Categories
அரசியல் மாநில செய்திகள்

” மோடியை விமர்சித்ததால் CBI ” கே.எஸ் அழகிரி விமர்சனம் …!!

பிரதமர் மோடியை விமர்சித்ததால் ப.சிதம்பரம் மீது சிபிஐ ஏவி விடப்படுகிறது என்று கே.எஸ் அழகிரி விமர்சித்துள்ளார்.

கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாட்டிலிருந்து ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு நடந்ததாக  குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அவரின் மகன் மீதும் சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து , கைது நடவடிக்கை மேற்கொண்டு விசாரணை நடத்தினர். இதையடுத்து ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டுமென்று ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Image result for cbi

இந்த வழக்கில் இன்று டெல்லி உயர்நீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கான ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்கு ஜாமீன் மனு தள்ளுபடியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.இதையடுத்து தீடீர் திருப்பமாக டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டுக்கு CBI மற்றும் அமலாக்கத்துறையினர் சென்றனர்.

Image result for ks alagir

CBI மற்றும் அமலாக்கத்துறையினரின் இரவு நேர இந்த நடவடிக்கை தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரவோடு இரவாக ப.சிதம்பரம் கைது செய்யப்படுவாரா? என்று எதிர்பார்க்கப்பட்டது.சிதம்பரம் டெல்லி வீட்டில் இல்லாததால் அதிகாரிகள் திரும்பி சென்றனர். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி கூறுகையில் , இது கண்டனத்துக்குரியது .என்ன தவறு செய்தார் ப.சிதம்பரம்…? பிரதமர் மோடியை விமர்சித்ததால் ப.சிதம்பரம் மீது சிபிஐ ஏவி விடப்படுகிறது என்று விமர்சித்துள்ளார்.

Categories

Tech |