மீனா மீண்டும் கர்ப்பமாக இருப்பது போல வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் 80, 90 காலகட்டத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பிரபல நடிகைகளில் ஒருவர் மீனா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போதும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். அவர் ”தெறி” படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
சமீபத்தில், மீனா தனது மகளுடன் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்நிலையில், சமூக வலைதளப்பக்கத்தில் மீனா கர்ப்பமாக இருப்பது போல வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து, இவர் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறாரா என ரசிகர்கள் பார்த்தனர். ஆனால், அது ஒரு படத்திற்காக போடப்பட்ட கெட்டப் என தெரியவந்துள்ளது.
https://www.instagram.com/p/Ccc7kAEOQnL/