பிரபல தொகுப்பாளர் மீண்டும் சின்னத்திரைக்கு ரீ என்ட்ரி கொடுக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த “நீங்கள் கேட்ட பாடல்” எனும் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகரும், பிரபல தொகுப்பாளருமான விஜயசாரதி. இவரது நிகழ்ச்சியின் போது இவர் பல இடங்களுக்கு சென்று அங்கு இருக்கும் ரசிகர்களை கண்டு பேசிக்கொண்டே இருப்பார்.
குறிப்பாக இவருக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ரசிகர்கள் இருந்தனர். மேலும் இவர் சித்தி, கோலங்கள் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்திருந்தார். ஆனால் அதன் பிறகு ஒருசில வருடங்களில் அவர் சினிமா துறையை விட்டு விலகி இருந்தார்.
இந்நிலையில் நடிகர் விஜயசாரதி இலங்கை தமிழ் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இச்செய்தி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.