காலிபிளவர் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
காலிபிளவர் – 1
தக்காளி – 2 நீளமாக நறுக்கிய
பெரிய வெங்காயம் – 2 நீளமாக நறுக்கியது
ஏலக்காய் – 3
இலவங்கம் – 3
கடுகு – கால் டீஸ்பூன்
இஞ்சி – சிறுதுண்டு
பூண்டு -4 பல்
சீரகம் – அரை டீஸ்பூன்
கருவேப்பிலை – 2 கொத்து
எண்ணெய் – 5 டீஸ்பூன்
தேங்காய் துருவியது – 1 டீஸ்பூண்
பச்சை மிளகாய் – 4
மஞ்சள்தூள் – சிறிது
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
முதலில் மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, மிளகாய், தேங்காய், இவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
காலிபிளவரை சிறிது சிறிதாக நறுக்கி வெந்நீரில் போட்டு நன்கு கழுவி கொள்ளவும். மேலும் அடுப்பில் பாத்திரத்தை வைத்து சிறிது தண்ணீர் விட்டு காலிபிளவரை வேக வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, ஏலக்காய், லவங்கம், சீரகம், கருவேப்பிலை, புதினா சேர்த்து தாளித்து, பிறகு அதனுடன் வெங்காயம், தக்காளி அதில் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
மேலும் அதனுடன் வேக வைத்துள்ள காலிபிளவர், அரைத்த மசாலா, மஞ்சள்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, கிரேவி கெட்டியானதும் இறக்கினால் சுவையான காலிபிளவர் கிரேவி ரெடி.