CBSE 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான 2023-க்கான அட்டவணை cbse.gov.in என்ற இணையதள பக்கத்தில் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக சிபிஎஸ்இ தேர்வுகள் நடைபெறுவதற்கு 40 முதல் 60 நாட்களுக்கு முன்பாகவே தேர்வு அட்டவணை வெளியாகி விடும். அதன் பிறகு அடுத்த வருடம் ஜனவரி மாதம் சிபிஎஸ்சிஇ பிராக்டிகல் தேர்வு நடைபெறும் என்று வாரியம் அறிவித்திருந்தது. இந்நிலையில் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொது தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 16-ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதேபோன்று 12-ம் வகுப்பு சிபிஎஸ்சிஇ பொது தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பிராக்டிகல் தேர்வு ஜனவரி 1-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அதன் பிறகு மாணவர்கள் சிபிஎஸ்சிஇ தேர்வு குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டும் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் சிபிஎஸ்இ பொது தேர்வு எழுத 34 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.