மேம்பாலத்தில் செல்லும் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக திடீரென மாயமாக மறைவதை கண்டு நெட்டிசன்கள் குழப்பமடைந்து வருகின்றனர். ‘ஆப்டிக்கல் இல்யூஷன்’என்று சொல்லப்படும் ஒளியியல் மாய தோற்றத்தின் தொழில்நுட்பத்துக்கு உலகளவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ‘ஆப்டிக்கல் இல்யூஷன்’ மாயை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணையதளத்தில் அடிக்கடி வெளியாகும் வீடியோக்களை மற்றும் புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும், என்ன நடக்கிறது என்பதை அறிய பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் தற்போது ‘ஆப்டிக்கல் இல்யூஷன்’ மாயையால் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. […]
Category: உலக செய்திகள்
நாடுகடத்த எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்துள்ள மல்லையா மனு இன்று விசாரணைக்கு வருகின்றது. இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன்பெற்று விட்டு அதை திரும்ப செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகின்றது. லண்டன் உயர்நீதிமன்ற நீதிபதிகள் […]
அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா விதித்துள்ள அதிக வரியை திரும்ப பெற வேண்டுமென்று அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். நாளை மற்றும் நாளை மறுநாள் ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் 14 வது ஜி 20 உச்சி மாநாடு நடைபெறுகின்றது. இதில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 20 […]
ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் 14 வது ஜி 20 உச்சி மாநாடில் மோடி சந்திப்பை எதிர் நோக்கியுள்ளேன் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். நாளை ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் 14 வது ஜி 20 உச்சி மாநாடு நடைபெறுகின்றது. இதில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 20 […]
பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேசியுள்ளார். வருகின்ற 28_ஆம் தேதி ( நாளை ) ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் 14 வது ஜி 20 உச்சி மாநாடு நடைபெறுகின்றது. இதில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 20 நாடுகளின் […]
இலங்கையில் நடந்த கொடூர வெடிகுண்டு சம்பவத்தால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளதாக கத்தோலிக்க தேவாலயம் கார்டினல் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 21_ஆம் தேதி நடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் நடந்த கொடூர தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 258 பேரின் உயிரை பறித்த இந்த கொடூர நிகழ்வில் 500_க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதை நிகழ்த்தியது தாங்கள் தான் என்று IS பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்நிலையில் , இலங்கையின் கத்தோலிக்க தேவாலயம் கார்டினல் மால்கோல்ம் ரஞ்சித் கடந்த […]
செல்ஃபிக்கு போஸ் கொடுக்க மறுத்ததால் விமான நிலைய பணிப்பெண்ணை குடிபோதையில் தாக்கியவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லெ தி ஜியாங் (Le Thi Giang) என்பவர் வியட்னாமின் தன் ஹோவா (Tahn hoa) -வில் உள்ள தோ சுவான் (Tho Xuan) என்ற விமான நிலையத்தில் வியட்ஜெட் ஏர் நிறுவனப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் உங்களுடன் (லெ தி ஜியாங்) செல்பி எடுக்க வேண்டும் என்று 3 பயணிகள் கேட்டுள்ளனர். அதற்கு அந்த பெண்ணும் சரி என சம்மதித்து அவர்களுடன் செல்ஃபி […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரப்ம் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் எழுத்தாளர் ஒருவர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூ யார்க் என்ற பத்திரிக்கையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான இ ஜீன் கரோல் சமீபத்தில் கட்டுரை ஒன்றை எழுதினார். அதில் 24 ஆண்டுகளுக்கு முன்பு தான் மேன்ஹாட்டனில் உள்ள பெர்க்டாஃப் குட்மேன் என்ற ஆடை நிறுவனத்தில் அதிபர் டிரம்பை சந்தித்தேன். அப்போது அவர் என்னை ஆடை மாற்றும் அறைக்குள் இழுத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுக்க முற்பட்டார். அதிர்ந்து போன […]
பயங்கரவாதத்திற்கான நிதியை பாகிஸ்தான் கட்டுபடுத்தவில்லை என்றால் அந்நாடு கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுமென்று எப்.ஏ.டி.எப் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் நடைபெறும் கொடூர பயங்கரவாத தாக்குதலை அனைத்து நாடுகளும் வன்மையாக கண்டிப்பதுடன் , பயங்கரவாதத்தை ஒடுக்கு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றது என்றும் குற்றம் சாட்டினார். மேலும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் நிதியும் அளிக்கின்றது என்று சொல்லப்பட்ட நிலையில் , சட்டவிரோதமாக பண பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்கும் சட்ட விரோத நடவடிக்கைகளை பிரான்சு தலைநகர் பாரிசை தலைமையிடமாக கொண்ட சட்டவிரோத […]
ஆப்ரிக்காவில் இறந்துபோன யானைகளின் உடல்களை தின்ற 537 அரிய வகை கழுகுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு ஆப்ரிக்காவின் போட்ஸ்வானா வன பகுதியில் வேட்டையாளர்களால் கொல்லப்பட்ட 3 யானைகளின் உடல்களை உண்ட 537 கழுகுகள் உயிரிந்துள்ளன. பொதுவாக வனப்பகுதியில் விலங்குகள் ஏதாவது இறந்து கிடந்தால் கழுகுகள் அவற்றை உண்பது வழக்கமான செயல். ஆனால் இங்கு உயிரிழந்த யானைகளை உண்ட கழுகுகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. கழுகுகள் மரணமடைந்தது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது, உயிரிழந்த 3 யானைகளின் உடல்களிலும் விஷம் […]
உலகிலேயே நான்காவது அதிகபட்ச வெப்பநிலையை கொண்ட நாடு பாகிஸ்தான் என்று சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் முழுவதும் நடைபெறும் வானிலை மாற்றம், பருவமழை மற்றும் வெப்பநிலை குறித்த தகவலை சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையம் ஆய்வு மேற்கொண்டு தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 2016_ஆம் ஆண்டு ஜூலை 21_ஆம் தேதி குவைத்திலும் , 2017_ஆம் ஆண்டு மே 28_ஆம் தேதி பாகிஸ்தானிலும் 54 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியதாக சொல்லப்பட்டது. இந்த அளவுகளில் சந்தேகம் இருப்பதாக குற்றம் சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையம் மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் […]
இந்திய அரசு பாகிஸ்தானுடன் பேச்சுவாரத்தை நடத்த தயாராக இருக்கின்றது என்று பாகிஸ்தான் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியை இந்திய அரசு மறுத்துள்ளது. புல்வாமா தாக்குதலையடுத்து இந்திய பாகிஸ்தானை புறக்கணித்து வருகின்றது. பாகிஸ்தான் பேச்சுவாரத்தை நடத்த தொடர்ந்து முயற்சித்தும் , பயங்கரவாதத்தை கட்டுபடுத்தாமல் இருப்பதால் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று இந்தியா உறுதியுடன் இருந்து வருகின்றது. சமீபத்தில் ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கூட மோடியும் , இம்ரான்கானும் நேருக்கு நேர் ஒரு அறையில் சந்தித்தும் […]
டொனால்டு டிரம்பை சந்திப்பதற்கு முன்பு அதிபர் கிம் ஜாங் அன்னுடன் பேச்சு வார்த்தை நடத்த 2 நாட்கள் பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் வட கொரிய சென்றுள்ளார். சீன நாட்டின் அதிபராக இருப்பவர் ஜி ஜின்பிங். இவர் தற்போது 2 நாள்கள் பயணமாக வடகொரியா சென்றார். பிற நாடுகளில் இருந்து தனிமைப் படுத்தப்பட்ட வடகொரியா போன்றபி நாடுகளுக்கு 14 ஆண்டுகளுக்கு பின் பயணம் மேற்கொண்ட முதல் சீன அதிபர் ஜி ஜின்பிங்தான். வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங் சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.சீன […]
உலகம் முழுவதும் 220 கோடி பேர் காதாரமான குடிநீர் வசதியின்றி தவிப்பதாக ஐநா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பருவ மழை போதிய அளவு பெய்யாமல் இருந்ததால் இந்தியாவில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகின்றது. மக்கள் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் கடுமையாக அவதிப்படுகின்றனர். வீதியெங்கும் மக்கள் காலி குடங்களுடன் வீதியெங்கும் அலைந்து திரிகின்றனர். இந்நிலையில் உலக சுகாதார நிறுவனமும் , ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான யூனிசெப் அமைப்பும் இணைந்து ஆய்வு ஒன்றினை நடத்தியது.அந்த ஆய்வில் கடந்த […]
அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் ஒர்லாண்டோவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை துவங்கினார். அமெரிக்காவில் அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகளாகும். இதன்படி, டொனால்டு டிரம்ப் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்டு, ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த வெற்றியினால் அமெரிக்காவின் 45-வதுஅதிபராக டிரம்ப் பதவியேற்றுக்கொண்டார். சமீபத்தில் அதிபர் டிரம்ப் தான் இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், அடுத்த ஆண்டு (2020) நவம்பர் 3 -ஆம் […]
ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மே 10ம் தேதி ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் மற்றொரு பயங்கர நிலநடுக்கம் ஆண்டு ஜப்பானில் இன்று ஏற்பட்டுள்ளது. கடந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி இருந்தது ஆனால் அதனை விட பயங்கரமான நிலநடுக்கம் ஜப்பானில், யமகட்டா உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஏற்பட்டு உள்ளது. இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த […]
அந்தமானில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4.9 ஆக பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை சரியாக 3 மணி 45 நிமிடத்தில் அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இலேசான நிலநடுக்கமாக ஏற்பட்ட இது ரிக்டர் அளவு கோளில் 4.9 ஆக பதிவானது.இந்த நிலநடுக்கத்தால் அங்கு இருந்த அடுக்குமாடி கட்டிடங்கள் அதிர்ந்தன. நிலநடுக்கம் ஏற்பட்டதில் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எவ்விதமான தகவலும் இல்லை.
சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கத்தால் 11 பேர் உயிரிழந்து , 122 பேர் காயமடைந்ததுள்ளனர். சீனாவில் உள்ள சிசுவான் மாகாணத்தில் நேற்று இரவு 10.55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பீதி அடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.இது ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவானது. பின்னர் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் மீண்டும் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 5.3 ஆக பதிவானது. தொடர்ந்து இரு நிலநடுக்கங்களால் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். நிலநடுக்கத்தில் உயரமான கட்டிடங்கள் […]
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற மோடியும் , இம்ரான்கானும் 9 மணி நேரம் ஒரே அறையில் இருந்து எவ்வித பேச்சும் இல்லாமல் அமைதியாக இருந்துள்ளனர். ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மோடி , பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உட்பட பல்வேறு உலக நாட்டு தலைவர்கள் ஒரே இடத்தில் ஓன்று கூடினர். ஷாங்காய் மாநாட்டின் போது பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ஆர்வம் காட்டியது. ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை […]
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் இம்ரான்கான் பரஸ்பரம் சந்தித்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மோடி , பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உட்பட பல்வேறு உலக நாட்டு தலைவர்கள் ஒரே இடத்தில் ஓன்று கூடினர். ஷாங்காய் மாநாட்டின் போது பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ஆர்வம் காட்டியது. ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை முழுமையாக கைவிடாதவரை, பேச்சுவார்த்தை நடத்தப்பட வாய்ப்பு […]
கலிபோர்னியா மாகாணத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ‘ராட் பார்’ என்ற மதுபான விடுதி அங்கு வருபவர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. சான் பிரான்சிஸ்கோவின் டன்ஜியன் என்ற பகுதி சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடமாக உள்ளது. இங்கு புதிதாக ‘ராட் பார்’ என்ற மதுபான விடுதி ஓன்று திறக்கப்பட்டுள்ளது.இந்த விடுதிக்கு வருபவர்களுக்கு எலி வால் போன்ற பீட்ரூட் வேர் ஊறிய மதுபானம் கொடுக்கப்படுகிறது. பின்னர் அங்குள்ள அனைவருமே இருட்டறையில் பராமரித்து வளர்க்கப்பட்டு வரும் எலிகளை பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் அதனை […]
ரஷ்யாவில் சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பனி அறிய வகை ஓநாயின் தலை ஓன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் சைபீரியாவில் உருகி கொண்டு இருக்கும் பணிகளுக்கு இடையே அழிந்த மாமோத் வகை யானைகளின் தந்தம் கிடைக்குமா என்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் தேடி வந்தனர். அப்போது அங்கே திரெக்டியாக் நதிக்கரையோரம் வாழ்ந்து வந்த ஒருவர் உயிரினத்தின் தலை கண்டு பிடிக்கப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் அங்குள்ள ஆராய்ச்சி மையத்தில் ஒப்படைத்தனர். ஆராய்ச்சி மையத்தில் ஒப்படைக்கப்பட்ட தலையை ஆராய்ச்சியாளர்கள் தீவிர சோதனை நடத்தி ஆய்வு […]
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளே அதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும் என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இரு நாள் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பயணம் சென்ற போது குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்ட புனித அந்தோனியார் தேவாலயத்தைபார்வையிட்டதாக தெரிவித்தார். அந்த புனிதமிக்க தேவாலயத்தில் அப்பாவி பொது மக்களின் உயிர்களை காவு வாங்கிய பயங்கரவாதத்தின் கோர […]
இந்தியாவின் பாதுகாப்பு துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தளபாடங்களை வழங்க தயார் என்று அமெரிக்க டிரம்ப் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. ரஷ்யாவிடமிருந்து எஸ்400 ரக ஏவுகணைகளை அதிகம் வாங்குவது இந்தியா-அமெரிக்கா ஒத்துழைப்பை மட்டுப்படுத்திவிடும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. ஏவுகணை பாதுகாப்பு முறையை ரஷ்யாவிடமிருந்து பாரம்பரியமாக இந்திய ஒப்பந்தமாக மேற்கொண்டு வருகிறது. ஆனால் ரஷ்யாவிடம் இருந்து எஸ்700 ரக ஏவுகணைகளை வாங்க வேண்டாம் என வலியுறுத்தி வருகிறது. இது அமெரிக்கா இந்தியா இடையிலான உறவில் தீவிரமான விளைவுகளை […]
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இரு நாட்டு உறவுகள் குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் மோடி பேச்சு வார்த்தை நடத்தினார். கிர்கிஸ்தானின் தலைநகர் பிஷ்கேக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி விமானம் மூலம் புறப்பட்டு சென்று பங்கேற்றார். இதையடுத்து நடைபெற்ற மாநாட்டுக்கிடையே பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு தலைவர்களும் சிரித்த முகத்துடன் கை குலுக்கி கொண்டனர். இருவரும் இரு நாட்டு உறவுகள் குறித்தும், பல்வேறு முக்கிய […]
இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அந்நாட்டு உளவுத்துறை தலைவர் சிசிரா மெண்டிஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21_ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது அடுத்தடுத்து 3 ஓட்டல்கள் , 3 தேவாலயங்கல் என தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியது. இந்த கொடூர சம்பவத்தில் 258 பேர் பலியாகி , 500_க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை நிகழ்த்தியது நாங்கள் தான் என ISIS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. […]
துபாயில் நடந்த விபத்தில் 12 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ஓமன் நாட்டில் நடைபெற்ற ஈத் பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு விட்டு துபாய் நோக்கி 31 பேருடன் சென்று கொண்டு இருந்த பேருந்து அங்குள்ள மெட்ரோ நிலையம் அருகே திடீரென விபத்திற்குள்ளானது.இந்த விபத்தில் இந்தியர்கள் 12 பேருடன் சேர்த்து 17 பேர் உயிரிழந்துள்ளதாக துபாயில் உள்ள இந்திய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை உயரக்கூடுமென்றும் சொல்லப்பட்ட நிலையில் சிலரின் உடல்களின் அடையாளத்தை […]
ஜெர்மனி மருத்துவமனையில் வேலைபார்க்கும் ஆண் செவிலியர் மாரடைப்பு வரவைத்து நோயாளிகளை கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மன் நாட்டில் உள்ள டெல்மெர்ன் ஹாஸ்ட் மருத்துவமனையில்ஆண் செவிலியராக பணிபுரிபவர் நீல்ஸ் ஹோஜல். இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தது. குறிப்பாக இவர் நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படுத்தி பிழைக்க வைப்பதாக சுமார் 85 நோயாளிகளை கொன்றுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைகள் தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டத்தையடுத்து இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செவிலியர் நீல்ஸ் ஹோஜல் மீது […]
செங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாகிஸ்தானுடன் எவ்வித பேச்சுவார்தைதையிலும் ஈடுபட போவதில்லை என்று இந்தியா அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ஜம்முவில் உள்ள புல்வாமா பாயங்கரவாத தாக்குதல் நிகழ்வை தொடர்ந்து பிசக்கெக் நகரில் நடைபெறும் செங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இடையில் இருதரப்பு குறித்து எவ்விதமான சந்திப்பும் கிடையாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தும் வரையில் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை […]
இலங்கையில் பெளத்த துறவிகளின் உண்ணாவிரத போராட்டத்தையடுத்து இரண்டு ஆளுநர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில், அமைச்சர் ரிசாத் பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் ஆசாத் சாலே ஆகியோருக்கு தொடர்பிருப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில் இவர்கள் பதவி விலகவேண்டும் என்று பெளத்த துறவியான நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதான தேரோ உள்ளிட்டோர், உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கினர் . அனால் இந்தக் குற்றச்சாட்டை அமைச்சர் மற்றும் ஆளுநர்கள் மறுத்து வந்த நிலையில், ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் […]
ஜூன் 3 உலக மிதிவண்டி தினம் ..!!
மிதிவண்டி பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக இன்று உலகம் முழுவதும் மிதிவண்டி தினம் கொண்டாடப்படுகிறது. வருடந்தோறும் ஜூன் மூன்றாம் தேதி உலக மிதிவண்டி தினமானது கொண்டாடப்படுகிறது. மிதிவண்டிகளில் பயன்பாடானது தற்பொழுது குறைந்து வருகின்ற காரணத்தினாலும், பொதுமக்களுக்கு அது குறித்து ஏற்படும் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் உடலுக்கும், சுற்றுப்புறத்திற்க்கும் நன்மையைத் தரும் மிதிவண்டியை அதிகம் பயன்படுத்துவோம் என்ற வாசகங்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சூடானில் மக்களாட்சி வேண்டி போராடிய போராட்டக்காரர்கள் மீது நடந்த ராணுவத்துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர். சூடானில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஓமர் அல் பஷிர் அதிபராக பதவி வகித்துவருகிறார். இதனை கண்டித்து போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதால் ஓமர் அல் பஷிர் கடந்த ஏப்ரல் மாதம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.இதனால் அந்நாட்டில் இரு ஆண்டுகள் இடைக்கால ராணுவ ஆட்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்த போராட்டக்காரர்கள், ”ராணுவ ஆட்சி நீங்கி மக்கள் ஆட்சிக்கு வழியிட வேண்டும்” என போராட்டம் நடத்தி வருவதால் […]
வளர்ந்த ,பயனடைந்த நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்து ,ஏற்றுமதி பொருளுக்கு வரிகள் விதிப்பை அமெரிக்கா உறுதி செய்துள்ளது . 2020க்குள் இந்தியா வல்லரசு நாடாக மாறும் என்று ஐந்து வருடங்களுக்கு முன்பாக கூறி வந்த நிலையில், தற்போது வளரும் நாடுகளின் பட்டியலில் இருந்தே இந்தியா வெளியேற்றப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அமெரிக்காவானது பயனடைந்த வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவிற்கு வழங்கி இருந்தது. இந்நிலையில் அந்த அந்தஸ்தை அமெரிக்கா நாடு இந்தியாவிற்கு ரத்து செய்யப்போவதாகவும் […]
ஐ.நா சபையின் உதவி பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய பெண்மணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச்செயலாளராக இந்திய நாட்டினை சேர்ந்த அனிதா பாட்டியா என்ற பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நா சபையின் ஆற்றல் மேலாண்மை, நிலைத்தன்மை, கூட்டு ஆகியவற்றுக்கான உதவி பொதுச்செயலாளராக அவர் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவினை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் குட்டரஸ் அறிவித்துள்ளார். ஐ.நா_வில் உதவி பொது செயலாளராக இந்தியாவை சேர்ந்த அதுவும் ஒரு பெண்மணி நியமிக்கப்பட்டதையடுத்து பலரும் அனிதா பாட்டியா_விற்கு வாழ்த்து […]
பிளாஸ்டிக் குப்பைகளுக்கு தடை ..!!
இந்தியா ,சீனாவை தொடர்ந்து மலேசியாவும் பிளாஸ்டிக் குப்பைகளுக்கு தடை விதித்துள்ளது . ஆசியாவில் இருக்கக்கூடிய இந்தியா, சீனா போன்ற நாடுகள் தங்கள் நாட்டிற்குள் பிளாஸ்டிக்கு தடை விதித்தது மட்டுமல்லாமல், வளர்ந்த நாடுகளில் இருந்து வரும் பிளாஸ்டிக் குப்பைகளுக்கு தடை விதித்து அனுமதி மறுத்துள்ளனர். இந்நிலையில் வளர்ந்த நாடுகள் இந்தியா சீனாவை தவிர்த்துவிட்டு தற்போது மலேசியாவை குறிவைத்து முறைகேடான வழிகளில் குப்பைகளை அனுப்பி வந்த நிலையில் மலேசியாவும் அதற்கு தடை விதித்து இனி இம்மாதிரியான செயல்கள் நடைபெற்றால் கப்பலை […]
பேஸ்புக் பயன்படுத்திவரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளளது . சமீபகாலமாக பேஸ்புக் நிறுவனமானது பொய்யான தகவல்களை தவிர்க்கவும், உணர்வுகளை தூண்டும் விதமாக இருக்கக்கூடிய பதிவுகளை தவிர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகளை நாளுக்குநாள் மேற்கொண்டு வருகிறது. இதனால் பல்வேறு விதிமுறைகள் கட்டமைக்கப்பட்டு பேஸ்புக் உபயோகிக்கும் வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக பேஸ்புக் உபயோகிக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் அதிக அளவிலான நபர்கள் ஃபேஸ்புக் உபயோகிப்பதை தவிர்த்து வருவதாக […]
ஆசிய கண்டத்தில் முதன் முதலாக தைவான் அரசு ஒத்துழைப்புடன் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் ஆரவாரத்துடன் நடைபெற்றுள்ளது . சில மாதங்களுக்கு முன்பு இந்திய அரசானது ஓரினச் சேர்க்கைக்கு தடை இல்லை என்று அறிவித்தது. இது பலரது மத்தியில் வரவேற்பையும் பலரது மத்தியில் முகச்சுளிப்பையும் ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் ஆசிய கண்டத்தில் உள்ள தைவான் அரசானது ஓரின சேர்க்கையாளர்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது . இதனை கொண்டாடும் விதமாக ஒரே இடத்தில் 20க்கும் மேற்பட்ட […]
15 தீவிரவாதிகள் லட்சத்தீவில் பதுங்கியுள்ளதால் அண்டை நாடுகளின் கடலோர பகுதிகளுக்கு இலங்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் இருந்து 15 ஐஎஸ்ஐ தீவிரவாதிகள் லட்சத்தீவு க்கு புறப்பட்டு சென்று இருப்பதாக இலங்கை காவல்துறையினர் மற்றும் உயர் அதிகாரிகள் அண்டை நாடுகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கேரள கடலோர காவல் படை தீவிர ரோந்து பணியில் ஈடுபட தொடங்கிவிட்டது. மேலும் சந்தேகப்படும்படி நபர்கள் தென்பட்டால் காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கடலோரங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிகோபார் ,மேற்கு வங்கத்தை தொடர்ந்து 3 வதாக பெருவில் நிலநடுக்கம் ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . தென்னமெரிக்க நாடான பெருவில் சில மணி நேரத்திற்கு முன் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .ரிக்டர் அளவுகோலில் 8.0 ஆக பதிவான நிலநடுக்கத்தால் வீடுகள் கட்டிடங்கள் கட்டும் அதிர்வை சந்தித்து உள்ளன . இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவலில் கண்டறியப்பட்டுள்ளது. இன்று மட்டும் நிக்கோபார் மேற்குவங்கத்தை அடுத்து மூன்றாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் இது என்பது […]
உலக கோப்பைக்கான பயிற்சி போட்டியில் நியூசிலாந்து அணியுடன் டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியானது இங்கிலாந்தில் வருகிற 30-ஆம் தேதி தொடங்க இருக்கிறது இதனைத் தொடர்ந்து இந்திய அணி ஆனது தன்னுடைய முதலாவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை சந்திக்க இருக்கிறது இந்தப் போட்டியானது சவுதம்டனில் ஜூன் 5 ஆம் தேதி நடைபெற இருக்கிறது உலகக் கோப்பையில் பங்கேற்பதற்கு முன்பாக பங்கேற்கக்கூடிய 10 அணிகளும் தலா 2 பயிற்சிப் […]
மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது . மக்களவைத் தேர்தல் முடிந்ததை அடுத்து அடுத்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரு நாட்டு உறவுகள் பற்றி சந்தித்துப் பேசயிருக்கிறார்கள். 17 வது மக்களவை தேர்தலில் பெரும்பான்மையோடு வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் தொலைபேசி மூலமாக வாழ்த்து […]
காணாமல் போன குழந்தைகளை நினைவு படுத்தும் விதமாக இன்றைய தினம் சர்வதேச தொலைந்து போன குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலும் வழி தெரியாமலும் நினைவிழந்தும் இன்றும் பல குழந்தைகள் பல்வேறு இடங்களில் தொலைந்துபோவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது .தொலைந்து போன குழந்தைகளின் நிகழ்கால நிலை அறியாத குழந்தைகளின் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், பிறந்த தினத்தை அறியாமல் இருக்கும் குழந்தைகளுக்கும் அவர்கள் காணாமல் போனதை நினைவு படுத்தும் வகையில் இன்று ஒரு நாள் கடைபிடிக்கப்படுகிறது .ஆகையால் மே மாதம் 25ஆம் தேதி […]
தேர்தலில் வெற்றி பெற்றும் மீண்டும் இந்தோனேசிய அதிபராக தேர்வாகியுள்ள ஜோகோ விடோடோ_வுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தோனேசியாவில் அதிபர் பதவிக்கான காலம் முடிவடைந்ததையடுத்து கடந்த மாதம் 17_ஆம் தேதி அதிபர் தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெறுமென்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் அதிபர் ஜோகோ விடோடா_ வை எதிர்த்து ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஜெனரல் பிரபாவோ சுபியாந்தா வேட்பாளராக போட்டியிட்டார்.கடந்த 17_ஆம் தேதி வாக்குப்பதிவு முடிவடைந்தது. இதையடுத்து வார கணக்கில் நீடித்து வந்த வாக்கு எண்ணும் பணி முடிவடைந்து […]
துபாய் விமான நிலையம் அருகே சிறிய குட்டி விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். துபாயில் அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனம் ‘ஹனிவெல்’. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய குட்டி விமானம் ஒன்று விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இதில் இங்கிலாந்தை சேர்ந்த 3 பேரும், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒருவரும் பயணம் மேற்கொண்டனர்.இந்த சிறிய விமானம், விமான நிலையத்தின் ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட சில நொடிகளில் திடீரென தரையில் வேகமாக விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதனால் அந்த இடத்தில் பரபரப்பும் பதட்டமும் […]
தற்போது சமூக வலை தளங்களில் கரப்பான் பூச்சி சவால் என்ற ஒன்று வைரலாக பரவி வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இதுவரை பல்வேறு சவால்கள் மக்களிடையே வைரலாகியுள்ளன. அவற்றில் டென்(10) இயர்ஸ் சேலஞ்ச், மோமோ சேலஞ்ச், கிகி சேலஞ்ச் போன்றவை முக்கியமான ஒன்றாகும். இந்நிலையில் தற்போது கரப்பான் பூச்சி சவால் வைரலாக பரவி வருகிறது. இந்த சவாலில் கரப்பான்பூச்சியை முகத்தில் ஓடவிட்டு செல்பி எடுக்கவேண்டும் என்பதே சவாலாகும். இந்த சவாலை முதன்முதலாக பர்மாவைச் சேர்ந்த அலெக்சன் என்ற […]
சந்திரனின் மேற்பரப்பு படிப்படியாக சுருங்கி வருவதாக விஞ்ஞானி தாமஸ் வாட்டர்ஸ் கூறியுள்ளார். பல்வேறு நாடுகள் நிலவை பற்றி ஆராய்சிகள் மேற்கொண்டு புது புது தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் ‘நாசா’ ஆராய்ச்சி மையம் கடந்த 1969 மற்றும் 1977_ம் ஆண்டுகளில் நிலவுக்கு அனுப்பிய அப்பல்லோ விண்கலன்கள் சந்திரன் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு தகவல்களை வெளியிட்டுள்ளன. இந்த விண்கலன்கள் மேற்கொண்ட ஆய்வு மூலம் நிலவின் மேற்பரப்பு சுருங்க தொடங்கியுள்ளது என தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் நிலவின் மேற்பரப்பில் ஏற்படும் நிலநடுக்கமும், […]
சந்திரனில் அடிக்கடி நிகழும் நிலநடுக்கங்கள் மற்றும் நில அதிர்வுகளால் சந்திரனின் மேற்பரப்பு சுருங்கி வருகிறது என்று விஞ்ஞானிகள் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். சந்திரனை சர்வதேச விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். அமெரிக்காவின் ‘நாசா’விண்வெளி ஆய்வு மையம் கடந்த 1969 மற்றும் 1977-ம் ஆண்டுகளில் சந்திரனுக்கு அப்பல்லோ விண்கலன்களை அனுப்பி ஆய்வு மேற்கொண்டது. அந்த அப்பல்லோ விண்கலன்கள் சந்திரனின் மேற்பரப்பில் ஆய்வுகள் மேற்கொண்டதில் அதன் மேற்பரப்பு திராட்சை பழம் போல சுருக்கங்கள் நிறைந்து காணப்பட்டது. அதனை வைத்து விஞ்ஞானிகள் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். […]
பாகிஸ்தானிலுள்ள மசூதி அருகே திடீரென்று ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 4 போலீசார் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்தின் தலைநகரான குவெட்டாவில் உள்ள சாட்டிலைட் நகரில் தொழுகைக்காக கூடியிருந்த மசூதி அருகே நேற்று இரவு சக்திவாய்ந்த வெடி குண்டு வெடித்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இந்த பயங்கர குண்டுவெடிப்பில் சுற்றியிருந்த கடைகள், கட்டிடங்கள் அனைத்தும் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் 4 போலீசார் உடல்சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். இத்தகவலறிந்து விரைந்த ராணுவத்தினரும், போலீசாரும் சம்பவ […]
தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு தொடர்புடைய தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 அமைப்புகளுக்கு இலங்கையில் நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த 21_ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயம் மற்றும் நட்சத்திர விடுதிகள் என அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 300_க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 500_க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தது. மேலும் இந்த தாக்குதலை நடத்தியதாக ISIS பயங்கரவாத அமைப்பு மற்றும் தேசிய […]
அலாஸ்காவில் 2 விமானங்கள் நடுவானில் மோதிய விபத்தில் 5 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். சமீபத்தில் விமானத்தின் மூலம் நிகழும் விபத்துகள் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில், ராயல் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் சுற்றுலா பயணிகள் 7 நாள் பயணம் மேற்கொண்டனர். இவர்களுள் 10 சுற்றுலா பயணிகள் அலாஸ்கா பகுதியிலுள்ள கெட்சிகன் என்ற இடத்தை மிதக்கும் விமானம் மூலம் சுற்றிப்பார்த்துக் கொண்டு இருந்தனர். அதே நேரத்தில் 4 பேர் கொண்ட மற்றொரு சுற்றுலாக் குழுவினர் வேறொரு மிதக்கும் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது […]