Categories
அரசியல்

CBSE 12 வகுப்பு மாணவர்களுக்கு…. 2-வது பருவத்தேர்வு தேதி வெளியீடு…. அட்டவணைகான நேரடி லிங்க் இங்கே…!!!

2022ஆம் ஆண்டு மத்திய இடைநிலை கல்வி வாரியம்(CBSE) ஏப்ரல் 26ம் தேதி 12 ஆம் வகுப்புகாண இரண்டாம் பருவ தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு காண முதல் பருவத்தேர்வு கடந்த 2021 ஆம் ஆண்டு நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் டிசம்பர் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் இரண்டாம் பருவ தேர்வு ஏப்ரல் 26ம் தேதி முதல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பருவம் தேர்வுக்கான தேதிதாள் (CBSE TERM 2 EXAM DATASHEET) cbse.nic.in என்ற சமூக வலைத்தளம் மூலம் விரைவில் வெளியிடப்படும். இரண்டு மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வில் புறநிலை மற்றும் அகநிலை வகை கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் 12ம் வகுப்பு பருவம் 1 முடிவுகள் 2022 cbse.Gov.in மற்றும் cbseresults.nic.in என்ற சமூக வலைதளத்தில் வெளியிடப்படும். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் வகையிலே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பாஸ் அல்லது ஃபெயில் அடிப்படையில் இருக்காது என்றும் தெரிவித்துள்ளது. இரண்டாம் பருவத் தேர்வுக்குப் பிறகு இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பிற்கான முதல் பருவ தேர்வு முடிவுகளை சரிபார்ப்பது எப்படி என்றால். முதலில் cbseresults.nic.in என்ற சமூக வலைத்தள பக்கத்திற்கு சென்று ரிசல்ட் லிங்கை கிளிக் செய்யவும். இதனைத் தொடர்ந்து அதில் ரோல் நம்பர் மற்றும் மற்ற விவரங்களை சமர்ப்பிக்கவும். பின்பு உங்கள் முடிவுகள் திரையில் தோன்றும். அப்போது நீங்கள் சரி பார்க்கலாம்.

Categories

Tech |