ப.சிதம்பத்தை ஆஜர்படுத்த நிலையில் சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வந்த விசாரணை நிறைவடைந்த தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்குள் கோட்டைச் சுவர் ஏறிக்குதித்து மடக்கி நேற்று கைது செய்தனர். இந்த கைதை எதிர்த்து அவரின் வீட்டின் முன்பு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.
மேலும் ப.சிதம்பரத்தை கைது செய்த அதிகாரிகள் அவரை இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்து சென்று அவருக்கு தேவையான மருத்துவ உதவி , உணவு என அனைத்தையும் வழங்கி விசாரணையை தொடங்கினர். சுமார் 3 மணி நேரம் வரை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தெரிகின்றது.
ப.சிதம்பரம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சிபிஐ தலைமை அலுவலகம் இருக்கும் அந்த சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதே வேளையில் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டது. இந்நிலையில் சிபிஐ_யின் 3 மணி நேர விசாரணையை தொடர்ந்து டெல்லி ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர்.
ஏற்கனவே ப.சிதம்பரத்தின் சார்பில் ஆஜராகும் கபில் சிபில் , அபிஷேக் சிங்வி , விவேக் தன்கா ஆகிய வழக்கறிஞ்சர்களும் , அவரின் மனைவி நளினி சிதம்பரம் மற்றும் மகன் கார்த்திக் சிதம்பரமும் நீதிமன்றத்தில் காத்திருக்கின்றனர்.ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் காரில் அழைத்துக் கொண்டு நீதிமன்ற வழக்கத்திற்கு வந்தனர்.சிதம்பரத்திடம் பேச முற்பட்ட கார்த்திக் சிதம்பரத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்ற போது புன்னகைத்த படியே சென்ற சிதம்பரம் விசாரணை கூண்டில் நிறுத்தி வைக்கப்பட்டார். பின்னர் விவாதம் தொடங்கிய போது ப.சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கின்றார் எனவே சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தரப்பில் மனு அளிக்கப்பட்டது.
மேலும் சிதம்பரம் எந்த கேள்விக்கும் பதிலளிக்கவில்லை. அவரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார்.இவர் மீது வெளிவர முடியாத பிணை இருக்கின்றது.ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு விசாரணை தொடர்பாக எந்த கேள்விக்கும் இவர் பதிலளிக்க வில்லை. பேசாமல் இருப்பது அடிப்படை சுதந்திரமாக இருக்கலாம் ஆனால் வழக்கில் ஒத்துழைக்காமல் இருக்க முடியாது. குற்றப்பத்திரிகையில் சிதம்பரத்தின் பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும் எனவே மேலும் விசாரணை தேவை என்று சிபிஐ தரப்பில் வாதம் எடுத்து வைக்கப்பட்டது. பின்னர் சாட்சிக் கூண்டில் நிற்கவைக்கப்பட்ட சிதம்பரத்திடம் விசாரணை நடைபெற்றது. இதை தொடர்ந்து ப.சிதம்பரம் சார்பில் கார்த்திக் சிதம்பரம் ஆடிட்டர் பாஸ்கரனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது எனவே ஜாமீன் வழங்க வேண்டும். ஏற்கனவே விசாரணை முடிந்து விட்டதால் காவலில் வைப்பது அவசியமற்றது என்று கபில் சிபில் வாதங்களை முன்வைத்தார்.
மேலும் இது ஒரு கூட்டு சதி. ப.சிதம்பரம் ஜாமீனில் இருந்தாலும் அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பார்.ப.சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்க வில்லை என்றால் இவ்வளவு நாள் சிபிஐ என்ன செய்து கொண்டு இருந்தது.நேற்று அவசரஅவசரமாக கைது செய்து இரவு சிபிஐ அலுவலகத்துக்கு கொண்டு சென்றும் எந்த விசாரணையும் நடத்த வில்லை. இன்று காலை தான் விசாரணை செய்துள்ளனர்.இவ்வளவு அவசரமான கைது எதற்கு. கேட்ட கேள்விகளை திரும்ப திரும்ப கேட்பதன் அவசியம் என்ன என்று ப.சிதம்பரம் கபில் சிபில் வாதங்களை முன்வைத்தார்.
வெறும் 12 கேள்விகளை திரும்ப திரும்ப கேட்டு மன உளைச்சலை உண்டாக்கியுள்ளனர்.சிபிஐ என்னென்னெ கேள்விகளை கேட்டார்கள் என்பதை இங்கே சமர்ப்பிக்க வேண்டும். அவரின் வயதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஐ.என்.எக்ஸ் வழக்கில் எந்த ஆதாரமும் இல்லாமல் கைது செய்த்தது தவறு.இதில் குற்றம்சாட்டப்பட்ட அரசின் 6 செயலாளர்கள் கைது செய்யப்படவில்லை.சிபிஐ_யின் அடிப்படை ஆதாரமென்ற குற்றச்சாட்டுக்காக 24 மணி நேரம் தூங்கவில்லை. சிபிஐ கேட்ட 12 கேள்விகளில் 6 கேள்விகள் ஏற்கனவே பதிலளித்தவை என்று கபில்சிபில் வாதாடினார்.
இதை தொடர்ந்து சிதம்பரம் தரப்பு வழக்கறிஞ்சர் அபிஷேக் மனு சிங்வி , இடைக்கால முன்ஜாமீனை 7 மாதம் கழித்து இரத்து செய்தது எதற்காக?பணம் கொடுத்ததாக சிபிஐ கூறுகின்றது எங்கு கொடுத்தார்கள். யார் கொடுத்தது என்பதை சிபிஐ தெரிவிக்க வேண்டும். அப்ரூவரின் வாக்குமூலம் ஆவணமே இன்றி சாட்சியம் இல்லை.ஐ.என்.எக்ஸ் வழக்கு ஆதாரங்கள் அடிப்படையில் நடைபெற வில்லை. வேறு எதற்காகவோ நடைபெறுகின்றது. நீதிமன்றத்தில் நிற்கும் சிதம்பரத்திடம் நீதிபதியே கேள்வி கேட்கலாம்.
வலுவான ஆதாரங்கள் இருப்பதாக கூறும் சிபிஐ இத்தனை நாள் என்ன செய்தார்கள் என்று அபிஷேக் மனு சிங்வி தன்னுடைய வாதத்தை தெரிவித்தார். அப்போது சிதம்பரம் பேச முற்பட்டதும் சிபிஐ வழக்கறிஞ்சர் துஷார் மேத்தா குறிக்கிட்டதால் துஷார் மேத்தா_வுக்கும் அபிஷேக் மனு சிங்வி_க்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இதில் ப.சிதம்பரத்திற்கு எப்போது சம்மன் அனுப்பினீர்கள் என்று சிபிஐ_க்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
சட்டம் குறித்து நன்கு அறிந்த சிதம்பரத்திக்கு பதில் சொல்லாமல் சட்டத்தை எப்படி தட்டிக்கழிக்க முடியும் என்று நன்கு தெரியும் என்று கூறிய சிபிஐ தரப்பு அவருக்கு ஏதும் சலுகை அளிக்க கூடாது. ஆதாரம் இருப்பதால் ப.சிதம்பரத்தை கஸ்டடியில் வைத்து விசாரிக்க வேண்டும் என்றும் வாதாடி வருகின்றது.இதையடுத்து ப.சிதம்பரம் நீதிபதியிடம் விளக்கம் அளித்தார். அனல் பறக்கும் விவாதம் நடைபெற்ற நிலையில் வாதம் பிரதிவாதங்களை கேட்டறிந்த நீதிபதி இந்தவழக்கை 30 நிமிடம் கழித்து தீர்ப்பு வழங்குவததாக ஒத்திவைத்தார்.