களாக சிறப்பாக கொண்டாட முடியாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உலக தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் அமெரிக்க […]
வெளிநாட்டு பெண்கள் 2 பேரை கொலை செய்த வழக்கில் நேபாள நாட்டில் ஆயுள் தண்டனை பெற்றிருந்த கொலைகாரர் சார்லஸ் சோப்ராஜ் (78). இவரது முதுமையை கருத்தில் கொண்டு நேபாள சுப்ரீம் கோர்ட் தற்போது விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் காத்மாண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சோப்ராஜ் நேற்று பாரீஸ் சென்றடைந்துள்ளார். இந்நிலையில் பிரான்சில் உள்ள சோப்ராஜன் வக்கீல் இசபெல் கவுட்டன்ட் கூறியதாவது, சோப்ராஜ் சுதந்திரம் பெற்றதில் மிக மகிழ்ச்சியாக இருக்கிறார். அவர் இனி […]
பிரபல நாட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வாழும் மக்கள் தங்களது பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. இந்நிலையில் இண்டியானா மாகாணத்தில் உள்ள புளூங்டன் நகரில் ஒரு வணிக வளாகம் அமைந்துள்ளது. அந்த வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கான மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை […]
பிரபல நாட்டில் நடந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நாடான தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் நகரின் சாலையில் நேற்று எரிவாயு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி அதே பகுதியில் இருந்த பாலத்தின் மீது மோதி வெளியே வர முடியாமல் சிக்கியது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் லாரியை பத்திரமாக மீட்க முயன்றனர். ஆனால் திடீரென லாரி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 8 பேர் […]
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இங்கிலாந்துக்கான தூதர்கள், மூத்த ராணுவ அதிகாரிகள், தொண்டு நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் பிற பொதுப் பணியாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “இந்த அசாதாரண ஆண்டில் உங்களின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்புக்கு தனிப்பட்ட முறையில் நன்றி என கூறி அவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்”. இதனையடுத்து அவர்களது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் பற்றிய திட்டங்களையும் கேட்டு கலகலப்பாக உரையாடியுள்ளார். இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
பிரபல நிறுவனத்திற்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2016-ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற்றது. அப்போது அந்நாட்டு பேஸ்புக் பயனர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் தவறாக பயன்படுத்தியது. இதனால் நிறுவனம் இது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 6 ஆயிரம் கோடி ரூபாயை அபராதமாக செலுத்துவதாக […]
ஒருவர் சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் முறையாக சீனாவில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இது உலக நாடுகளில் பரவியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதாவது ஓமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரசால் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அங்குள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் கூட்டம் அலை மோதுகிறது. அதேபோல் பலி எண்ணிக்கை […]
துபாய் நாட்டில் அல்- பர்ஷா பகுதியில் முக்கிய சாலையின் மையப்பகுதியில் வங்காள தேச நாட்டைச் சேர்ந்த ஒருவர் காரை நிறுத்தியுள்ளார். அதன் பின் திடீரென அந்தக் காரை பின்னோக்கி செலுத்தியுள்ளார். இதில் மற்றொரு காரில் வந்த இந்தியர் ஒருவர் அதனை கவனிக்காமல் வந்து அந்த கார் மீது மோதியுள்ளார். இதனையடுத்து இரண்டு கார்களும் மற்றொரு கார் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சவுதி அரேபியாவை சேர்ந்த ஒரு குடும்பத்தில் உள்ள இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். […]
கடந்த வெள்ளிக்கிழமை 356 பயணிகளுடன் லண்டன் ஹூத்ரோ விமான நிலையத்திற்கு செல்ல இருந்த விமானம் ஒன்று அசர் பைஜான் நாட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இது குறித்து Swedish flightradar24 தளத்தில் கூறியதாவது, அவசர நிலைக்கான தகவல் தொடர்பு குறியீடுகளை தொடர்ந்து விமானம் அசர் பைஜான் தலைநகர் பாகுவில் உள்ள ஹெய்டர் அலியேவ் சர்வதேச விமான நிலையத்தில் திட்டமிடாமல் திரையிறக்கபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாகு விமான நிலையத்தின் பேஸ்புக் பக்கத்தில் 356 பயணிகள் விமானத்தில் இருந்ததாகவும் சரக்குகள் வைக்கும் […]