Categories
தேசிய செய்திகள்

CBSE 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. இந்த மதிப்பெண்கள் கிடையாது…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

CBSE 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான கணக்குப்பதிவியல் முதல் செமஸ்டர் பொதுத்தேர்வு வரை வினாத்தாளில் ஏதாவது தவறு இருந்தால் கருணை அடிப்படையில் அதற்கு மதிப்பெண் வழங்கப்படும் என்று பரவிவரும் தகவல் வதந்தி. அதை யாரும் நம்ப வேண்டாம் என்று மத்திய கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறவிருந்த பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

இதை முதலில் மத்திய கல்வி வாரியமானன சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து, அனைத்து மாநிலங்களும் மாணவர்களின் நலன்கருதி பொதுத்தேர்வுகளை ரத்து செய்தனர். மாணவர்களுக்கு மதிப்பெண் முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. தற்போது அரசின் விடாமுயற்சியாலும், மக்களுக்கு தடுப்பூசி மீது கொண்ட ஆர்வத்தினாலும், கொரோனா தொற்று குறைந்துள்ளது. எனவே 2021-2022 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், மத்திய கல்வி வாரியம் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு பதிலாக 2 பருவ தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2-ம் பருவ தேர்வு முடிந்த பின்னர், 2 தேர்வு முடிவுகளும் சேர்த்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது முதல் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகின்ற நிலையில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான கணக்குப்பதிவியல் முதல் செமஸ்டர் பொதுத்தேர்வு வரை வினாத்தாளில் ஏதாவது தவறு இருந்தால், கருணை அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்ற போலியான தகவல் பரவி வருகிறது. மேலும் கணக்குப்பதிவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. இந்தநிலையில் சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி என்ற பெயரில் ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

அந்த ஆடியோவில் கூறியிருப்பதாவது, கணக்குப்பதிவியல் வினாத்தாளில் சில தவறுகள் இருப்பதால், அந்த கேள்விக்கான விடைகளை எழுதிய மாணவர்களுக்கு கருணை அடிப்படையில். 6 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அதில் தெரிவித்துள்ளது. இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என்று சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது. மேலும் இது போன்ற போலியான தகவல்களை மாணவர்கள் யாரும் நம்பவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |