Categories
அரசியல்

CBSE மாணவர்களுக்கான SHRESHTA உதவித்தொகை…. மே 7ம் தேதி தகுதி தேர்வு…. வெளியான அறிவிப்பு….!!!!!

தேசிய தேர்வு முகமை (NTA) மே 7, 2022 அன்று SHRESHTA (NETS)-க்கான தேசிய நுழைவுத் தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வு குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கான ரெசிடென்ஷியல் எடுகேஷன் (SHRESHTA) திட்டத்தின் கீழ் நடத்தப்படும். ஒதுக்கப்பட்ட பிரிவை சார்ந்த மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பலன் பெறுவார்கள்.

இந்தத் திட்டம் 2022-23 கல்வியாண்டிலிருந்து தொடங்கப்படுகிறது. SHRESHTA திட்டமானது 9 மற்றும் 11ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்று மாணவர்களின் கல்விச் செலவுகள் அனைத்தையும் உள்ளடக்கி உதவி தொகைகளை வழங்குகிறது. அதன் அறிவிப்பை cbse.gov.in என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்த்துக்கொள்ளலாம்.

அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களிலும் SHRESHTA-க்கான தேர்வுகள் நடத்தப்படும் 12 ஆம் வகுப்பு வரையிலான சிபிஎஸ்சி உடன் இணைக்கப்பட்டுள்ள ரெசிடென்சியல் பள்ளிகளுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை பொருத்தமானதாகும். இந்த சலுகைகளை பெற பள்ளிகள் கடந்த மூன்று ஆண்டுகளில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் 75 அல்லது அதற்கு மேற்பட்ட தேர்ச்சி  சதவீதத்துடன் ஐந்து ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.

மேலும் சிபிஎஸ்சி வெளியிட்ட முந்தைய அறிக்கையில் இந்த திட்டமானது பட்டியலிடப்பட்ட மாணவர்களை சேர்க்கும் பள்ளிகளுக்கு நேரடியாக உதவித்தொகை விநியோகத்தை உள்ளடக்கியது எனவும் கூறப்பட்டிருக்கிறது. கல்வி உதவித்தொகை பள்ளி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் போன்றவற்றை உள்ளடக்கியதாக சிபிஎஸ்இ மேலும் கூறியுள்ளது.SHRESHTA (NETS) என்பது கணினி அடிப்படையிலான (CBT) முறையில் நடத்தப்படும் தேசிய அளவிலான தேர்வாகும்.

மேலும் இந்த நுழைவுத் தேர்வு மே 7, 2022 அன்று நடைபெறுகிறது. இந்த தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மீடியம் மாணவர்களுக்கு நடத்தப்படும். SHRESHTA நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் CBSE இணைந்த பள்ளிகளில் சேர்க்கைக்கான பட்டியலிடப்பட்டுள்ளனர்.

நடப்பு கல்வியாண்டில் (2021-22) 8 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வுக்கு தகுதி பெறுவார்கள். மேலும், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் வரை தகுதிக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்.தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் shreshta.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பதிவு செய்யலாம். இதற்கு பதிவு செய்ய எந்த கட்டணமும் இல்லை.

Categories

Tech |