நடிகர் அல்லு அர்ஜுன் தனது திருமண நாளை கொண்டாட தாஜ்மஹால் சென்றுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவருக்கு ஆந்திராவின் பிரபல தொழிலதிபரின் மகள் ஸ்னேகா ரெடி என்பவருடன் கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர்.
இந்நிலையில் அல்லு அர்ஜுன் மற்றும் ஸ்னேகா ரெட்டி தங்களது 10 வது ஆண்டு திருமண நாளை கொண்டாடுவதற்கு தாஜ்மஹால் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதனை பார்த்த பலரும் அவர்களுக்கு வாழ்ந்துக்களை தெரிவித்து வருகின்றனர்.