ஹோட்டலுக்குள் 2 ஆண்களுடன் இருப்பதைக் கண்ட ஆத்திரத்தில் கணவன் மனைவியை கண்மூடித்தனமாக தாக்கும் காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சீனாவின் ஹூபேய் (Hebei) மாகாணத்தின் Baoding நகரிலிருக்கும் ஹோட்டல் ஒன்றில் கடந்த 2-ஆம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.. அதில், ஹோட்டலுக்குள் நுழையும் ஆண் ஒருவர், திடீரென்று 2 ஆண்களுடன் சேர்ந்து மேஜையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பெண் ஒருவரை கடுமையாக தாக்குகிறார். இதனால் அந்த பெண் அப்படியே கீழே சரிந்து விழுகிறார். அதன் பின் அருகிலிருக்கும் ஆண் நபரையும் அங்கிருக்கும் பொருட்களை கொண்டு கண்மூடித்தனமாக தாக்குகிறார்.
இதனிடையே இது குறித்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் 9 மணிக்கு ஹோட்டலுக்குள் நுழைந்து பிரச்சனையை சமாதானப்படுத்தி, விசாரணையை தொடங்கியுள்ளனர். .இந்த தாக்குதலில் மனைவி மற்றும் 2 ஆண்களும் காயமடைந்துள்ளனர்.
https://youtu.be/d-x6wqtruFA