சி.சி.டிவியில் பதிவாகியிருந்த காட்சிகளை மையமாக வைத்து தேர்தல் அலுவலரை பணி இடைநீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகள் ஓட்டு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அறையில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வாக்குகள் எண்ணவிருக்கும் மையத்திற்குள் எம்.எல்.ஏ தேவராஜ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் இரண்டு கார்களில் உள்ளே வந்ததை கண்டித்து அ.தி.மு.க மற்றும் இதர கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து மாவட்ட கலெக்டர் உள்பட அதிகாரிகள் இணைந்த குழு மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்ததை ஆய்வு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தேர்தல் விதிகளை மீறியதாக அலுவலர் சிவக்குமாரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.