மேற்கு வங்க மாநிலத்தில் செயல்படும் நிறுவனம் நியூ லேண்ட் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ். இந்த நிறுவனத்தில் 250-க்கும் மேற்பட்ட முகவர்கள் ரூ 1 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்ததாகவும், முதலீட்டுக்கான வருவாயை அதிகமாக கொடுப்பதாக உறுதியளித்து டெபாசிட் தொகையை கூட கொடுக்காமல் நிறுவனத்தின் விளம்பரதாரர்கள் மற்றும் இயக்குநர்கள் ஏமாற்ற்றி விட்டதாக புகார் எழுந்தது.
இதையடுத்து கடந்த 2017_ஆம் ஆண்டு மே மாதம் இந்த நிறுவனத்தின் மீது சிட் ஃபண்ட் மோசடி ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டு , மேற்கு வங்க மாநில சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வந்தது. இதில் ஊழலில் ஈடுபட்ட அனைத்து நிறுவனங்களையும் விசாரிக்குமாறு உச்சநீதிமன்றம் CBI-க்கு உத்தரவிட்டது. இந்நிலையில் அந்த நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் விளம்பரதாரர்களுக்கு சொந்தமான 22 இடங்களில் CBI அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.