ப.சிதம்பரத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீனை இரத்து செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ப.சிதம்பரத்தை கைது செய்வதில் எந்தவிதமான தடையும் இல்லை, இதனால் ப.சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்கலாம் என்று சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் நினைத்துக் கொண்டு இருந்த நிலையில் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் இந்த மனுவின் மீதான விசாரணையில் நீதிமன்றம் ஒருவேளை ஏதேனும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் அவர் மீதான நடவடிக்கையை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினரால் தொடர முடியாது. இதை கருத்தில் கொண்டு தற்போது சிபிஐ கேவியட் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.அதில் சிபிஐ தரப்பில் ,எங்களின் வாதத்தை கேட்காமல் உச்சநீதிமன்றம் ஏதேனும் இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று தெரிவித்துள்ளது.