கனடாவில் இருக்கும் ஒரு கத்தோலிக்க தேவாலயம் அங்கிருக்கும் பழங்குடியின மக்களிடம் முதல் தடவையாக மன்னிப்பு கோரியிருக்கிறது.
கனடாவில் கடந்த ஆயிரம் வருடங்களில் பூர்வகுடி பள்ளிகளில் பயின்ற குழந்தைகள் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். இதற்காக பழங்குடியின மக்களிடம் தேவாலயம் மன்னிப்பு கேட்டிருக்கிறது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றையும் தேவாலயம் வெளியிட்டுள்ளது. அதில் பழங்குடியின குழந்தைகள் அனுபவித்த கொடுமைகளை உணரமுடிகிறது என்று கத்தோலிக்க பாதிரியார்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது கடந்த 1831 ஆம் வருடத்திலிருந்து 1996-ஆம் வருடம் வரை, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின குழந்தைகள் வற்புறுத்தி பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதாவது, பழங்குடியின குடும்பங்களிலிருந்து 1,50,000 குழந்தைகள் பள்ளி சென்றிருக்கிறார்கள். அவர்கள் சாதாரண வாழ்க்கையை பழகுவதற்காக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டார்கள்.
ஆனால், பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களால் அந்த குழந்தைகள் உடல் மற்றும் மன ரீதியாக கொடுமைகளை அனுபவித்திருக்கிறார்கள். மேலும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுள்ளார்கள். சமீபத்தில், அந்த குழந்தைகளின் உடல்கள், அந்த பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் கல்லறையிலிருந்து மீட்கப்பட்டது.
கனடா நாட்டில் வரும் 30ஆம் தேதியன்று உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான முதல் தேசிய தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் கத்தோலிக்க தேவாலயமானது, பழங்குடியின மக்களிடம் மன்னிப்புக் கோரியிருக்கிறது.