ஜெயராஜ் மரணம் தொடர்பாக மனைவி, மகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாத்தான்குளத்தில் தந்தை – மகன் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று காலை இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் இன்று காலை சாத்தான்குளம் வந்து சம்மந்தப்பட்ட இடங்களில் மூன்று குழுக்களாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு விசாரணை வேகம் பிடித்துள்ளது. தற்போது சிபிசிஐடி போலீசார் ஜெயராஜ் வீட்டிற்கு வந்து அவரின் மனைவி, மகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.