Categories
தேசிய செய்திகள்

செல்போன் பறிப்பு…. திருடன் விரலை கடித்து துப்பிய இளைஞன்…. டெல்லியில் பரபரப்பு…!!

டெல்லியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்களின் விரலை பாதிக்கப்பட்ட இளைஞன் கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் பிரபல  பூங்கா ஒன்றில் தேவராஜ்  என்பவர் அமர்ந்து தனது செல்போனில் சமூகவலைத்தளங்களை பார்த்துக் கொண்டுள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் அவரது வாயை மூடிக்கொள்ள மற்றொரு நபர் சரமாரியாக தாக்கி செல்போனை பறித்தார்.

அப்போது தேவராஜ் தனது வாயை மூடி இருந்த படி விரல் ஒன்றை கடித்து துப்பினார். இதனால் திருடன் அலற சத்தம் கேட்டு ஓடி வந்த மக்கள் ரத்தம் சொட்டச் சொட்ட நின்ற நபரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே செல்போனுடன் தப்பி ஓடிய மற்றொரு நபரை காவல்துறையினர்  தேடி வருகின்றனர்.

Categories

Tech |