அஸ்திரேலியாவில் 90 மில்லியன் டாலர் மதிப்பிலான போதைப் பொருள்களை கடத்திய ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர். ஆஸ்திரேலியாவில் போலீஸ் நடத்திய போதைப் பொருள் ஒழிப்புச் சோதனையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 4 பேர் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் என்று தெரிந்தது. இங்கிலாந்திலிருந்து வந்த இவர்கள் போதைப் பொருள் விற்பனை செய்யும் குழுவை சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இதுவரை இல்லாத வகையில், 90 மில்லியன் ஆஸ்திரேலியா டாலர் மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். […]
Category: உலக செய்திகள்
ஹாங்காங் விமான நிலையத்துக்கு வளாகத்தில் நடைபெற்ற வந்த சற்று தணிந்த நிலையில் விமான சேவையை தொடங்கியுள்ளது ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட மசோதாவுக்கு எதிராக போராட்டம் தீவிரமாக நடைபெற்று வந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்கள் விக்டோரியா பூங்காவில் அமைதிப் பேரணி நடத்தினர்.ஆனால் ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் போலீசாரின் தடையை மீறி சாலைக்கு சென்றனர். இதனால் போலீசாருக்கும் , போராட்டக்காரர்களுக்கு மோதல் ஏற்பட்டது. இதேபோல ஹாங்காங் விமானத்தை முற்றுகையிடும் தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர். இதன் காரணமாக விமான சேவைகள் […]
அமெரிக்காவில், ஒரு முதலை ஒரே கடியில் தர்பூசணியை கடித்து சுக்குநூறாக்கும் வீடியோ வலைதளங்களில் வைரக பரவி பலரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடோ மாநிலத்தில் உள்ள ஒரு முதலை பண்ணையில், ‘பாம்பர்’ என்று பெயரிடப்பட்டு வளர்க்கப்பட்டு வரும் மிகப்பெரிய முதலை ஓன்று அண்மையில் நீரிலிருந்து வாயை திறந்தபடி கரையை நோக்கி வந்தது. இதனை கண்டவுடன் அந்த விலங்கியல் பூங்கா பராமரிப்பாளர் சிறிது தூரத்தில் இருந்தபடி, பெரிய அளவிலான ஒரு தர்பூசணி பழத்தை முதலையை நோக்கி வீசினார். அதனை முதலை லாவகமாக வாயில் கவ்விக்கொண்டு […]
மனநலம் குன்றிய 15 வயது சிறுமி மலேசியாவில் ஒரு விடுதியில் தங்கியிருந்து காணாமல் போன நிலையில் வனப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அயர்லாந்தில் வசித்துவரும் 15 வயது சிறுமியான நோரா ஆனி குய்ரின் என்பவர் மனநலம் குன்றியவர். இவர் விடுமுறையை கழிப்பதற்காக பெற்றோருடன் மலேசியாவுக்கு சென்றுள்ளார். அங்கு பெற்றோருடன் அச்சிறுமி செரெம்பன் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி திடீரென விடுதியிலிருந்து காணாமல் போயுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இறுதியாக போலீசில் […]
அமெரிக்காவில் கம்ப்யூட்டர்களை சேதப்படுத்தியதற்காக இந்திய மாணவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவின் நியூயார்க் நகரின் அல்பேனியில் இருக்கும் செய்ன்ட் ஜோஸ் கல்லூரியில் இந்திய மாணவர் விஷ்வநாத் அகுதோடா (வயது 27) படித்து வருகிறார். இந்த மாணவர் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி கல்லூரியில் உள்ள 66 கம்ப்யூட்டர் மற்றும் மானிட்டர்கள் உள்ளிட்டவற்றில் கில்லர் யு.எஸ்.பி (Killer USB) எனும் சாதனத்தை பயன்படுத்தி, வேண்டுமென்றே யுஎஸ்பி போர்ட்களை சேதப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அதன் பின் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி […]
ஹாங்காங்கை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியில் சீனா தங்களது படைகளை குவித்துள்ளதால் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் அரசை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதற்காக போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் ஹாங்காங் குற்றவாளிகளை சீனாவுக்கு அரசு அழைத்து செல்கிறது. ஆகவே அரசின் இந்த முடிவை எதிர்த்து மக்களின் போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து அரசு தனது முடிவை திரும்ப பெற்றது. இருப்பினும் ஹாங்காங் நிர்வாக ஆட்சியாளர் […]
கோவா விமான ஓடுதளத்தில் நாய்கள் இருந்த காரணத்தினால் ஏர் இந்தியா விமானம் தரை இறங்க முடியாமல் கடைசி நேரத்தில் தடைபட்டது. கோவாவின் டபோலி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று மும்பையில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்துள்ளது. அதிகாலை 3 மணி அளவில் அந்த விமானம் தரையிறங்க இருந்த நிலையில் விமான ஓடுதளத்தில் நாய்கள் இருப்பதை விமானி பார்த்துள்ளார். உடனடியாக விமானத்தை தரையிறக்குவதை நிறுத்திய விமானி வானத்திலேயே வட்டமடித்து கொண்டிருந்தார். இதையடுத்து ஓடுதளத்தில் நாய்கள் இருப்பதை விமான நிலைய அதிகாரிகளுக்கு […]
அமெரிக்காவில் பாம்பு ஒன்று மிக கடுமையான பசியால் அதன் வால் பகுதியை விழுங்கிய வினோதமான நிகழ்வு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாநிலத்தில் பிரண்ட் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில் ‘கிங் ஸ்நேக்’வகை பாம்பு ஒன்று பராமரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனது இந்த பாம்புக்கு தீராத பசி ஏற்பட்டதையடுத்து இருப்பிடத்தில் உணவு ஏதும் இல்லாததால் என்ன செய்வதென்று தெரியாமல் தனது வாலை சாப்பிட தொடங்கியது. இதனை பார்த்த சரணலாயத்தில் பணியாற்றிய ஊழியர் ஜெஸ்ஸி ரோத்தக்கர் என்பவர், உடனே […]
மலேசியாவில் சிறுமியை தூக்கிக்கொண்டு போனது பூதம் என்று மந்திரவாதி போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த மேயப் மற்றும் செபஸ்டின் மகளான மூளை வளர்ச்சி குறைபாடு கொண்ட 15 வயது சிறுமி நோரா குயிரியுடன் மலேசியாவிற்க்கு சுற்றுலா சென்றனர். இவர்கள் குடும்பத்துடன் மலேசியாவில் DUSUN ஹோட்டலில் தங்கினர். ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி அவர்கள் தங்கிய வீட்டில் இருந்து திடிரென நோரா குயிரின் காணாமல் போனார். அவரது பெற்றோர் மேயப் மற்றும் செபஸ்டின் வீடு முழுவதும் தேடி பார்த்தனர் கிடைக்கவில்லை. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் சோதனை செய்த […]
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா பேருந்து சேவையை ரத்து செய்துள்ளது. மத்திய அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370-ஐ ரத்து செய்தது மட்டுமில்லாமல், அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்திய அரசின் இந்த அதிரடி அறிவிப்புக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எதிர்ப்பை காட்டும் விதமாக இந்தியாவுக்கான தூதரை விலக்கிக் கொண்டது. அதுமட்டுமில்லாமல் ரயில் சேவையை நிறுத்தியது என அடுத்தடுத்து பாகிஸ்தான் நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது. […]
ஆகஸ்ட் 12_ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் இளைஞர்கள் தினமாக அனுசரிக்கப்படுகின்றது. சர்வதேச இளைஞர்கள் தினம் 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை லிஸ்பன் நகரில் நடைபெற்ற உலக நாடுகளின் இளைஞர் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் மாநாட்டில் சர்வதேச ரீதியில் இளைஞர்களின் பிரச்சினையும், இளைஞர்களின் செயல்பாடுகளையும் கவனத்தை கொள்ளும் வகையில் இளைஞர்களுக்கான சர்வதேச தினம் ஒன்றை பிரகடனப்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்தது. இதன்படி 1999 டிசம்பர் 17 ஆம் […]
சீனாவின் ஜேஜியாங் மாகாணத்தை லெக்கிமா புயலின் ருத்ர தாண்டவத்தில் இதுவரையில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கிழக்கு பகுதியில் இருக்கும் ஜேஜியாங் மாகாணத்தை லெக்கிமா என்ற புயல் ருத்ர தாண்டவமாக புரட்டி போட்டது. இந்த புயலின் போது மணிக்கு 187 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதால் 3000-த்திற்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. தொடர்ந்து அங்கு பெய்துவரும் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச் சரிவினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள விமான மற்றும் […]
மான்டனிக்ரோ என்ற குட்டி நாட்டில் உள்ள ஆலிவ் மரம் ஒன்று அதிக வயதான மரம் என்ற பெருமையை பெற்றுள்ளது. அறிவியல்பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் அந்த மரத்தின் வயது 2, 244 ஆண்டுகள் என நிரூபிக்கப்பட்டுள்ளது. 30 அடி நீளம் , அகலம் பச்சைப்பசேலென்ற காணப்படும் இலைகள் ஒழுங்கில்லாமல் பின்னிப் பிணைந்து முதல் பார்வையிலேயே இது ஒரு ஆலிவ் மரம் என்று அறிந்து கொள்ளக் கூடிய இந்த மரத்துக்கு என்று தனி சிறப்பு ஒன்று இருக்கிறது .இது இயேசு கிறிஸ்துவை […]
அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் காஷ்மீர் தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும் இரு நாடும் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறினார் . காஷ்மீர் பிரச்சினை என்பதை இந்தியா பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு பிரச்சினை என்ற தங்களது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் காஷ்மீர் பிரச்சனையில் இருதரப்பு பேச்சுவார்த்தை உதவ தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் ஏற்கனவே தெரிவித்த நிலையில் , அது இரு தரப்பு பிரச்சனை என்றும் காஷ்மீர் தொடர்பாக […]
சுமார் 3 அடி உயரமுள்ள ராட்சத கிளியின் புதைபடிவம் நியூசிலாந்தில் புதைபடிவ நிபுணர் ட்ரெவர் வொர்த்தி கண்டெடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பல்கலைக்கழகப் போராசிரியரும், புதைபடிவ நிபுணருமான ட்ரெவர் வொர்த்தி, நியூசிலாந்தில் தெற்கு பிராந்தியமான ஒட்டாகோவில் பகுதியில் புதைபடிவ ஆய்வில் ஈடுபட்டிருந்த போது 2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத கிளி புதைபடிவங்களை கண்டெடுத்துள்ளார். அந்த கிளியானது சுமார் 3 அடி உயரத்தில் 7 கிலோ எடையிலும், ஒரு சராசரி மனிதன் உயரத்தின் பாதிக்கும் மேலாக இருந்திருக்கும் என்று கூறப்படுகின்றது. இந்த கிளியின் வலிமையையும், அசாதாரண உயரத்தையும் வைத்து கிளி எப்படி இருந்துள்ளது என்று […]
ஆஸ்திரேலியாவில் ஸ்டீவ் இர்வினுக்கு அடுத்தபடியாக மற்றொரு நபர் முதலையை வைத்து சாகச நிகழ்ச்சி நடத்தி அசத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்டீவ் இர்வின் என்பவர் முதலை மனிதன் என்று அனைவராலும் வர்ணிக்கப்படுகிறார். ஏன் முதலை மனிதன் என்று அழைக்கப்படுகிறார் என்றால் இவர் சர்வ சாதாரணமாக முதலையை வைத்து சாகசம் செய்து அனைவரையும் புல்லரிக்க வைப்பார். இதையடுத்து உலகப் புகழ்பெற்ற “முதலை மனிதன் ஸ்டீவ் இர்வின்” கடந்த 2006 – ஆம் ஆண்டு காலமானார். இந்நிலையில் அவர் செய்த சாதனைகளை வேறு […]
மெக்சிகோவின் ஸகாடகஸ் மாநிலத்தில் வானத்திற்கும், பூமிக்குமாய் விஸ்வரூபம் எடுத்து சுழற்காற்று வீசியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மெக்சிகோவின் ஸகாடகஸ் (Zacatecas) மாநிலத்தில் இருக்கும் ஃப்ரஸ்னிலோ (Fresnillo) என்ற இடத்தில் கடந்த சில தினங்களாகவே காற்று மிக பயங்கர வேகத்தில் வீசி வந்தது. இந்நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென புழுதிப் புயலும், சுழற்காற்றும் சுழன்று அதிவேகமாக வீசத் தொடங்கியது. அப்போது சுழற்காற்றின் அசுர வேகத்தில் தூசு மண்டலம் ஒன்றிணைந்து வானத்திற்கும், பூமிக்குமாய் விஸ்வரூபம் எடுத்து மணிக்கு 112 கி.மீ […]
ஜம்மு விவகாரத்தில் பாகிஸ்தான் எடுத்துள்ள முடிவை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு சட்டப்பிரிவு 370 – ஐ ரத்து செய்து , காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதற்க்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. மேலும் நேற்று இந்திய தூதரை திருப்பி அனுப்ப பாகிஸ்தான் முடிவு எடுத்துள்ளதாகவும் , இந்தியாவுடன் வர்த்தக உறவை […]
உலகம் முழுவதும் இருந்து 18,00,000- த்துக்கும் அதிகமானோர் மெக்காவில் குவிந்துள்ளனர். சவூதி அரேபியாவின் மெக்காவில் உள்ள காபா என்ற இடத்திற்கு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகைக்காக ஆண்டு தோறும் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வது வழக்கம். அதன்படி நடப்பாண்டு ஹஜ் பயணத்திற்கு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் லட்சக்கணக்கானோர் சவுதிக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இதுபற்றி சவுதியின் கடவுச்சீட்டு இயக்குநரகத்தின் ஜெனரல் சுலைமான் பின் அப்துல் அஜிஸ் எஹியா (General Suleiman bin Abdul Azizi Al-Yehya) கூறும்போது, நடப்பாண்டு […]
ரஷ்யாவில் இளைஞர் ஒருவர் மிக உயரமான கட்டடத்தின் உச்சியில் சிமென்ட் கட்டைகளில் சர்வ சாதாரணமாக துள்ளிக் குதித்து ஓடும் சாகச வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகில் வாழும் பலர் நாம் ஏதாவது ஒரு சாதனைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் ஏதாவது சாகச வீடியோவை வெளியிட்டு அசத்தி வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் உயிரை பணயம் வைக்கும் விதமாக சர்வ சாதாரணமாக சாதனைகளை அரங்கேற்றி வருகின்றனர். அந்த வகையில்,ரஷ்யாவின் காடரின்பர்க் (Yekaterinburg) என்ற பகுதியில் வசித்து வரும் ஷெர்ஙஸ்டையாசென்கோ (Sherstyachenko) என்ற […]
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரை இந்தியாவுக்கே திருப்பி அனுப்ப பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு சட்டப்பிரிவு 370 – ஐ ரத்து செய்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்தது.மேலும் இதோடு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதற்க்கு சீனா மற்றும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. […]
ஆப்கானிஸ்தானில் இன்று தலிபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய வெடிகுண்டு தாக்குதல்களில் 18 பேர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் வருகின்ற செப்டம்பர் மாதம் 28_ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. சமீபத்தில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் அம்ருல்லா சாலேவின் அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 24 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதையடுத்து நேற்று அங்குள்ள தலிபான் தீவிரவாத அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இங்கு நடக்க இருக்கும் தேர்தல் மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் ஒரு நாடகமாகும். பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.இந்த நாடகத்தனமான […]
நோபல் பரிசு பெற்ற முதல் கருப்பின பெண் எழுத்தாளர் டோனி மாரீசன் உடல்நலக் குறைவால் காலமானார். அமெரிக்காவில் உலக புகழ் பெற்ற கருப்பின பெண் எழுத்தாளர் டோனி மாரீசன் Beloved, Song of Solomon போன்ற பல்வேறு புத்தகங்கள் எழுதி நோபல் பரிசு பெற்றார். டோனி மாரீசன் எழுதிய சுதந்திர வேட்கை, இனவிடுதலை போன்றவை பல்வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தனது 40 வயது முதல் புத்தகத்தை எழுதி வந்த நிலையில் அடுத்தடுத்து எழுதிய ஆறு நாவல்களால் பெரும் புகழ் பெற்றார். இவர் தற்போது 88 வயதில் நியூயார்க்கில் உடல்நலக்குறைவால் காலமானார். […]
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் பொறுமையை கடைபிடிக்குமாறு ஐநா வலியுறுத்தியுள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு சட்டப்பிரிவு 370 – ஐ ரத்து செய்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்தது. மேலும் இதோடு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதற்க்கு சீனா மற்றும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும்,இந்தியாவுக்கான […]
ஆப்கானிஸ்தானில் நடைபெற இருக்கும் தேர்தலை நிறுத்த நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று தலிபான் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் வருகின்ற செப்டம்பர் மாதம் 28_ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது. அங்கு ஜனாதிபதியாக இருக்கும் அஷ்ரஃப் கானி இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.ஆப்கானிஸ்தானின் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் அம்ருல்லா சாலேவின் அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 24 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்நிலையில் இன்று அங்குள்ள தலிபான் தீவிரவாத அமைப்பினர் […]
இந்திய நாட்டிற்க்கான பாகிஸ்தான் தூதரை திரும்ப அழைக்க பாகிஸ்தான் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு சட்டப்பிரிவு 370 – ஐ ரத்து செய்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்தது.மேலும் இதோடு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதற்க்கு சீனா மற்றும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் இந்தியாவுக்கான […]
மத்திய அரசு காஷ்மீர் சிறப்பு சட்டத்தை நீக்கியதற்கு ஐக்கிய அரபு எமிரெட்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு இரத்து செய்யப்பட்டு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேஷமாக மாற்றி மத்திய அரசு கொண்டவந்த காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவை மற்றும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்க்கு ஆதரவும் , எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது மத்திய அரசின் இந்த முடிவை ஐநா வரை கொண்டு […]
காஷ்மீர் விவாகரம் தொடர்பாக இந்தியா எடுத்த முடிவிற்கு சீனா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 370, 35A ஆகியவை ரத்து செய்யப்பட்டு காஷ்மீரை 2 மாநிலங்களாக பிரிக்கும் மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்த போதே எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தனர். மேலும் காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட மாநில அந்தஸ்தை ரத்து செய்ததோடு மட்டுமில்லாமல், […]
யானைகள் அழிந்தால் வளிமண்டலத்தில் பெரும் தாக்கம் ஏற்படும் என்று உலக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யானைகள் அழிந்தால் வளிமண்டலத்தில் இருக்கும் கார்பன்டை ஆக்சைடு அளவு அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வேகமாக வளரும் மரங்களை யானைகள் அதிகம் உண்ணும் என்றும், வேகமாக வளரும் மரங்களுக்கு கார்பன் டை ஆக்சைடை அதிக அளவு உட்கொள்ளும் என்றும் தெரிவித்தனர். மேலும் யானைகள் அழிந்தால் இம்மரங்கள் அதிக அளவு வளர வாய்ப்பு இருப்பதாகவும், பகலில் உட்கொள்ளும் ஆக்ஸைடை விட இரவில் வெளியிடும் […]
இதயத்தின் நுண்ணிய செயல்பாடுகளை கண்டறியும் விதமாக இதயத்தை முப்பரிமானத்தில் பார்க்கக்கூடிய பரிசோதனை நடைபெற்று வருகிறது. உலக அளவில் மிகப்பெரிய ஆராய்ச்சியாக பேசப்படும் இதயத்தை முப்பரிமாணத்தில் பார்த்து பரிசோதனை செய்யும் முயற்சியை விஞ்ஞானிகள் நடத்தி வருகின்றனர். Strem செல் என பெயரிடப்பட்ட இந்த பரிசோதனையில் இடைநீக்கம் செய்யப்பட்ட ஹைட்ரோஜெல்களின் மூலம் மார்பு பகுதியை தடையின்றி ஊடுருவி ஆராயும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் முப்பரிமாணத்தில் பார்ப்பதன் மூலம் இதயத்தில் உள்ள நுண்ணிய பாகங்களை கூட ஆராய முடியும் என்று விஞ்ஞானிகள் […]
மனதில் நினைக்கும் சொற்களை ஸ்கிரீனில் டைப் செய்யும் திறன் கொண்ட கருவியை உருவாக்க பேஸ்புக் நிறுவனம் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்பொழுது மனிதனின் அனைத்து செயல்பாடுகளையும் மிஞ்சும் அளவிற்கு தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றனர். அதிலும் அதீத தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஃபேஸ்புக் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதற்கு முன்பாக கூகுள் நிறுவனம் பேசுவதன் மூலம் ஸ்கிரீனில் டைப் செய்யும் வசதியை ஏற்படுத்தி தந்தது. அதன்படி விரல்களால் டைப் செய்து நேரம் செலவிடுவதை விட எளிதாக […]
அமெரிக்காவின் வணிக வளாகம் ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் 20 பேர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள வடக்கு கலிபோர்னியாவில் கடந்த ஞாயிற்று கிழமை நடந்த உணவு திருவிழாவிழா நடந்த துப்பாக்கிசுட்டு சம்பவத்தில் 3 பேரும் , மிஸ்ஸிஸிப்பியில் வணிக வளாகத்தில் கடந்த செவ்வாய் கிழமை நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்காவைஅதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் குறித்த விசாரணை நடைபெறு வருகின்றது. அடுத்தடுத்துக்கு நடந்த இந்த இரண்டு சம்பவத்தின் வலி தீருவதற்குள் மற்றொரு துப்பாக்கி சூடு சம்பவம் […]
சர்வதேச பொருளாதார மதிப்பு தரவரிசைப் பட்டியலில் இந்தியா ஏழாவது இடத்தில் தள்ளப்பட்டிருப்பதாக உலக வங்கியின்புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் 20.5 டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட பொருளாதாரமாக அமெரிக்கா மீண்டும் முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் சீனா 13.6 டிரில்லியன் டாலர் மதிப்புடன் 2_ஆவது இடத்திலும் . ஜப்பான் 5 ட்ரில்லியன் டாலர் மதிப்புடன் மூன்றாவது இடத்திலும் , ஜெர்மனி 4 ட்ரில்லியன் மதிப்புடனும் நான்காவது இடத்தில் உள்ளது. 2.82 ட்ரில்லியன் டாலர் பொருளாதார மதிப்புடன் பிரிட்டன் […]
நெதர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் வித்தியாசமாக முழுவதும் ரிமோட்டில் இயங்கும் காரை வடிவமைத்து இயக்கி வருவது பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. நெதர்லாந்தை சேர்ந்த பிஜோர்ன் ஹர்ம்ஸ் அர்மண்ட் என்ற இடத்தில் வசித்து வருகிறார். கணினி மென்பொறியாளரான இவர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் காரை வடிவமைத்து இயக்கி வருகிறார். குழந்தைகள் விளையாடும் கார் போல் ரிமோட் மற்றும் ஜாய் ஸ்டிக் போன்றவற்றின் மூலம் இந்த புதிய காரை இயக்கிக் காட்டி அசத்துகிறார். மேலும் அடுத்த கட்டமாக இந்த காரை குரல் […]
நாசா விஞ்ஞானிகள், பூமியைப் போலவே இருக்கும் புதிய கிரகத்தை கண்டபிடித்துள்ளனர். நாசா விஞ்ஞானிகள், டெஸ் என்ற தொழில்நுட்பத்தின் துணையுடன் இந்த புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர் . விஞ்ஞானிகள் இந்தக் கிரகத்திற்கு ஜி ஜே 357 என்று பெயரிட்டுள்ளனர். இந்தக் கிரகமானது பூமியிலிருந்து சுமார் 31 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கின்றது .மேலும் இந்தக் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் விஞ்ஞானிகள். இந்தக் கிரகம் நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி வருவதனால் அதிகக் குளிராகவோ, அதிக சூடாகவோ இல்லாததால் […]
நிறுவனத்தை கூல் மற்றும் ட்ரெண்டிங்காக வைத்துக் கொள்ளும் நோக்கில் ஐபிஎம் நிறுவனம் சுமார் ஒரு லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. உலகின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான ஐபிஎம் நிறுவனம் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் நிறுவனத்தின் கொள்கை மற்றும் இலக்கை நோக்கி பயணிக்க இயலாத சுமார் ஒரு லட்சம் ஊழியர்களை கடந்த ஐந்து ஆண்டுகளாக பணி நீக்கம் செய்ததாக நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் […]
சீனா-மலேசியா நாடுகளுக்கிடையே நட்பின் பாலமாக ‘யீயீ’ பாண்டாவானது திகழ்கிறது. சீனா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கிடையே உள்ள நட்பினை மேம்படுத்த பல்வேறு விதமாக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இதில் ஒன்றாக பாண்டாக்களை இரண்டு நாடுகளுக்கிடையே பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. சீனாவிலிருந்து மலேசியாவுக்கு பரிமாற்றம் செய்யப்படும் பாண்டாக்கள் இனப்பெருக்கம் செய்யவும், பிறந்த குட்டி பாண்டாக்களுக்கு 2 வயதானதும் சீனாவிற்கு கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தின் நோக்கமாகும். தற்போது மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் புதியதாக பிறந்த பாண்டாவிற்கு பெயர் சூட்டும் விழா நடத்தப்பட்டு சீன மொழியில் ‘யீயீ’ என பெயர் சூட்டப்பட்டது. ‘யீயீ’ என்ற பெயருக்கு நட்பு என்று பொருளாகும். இதை போற்றும் விதமாக இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று கலந்துக் கொண்ட அந்நாட்டு அமைச்சர் சேவியர் […]
சவூதி அரேபியாவில் ஆண்களிடம் அனுமதி பெறாமலேயே பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் வசித்து வரும் எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டுமென்றால் தங்கள் கணவர், தந்தை அல்லது பாதுகாவலராக இருக்கும் ஆணிடம் அனுமதி பெற்றே செல்ல வேண்டும் என்ற விதிமுறை நீண்ட காலமாக இருந்து வந்தது. சவூதியின் இந்த விதிமுறைகள் ஆணாதிக்கத்தின் உச்சம் என சர்வதேச அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் தற்போது சவூதி அரேபிய அரசு அந்த விதியை நீக்கியுள்ளது.அதன்படி 21 வயதைக் கடந்த […]
அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தகம் போர் நீடித்து வரும் நிலையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா மீண்டும் வரியை உயர்த்தி இருக்கிறது. சமீபத்தில் பொருளாதாரத்தில் அமெரிக்காவை மிஞ்சும் அளவிற்கு சீன வளர்ச்சி அடைந்தது. இதையடுத்து சீன அமெரிக்கா இடையே ஏற்பட்டது. இதனால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 25 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா ஏற்கனவே 25 சதவீதம் வரி விதித்துள்ளது. இந்நிலையில் மேலும் 30 ஆயிரம் கோடி டாலர்கள் மதிப்பிலான […]
இந்தியா-பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்தால் காஷ்மீர் பிரச்சினையில் உதவ தயராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா வரைபடத்தின் மேல் முனையில் இருக்கும் மாநிலம் ஜம்மு காஷ்மீர் . இதனால் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வருகின்றது. இரண்டு நாடுகளுமே காஷ்மீர் பிரச்சனைக்கான தீர்வை நாடுகின்றன. இதையடுத்து பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிபர் டிரம்ப்_பை சந்தித்தார். பின்னர் அதிபர் டிரம்ப் காஷ்மீர் பிரச்சினையில், மத்தியஸ்தம் செய்யுமாறு பிரதமர் மோடி என்னை கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். […]
பல்வேறு நாட்டு அமைச்சர்கள் மாநாடு நடக்கும் தாய்லாந்தின் தலைநகர் பாங்காங்கில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கில் ஆசியன் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இந்தியா , அமெரிக்கா உள்ளிட்ட நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோ உள்பட பல்வேறு ஆசியன் நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் அந்நாட்டின் தலைநகர் பாங்காங்கில் உள்ள மூன்று பகுதிகளில் அடுத்தடுக்க குண்டு […]
தன் கற்பை காக்க போராடியதன் விளைவாக ஆயுள் தண்டனை பெற்று விடுதலை அடைந்த சின்டோயா பிரௌன். அமெரிக்காவின் டென்னிஸீ மாகாணத்தை சேர்ந்த சின்டோயா பிரௌன் தனது குழந்தைப் பருவத்தைக் கடினமாக எதிர்கொண்டார். அவரது நண்பர் ஒருவரின் நிர்பந்தத்தால் போதை மருந்து அளிக்கப்பட்டு சிறுவயதிலேயே கூட்டு வன்புணர்வுக்கு ஆளானார். இதை அறிந்த ஜான் ஆலன் என்பவர் பிரௌனை ஏமாற்றி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று தன்னுடன் பாலியல் உறவு கொள்ளச் சொல்லி வற்புறுத்தியுள்ளார்.இந்த நிலையில் தன்னை தற்காத்துக் கொள்வதற்காக ஆலனின் துப்பாக்கியால் பிரௌன் […]
சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு செப்டம்பர் முதல் தேதியில் இருந்து பத்து சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து இறக்குமதியாகும் 25 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா முன்னரே 25 சதவீத வரி விதித்திருந்தது .அதேபோல் சீனாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் 11 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு வரிவிதித்திருந்தது. ஜப்பானில் கடந்த ஜுன் மாதம் அமெரிக்க – சீன அதிபர்கள் சந்தித்துப் பேசியதை அடுத்து, […]
ரஷ்ய வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க அமெரிக்கா உதவிக்கரம் நீட்டியுள்ளது. ரஷ்யாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளின் சைபீரியா ,அல்டாய், ஸ்ஹெலிஐபின்ஸ் உள்ளிட்ட இடங்களில் 3 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு நிலங்களில் காட்டுத் தீ பரவியது. இதனால் பல்வேறு மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு ராணுவ வீரர்களை கொண்டு தீயை அணைக்கும் பணிதீவிரமாக நடைபெற்று வருகிறது . இந்நிலையில் ரஷ்ய அதிபரை தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் சைபீரிய வனப்பகுதியில் […]
மனித செல்லை விலங்குகளில் செலுத்தி மனிதன் பாதி மிருகம் பாதி என்ற வகையில் புதிய உயிரினத்தை உருவாக்க ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். விண்வெளி ஆய்வு போன்றவற்றிற்கு பயன்படுத்தும் நோக்கில் மனிதன் சிம்பான்சி கலப்பினத்தை உருவாக்கும் முயற்சிகள் சோவியத் இரஷ்யாவில் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.மேலும், சீனாவிலும் கூட இத்தகைய ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இயற்கையோடு விபரீதமாக விளையாடும் முயற்சி என்ற வகையில் மனித விலங்கு கலப்பின கரு ஆய்வு என்பது சர்ச்சைக்குரிய ஆய்வுகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது. […]
அயன் மேனை போலவே தொழிலில்நுட்பத்தில் புகுந்து விளையாடும் எலன் மாஸ்க்கின் கதையை இறுதிவரை படிப்போரின் வாழ்வின் நிச்சயம் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். திரைப்படத்தில் வரும் அயன் மேன் கதாபாத்திரத்தை போல தொழில்நுடபத்தின் மீது மோகம் கொண்டதால் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த எலன் மிஸ்கின் கதை வாசிப்போர் அனைவரையும் வியப்பூட்டச் செய்வதோடு , வாழ்க்கையிலும் ஒரு விதமான மாற்றத்தை கட்டாயம் ஏற்படுத்தும். எலன் மஸ்க் என்பவர் உலக பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அனால் […]
ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒசாமா பின்லேடனை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஏனென்றால் பின்லேடன் பிரபல பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவின் தலைவனாவான். பின்லேடன் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் உட்பட பல்வேறு பயங்கரவாத செயலில் ஈடுபட்டு அட்டூழியம் செய்து வந்துள்ளான். இதையடுத்து அமெரிக்க கடற்படை கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானின் அபோடாபாத்தில் வைத்து அவரை சுட்டுக் கொன்றது. இதையடுத்து அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு முடிந்துவிட்டது என்று நினைக்க அவரது மகன் ஹம்சா பின் […]
அமெரிக்காவில் வரலாற்றுப் புகழ் மிக்க கத்தோலிக்க தேவாலயம் ஒன்று இரண்டு தினங்களுக்கு முன் தீக்கிரையானது . அமெரிக்காவின் மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மெஸ்பேலியா என்ற இடத்தில் 1895 ஆம் ஆண்டு மரப்பலகையினால் இந்த தேவாலயமானது கட்டப்பட்டது. இந்நிலையில், இந்த தேவாலயம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் திடீரென தீப்பற்றியது. பின்னர், வளாகம் முழுவதும் தீப்பற்றிய நிலையில் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் . இதனால் , சுமார் 27 கோடி ரூபாய் மதிப்புக்கு […]
ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோருக்கு nomophobia என்ற வியாதி இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் இல்லை என்றால் மனிதர்களே இல்லை என்ற அளவிற்கு தொழில்நுட்பம் மனிதர்களின் அன்றாட வாழ்வில் ஒட்டி காணப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு தொழில்நுட்பத்தையும் நாம் பயன்படுத்துகின்ற அளவை வைத்து ஒவ்வொரு விதமான போபியா வியாதி தாக்குகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தற்போது அனைவராலும் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் என்றால் அது ஸ்மார்ட்போன் தான் ஸ்மார்ட்போன்கள் இல்லாமல் மனிதர்களால் ஒருநாள்கூட தாண்டி இருக்க […]
ரஷ்யாவில் முன்னாள் காதலன் காதலியை கத்தியால் குத்தி கொன்று சூட்கேசில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ரஷ்யாவைச் சேர்ந்த எகெடெரினா கரக்லொனாவா என்ற 24 வயது பெண் இன்ஸ்டாகிராமில் புகழ் பெற்றவராக விளங்குகிறார். இவர் தனது இன்ஸ்டாவில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். காரணம் எகெடெரினா 90 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார். இந்நிலையில் சில நாட்களாக எகெடெரினாவை காணவில்லை என்று பல இடங்களில் தேடிய பின், அவரது பெற்றோர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் […]