உலக அளவில் சீனா, அமெரிக்கா, ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புத்தாண்டு பண்டிகையின் போது கொரோனா பரவலை தடுப்பதற்காக பல்வேறு விதமான முன்னேற்றத்திற்கு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் 2023-ம் ஆண்டு புத்தாண்டு பண்டிகையின் போது பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சென்னை பெருநகர காவல் துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது.
அதன்படி டிசம்பர் 31-ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்கு உட்பட்ட திருவொற்றியூர், காசிமேடு, பாலவாக்கம், நீலாங்கரை, எலியட்ஸ், பெசன்ட் நகர், சாந்தோம் மற்றும் மெரினா கடற்கரை போன்ற கடற்கரைகளில் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி கிடையாது என்று அறிவித்துள்ளது. மேலும் பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு டிசம்பர் 31-ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைப் பகுதிகளுக்கு செல்லக்கூடாது என்ற அறிவிப்புக்கு பொதுமக்கள் அனைவரும் காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.