திமுக MP ஜெகத்ரட்சகன் 23ஆம் தேதி சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
குரோம்பேட்டையில் குரோம் லெதர் பேட்டரி சொந்தமான 1.55 ஏக்கர் நிலத்தை தன்னுடைய உறவினர்கள் 47 பேருக்கு சட்டவிரோதமாக திமுக MP ஜெகத்ரட்சகன் பிரித்துக் கொடுத்ததாகவும் , அந்த இடம் ஒதுக்கீடு சம்மந்தமாக நகர்ப்புற நில உச்சவரம்பு என எந்த விதியையும் பின்பற்றவில்லைஎன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் CBCID போலீசார் விசாரிக்கை விடுத்த உத்தரவையடுத்து வருகின்ற 23_ஆம் தேதி திமுக MP ஜெகத்ரட்சகன் எழும்பூரில் இருக்கும் சிபிசிஐடி தலைமை அலுவலத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.