மணிப்பூரில் குண்டு வெடித்த CCTV காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
ஜம்முவுக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் தீவிரவாத அச்சுறுத்தல் இருந்து வருகின்றது. மேலும் இதற்க்காக அனைத்து மாநிலத்தில் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதைத்தொடர்ந்து அமைத்து மாநிலமும் பாதுகாப்பை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மணிப்பூரின் தங்கல் பஜாரில் தீடிரென குண்டுவெடித்தது. பொதுமக்கள் கூடி இருந்த இடத்தில் குண்டு வெடித்ததில் 4 போலீசார் மற்றும் 1 பொதுமக்கள் காயமடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது குண்டு வெடித்த CCTV பதிவு வெளியாகி வைரலாகி வருகின்றது.
#WATCH CCTV footage of the IED (Improvised explosive device) blast at Thangal Bazar in Imphal today; 4 policemen and 1 civilian injured #Manipur pic.twitter.com/a4OecynFxF
— ANI (@ANI) November 5, 2019