அனுமதியின்றி தனது புகைப்படத்தை திரைப்படத்தில் வெளியிட்டதால் பிரபல நடிகை நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
தெலுங்குத் திரையுலகில் நானி,அதிதிராவ், நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்து வெளியான படம் வி. ஓ.டி.டி.யில் வெளியான இத்திரைப்படத்தில் ஹிந்தி நடிகை சாக்ஷி மாலிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் இருந்தது.
இதனால் நடிகை சாக்ஷி மாலிக் தனது போட்டோவை அனுமதி இல்லாமல் படத்தில் இணைத்ததற்கு நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்து 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வேண்டும் என்று மனு அளித்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நடிகை சாக்ஷி புகைப்படத்தை நீக்கும் வரை திரைப்படத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.