Categories
மாநில செய்திகள்

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு…. நாளை மறுநாள் வெளியாகும் முக்கிய அறிவிப்பு….!!!!

10 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முதல் பருவ தேர்வுக்கான தேதி நாளை மறுநாள் வெளியிடப்படவிருக்கிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளின் நடைமுறைகள் மற்றும் தேர்வுகளில் சிறிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதையடுத்து சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்த வருட பொதுத்தேர்வுக்கு பதிலாக 2 பருவ தேர்வுகள் நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாடத்திட்டம் குறைக்கப்பட்டு அதன்படி இந்தப் பருவ தேர்வுகள் நடத்தப்படவிருக்கிறது. 12 ஆம் வகுப்பிற்கு 114 பாடமும், 10 ஆம் வகுப்பிற்கு 75 பாடமும் பருவ தேர்வு முறை அமலாகிறது. முக்கியமான பாடங்கள் மற்றும் விருப்பமான பாடங்கள் என்ற 2 பாடப்பிரிவுகளுக்கு தேர்வு அட்டவணை வெளியாக உ ள்ளது .

இதையடுத்து முதல் பருவத் தேர்வு கால அட்டவணையை நாளை மறுநாள்  சிபிஎஸ்சி வெளியிடவிருக்கிறது. மொத்தம் ஒன்றரை மணி நேரம் அந்த தேர்வானது நடைபெறும். அதில் அட்ஜெக்டிவ் என்ற கொள்குறி வகை அடங்கிய வினாக்கள் வழங்கப்படும். இதன் பின்னர் அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரலில் 2 ஆம் பருவத்தேர்வு நடக்கும்.2 தேர்வுகளின் முடிவுகளையும் சேர்த்து அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |