Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் உலா வரும் விலங்குகள்…. வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை…. வனத்துறையினரின் எச்சரிக்கை….!!

வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் இருப்பதால் வாகன ஓட்டிகள் வேகமாக செல்லக் கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானை, மான், கரடி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமலில் இருந்த சமயத்தில் சரக்கு வாகனங்கள் மட்டுமே முதுமலை சாலை வழியாக சென்று வந்துள்ளது. தற்போது ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக முதுமலை சாலையில் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன.

இந்நிலையில் முதுமலை சாலைகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிதமான வேகத்திலேயே வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதனை அடுத்து வாகனங்களை நிறுத்தி வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது எனவும், தடையை மீறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |