Categories
மாநில செய்திகள்

பிரபல ஜுவல்லரியில் மோசடி… அம்பலமாக்கிய தம்பதியர்… வைரலாகும் வீடியோ..!!

பிரபல நகைக்கடை ஒன்றிற்கு சென்ற தம்பதியினர் தங்களுக்கு மோசடியாக நகை விற்பனை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த ஆண்டு தன் மனைவியின் வளைகாப்பிற்காக ஹரிஹர ஐயப்பன், நகைகடையில் நகை வாங்கி சென்றதாகவும், வீட்டில் பணத்தேவை இருந்ததால் நகைகளை விற்க சென்றபோது, நகை மதிப்பீட்டாளர் சொன்ன தகவலை கேட்டு அதிர்ந்துபோயுள்ளனர். அதாவது, நகைகளில் உள்ள கற்களுக்கு கீழே கொஞ்சம் வேக்ஸ் வைப்பது வழக்கம். ஆனால், அந்த குறிப்பிட்ட ஜூவல்லரி நகைகளில் வேக்ஸ் அதிகமாக வைக்கப் பட்டிருக்கிறது. அதன்படி 7 சவரன் தங்க நகையில், 56 கிராம் நகையில் 24 கிராம் மெட்டல் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

மேலும், சில கற்களுக்கு கீழே வேக்ஸுக்கு பதிலாக மெட்டல் வைத்து மோசடி செய்திருப்பதாக அவர் அந்த வீடியோவில் குற்றம்சாட்டுகிறார். மேலும் நாங்க கஷ்டப்பட்டு கொண்டு வந்து வாங்குற நகையில இப்படி மோசடி பண்றீங்களே.. நீங்க திங்குற சோறு செரிக்குமா? என்று ஆவேசமாக கத்துகிறார். அவர் பேஸ்புக்கில் லைவ் போட்டுவிட்டு, அவர் கேள்வி கேட்பதால், கடையில் நிர்வாகி சமாளிக்க முடியாமல் தவிக்கிறார். தற்போதுவரை நகை கடை சார்பில் இதற்கு எந்தபதிலும் அளிக்காத நிலையில், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |