நாடு முழுவதும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் தற்போது சிபிஎஸ்இ பள்ளிகளில் பத்தாவது மற்றும் 12வது படிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி பொது தேர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் காலை 10.30 மணிக்கு தேர்வுகள் தொடங்க உள்ளன. வெவ்வேறு பாடங்களை எழுதும் மாணவர்களுக்கு ஒரே நாளில் தேர்வு வராத வண்ணம் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் இப்போது இருந்தே தேர்வுக்கு தயாராக வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.