Categories
மாநில செய்திகள்

கோடநாடு வழக்கில் சிபிஐ எஸ்.பி.க்கு சம்மன் : சூடுபிடிக்கும் விசாரணை..!!

கொடநாடு கொலை வழக்கில்  தற்போது சிபிஐ எஸ்.பி முரளி ரம்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

2017-இல் நடந்த கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிஐஎஸ்பிக்கு சமன் அனுப்பப்பட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு  குழு விசாரணைக்காக முரளி ரம்பா ஆஜராவார் என்று தெரிகின்றது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். மர்மமான முறையில் உயிரிழந்த கோடநாடு எஸ்டேட் சிசிடிவி ஆப்பரேட்டர் தினேஷ்குமார் வீட்டில் மீண்டும் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2017ல்கோடநாடு கொலை கொள்ளை வழக்கு நடந்த போது நீலகிரி மாவட்ட எஸ்பி ஆக இருந்தவர் முரளி ரம்பா. தற்போது அவர் சிபிஐயில் பணிபுரிவதால் அவருக்கான சமனை சிபிஐ தலைமைச் செயலகத்திற்கு அனுப்பி உள்ளது சிபிசிஐடி.

Categories

Tech |