CBSE மாணவர்களுக்கு மீண்டும் பழைய முறையில் நடப்பு வருடத்துக்கான (2022-2023) பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று சிபிஎஸ்இ வாரியம் அறிவித்துள்ளது. அந்த வகையில் நடப்பு வருடத்துக்கான CBSE வாரிய தேர்வுகள் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் துவங்கவும் மற்றும் ஜனவரி 1ஆம் தேதி முதல் செய்முறை தேர்வுகளை நடத்தவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் CBSE வாரிய தேர்வர்களிடமிருந்து பதிவுக்கட்டணம் வசூலிக்கும் போலி இணையதளம் ஒன்று கண்டறியப்பட்டு உள்ளது.
இதுகுறித்து PIB கூறியிருப்பதாவது, https://cbsegovt.com என்ற போலி இணையதளம் மத்திய கல்வி வாரியத்துடன் தொடர்புடையது அல்ல என அறிவித்துள்ளது. ஆகவே இந்த இணையதளத்தை மாணவர்கள் யாரும் நம்ப வேண்டாம் என அறிவிறுத்தி உள்ளது. cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் மட்டுமே மாணவர்களுக்கான வாரிய தேதிகள் பற்றிய அட்டவணை, தேர்வுக்கான அனுமதி சீட்டு போன்ற அறிவிப்புகள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.