சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை ஒரே ஒரு நாள் என்னிடம் கொடுங்கள், பிறகு பாதிக்கும் மேற்பட்ட பா.ஜ.க-வினர் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், பாஜக ஏன் என்னை பார்த்து பயப்படுகிறது. கடந்த 15 ஆண்டு காலமாக மக்கள் பணியை அவர்கள் செய்யவே இல்லை. மேலும் முக்கிய பிரச்சினை குறித்து பேசுவதே இல்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
அதுமட்டுமின்றி வர இருக்கும் குஜராத் தேர்தலில் தோல்விக்கு பா.ஜ.க பயபடுவதால் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் மீது பொய்யான வழக்குகளை பதிவுசெய்து வருகிறது. கடந்த 7 வருடங்களில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு எதிராக அவர்கள் 167 வழக்குகளை தொடுத்துள்ளனர். ஆனால் அவற்றில் ஒன்று கூட நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்று அவர் கூறினார்.