ராமநாதபுரத்தில் கால்நடைகளை புதியதாக ஒரு அம்மை நோய் தாக்கிய வருவதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, சாயல்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளை விவசாயிகள் வளர்த்து வந்தனர். இந்நிலையில் பருவநிலை மாற்றம் காரணமாக மாடுகளுக்கு நோய் தாக்குவதால் ஒரு சில மாடுகள் அவ்வப்போது இறந்து விடுகின்றன.
இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். இதற்கு கால்நடை மருத்துவ முகாம் அமைத்து விவசாயிகளுக்கு ஆலோசனைகளும் கால்நடைகளுக்கு சிகிச்சையையும் அளிக்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.