குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கனி டைட்டில் வின்னர் ஆனார். இதை தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கியவர்களும், குக்குகளாக அசத்தியவர்களும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அந்தவகையில் இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் அஷ்வின் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் நடிகர் அஷ்வின் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அப்போது அதில் அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது.
இதை தொடர்ந்து அவர் இரண்டாவது முறையாக மீண்டும் பரிசோதனை செய்துள்ளார். இந்த முறையும் அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதை மகிழ்ச்சியாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார். மேலும் அனைவரும் பாதுகாப்புடன், முகக்கவசம் அணிந்து இருக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.