Categories
மாநில செய்திகள்

CBSC மாணவர்களுக்கான பொதுத்தேர்வு எப்போது?…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய இடைநிலை கல்வி வாரியம் 2023 ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு வாரிய தேர்வுகள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கடந்த 2 ஆண்டுகள் அனைத்து கல்வி வாரியங்களையும் சேர்ந்த மாணவர்கள் கொரோனா பரவல் காரணமாக பொது தேர்வுகளில் பல்வேறு இடர்களை சந்தித்தனர். தற்போது நடைபாண்டில் தான் பள்ளிகள் வழக்கம் போல் நேரடி வகுப்புகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய இடைநிலை கல்வி வாரியமானது முன்னதாகவே நடப்பாண்டிற்கான பொதுத்தேர்வு குறித்த முடிவுகளை திட்டமிட்டுள்ளது. அதன்படி சிபிஎஸ்சி கல்வி வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆஅம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 30ஆம் தேதி என்றும், விண்ணப்பதாரர்களின் பட்டியலை சமர்ப்பிக்க 31 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இதற்கான பதிவு சாளரம் மேலும் நீடிக்கப்படாது முடிவதற்குள் பள்ளிகள் இந்த தகவலை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் 2023 ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்சி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கும். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இந்த ஆண்டு அதனைபோல இல்லாமல் கல்வி அமர்வு முடிவில் ஒரே ஒரு தேர்வு மட்டுமே இருக்கும். 2022 ஆம் ஆண்டில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு வாரியம் இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. ஆனால் தற்போது ஆண்டுக்கு ஒரு முறை போர்டு தேர்வுகளை நடத்தும் வழக்கமான நடைமுறைக்கு திரும்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |