ப.சிதம்பரத்தை சிபிஐ காவலில் வைத்துள்ள உத்தரவை எதிர்த்து ப.சிதம்பரம் தரப்பு உச்சநீதிமன்றத்தை அணுக முடிவெடுத்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் நிறுவன அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை நேற்று சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்தது. இதையடுத்து வருகின்ற 23_ஆம் தேதி முதல் ப.சிதம்பரம் சிபிஐ காவலில் இருப்பார்.அதே வேளையில் இன்று உச்சநீதிமன்றம் ப.சிதம்பத்துக்கு அமலாக்கத்துறை வழக்கில் இன்று முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞ்சர்கள் திங்கள் கிழமை சிபிஐ காவலில் வைக்க உத்தரவிட்ட கீழமை நீதிமன்ற உத்தரவை இரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.இதற்காக வழக்கறிஞ்சர்கள் குழு ஆலோசனை நடத்தி வருகின்றது.