10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ உறுதி அளித்துள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப் படுவது சம்பந்தமான நிறைய வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. மத்திய அரசு இதற்கான அனுமதி வழங்கிவிட்டது, மாநில அரசுகள் முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்ற பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில் சிபிஎஸ்சி நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு தடை உத்தரவை முடிவு செய்தபிறகு கலந்தாலோசித்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்படும்.
பல்வேறு வதந்திகள் எழுந்த நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று தெளிவுபடுத்துகிறார்கள். 10ம் வகுப்பு 12ம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கோரிக்கை விடுத்த நிலையில் அவரின் கோரிக்கையையும் நிராகரிக்கும் வகையில் சிபிஎஸ்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.