தமிழகத்திற்கு இன்று முதல் 5 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு பிறப்பித்துள்ளது .
கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் ,அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் பெங்களூருவில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு சார்பில் உறுப்பினர்கள் பங்கேற்றனர் .
இக்கூட்டத்தின் முடிவில் தமிழகத்திற்கு, இன்று முதல் 5 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. ஏற்கனவே ஜூன், ஜூலையில் 40 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால் 9.5 டிஎம்சி தண்ணீரை மட்டுமே கர்நாடக அரசு திறந்து விட்டது. இதனால் காவிரி ஒழுங்காற்று குழுவின் அடுத்த கூட்டம் வரும் 8 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளதாக தெரியவருகிறது .