Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மக்களே உஷார்” ஆட்டோவில் வலம் வரும் செல்போன் திருடர்கள்..!!

சென்னை ராயபுரத்தில் 2 செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

எண்ணுரை சேர்ந்த ஸ்ரீநிவாஸன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து எண்ணுறை  நோக்கி சென்ற மாநகர பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது அவரின் செல்போனை இளைஞர் ஒருவர் திருட முயன்றுள்ளார். இதனை ஸ்ரீனிவாசன் கவனித்ததால் அவரது கையை அந்த இளைஞர் கத்தியால் வெட்டி விட்டு செல்போனை பறித்துக்கொண்டு பேருந்திலிருந்து கீழே இறங்கி, ஆட்டோவில் கூட்டாளிகளுடன் தப்பிச் சென்றார்.

Image result for ஆட்டோ செல்போன் திருடர்கள்

இதற்கிடையே ராயபுரம் மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை கண்டதும் ஆட்டோவில் தப்பிச் செல்ல முயன்றனர். இதனை கண்டு சுதாரித்து கொண்ட  காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர்.இதையடுத்து அவர்கள் செல்போன் திருடர்கள் என்பதை கவால்துறையினர் கண்டறிந்தனர்.பின் அவர்களிடமிருந்து 2 ஆட்டோ 2 பட்டன் கத்திகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மூவரும் தண்டையார் பேட்டையை சேர்ந்த நரேஷ் குமார், பிரவீன்குமார், ரவிச்சந்திரன் என்பது தெரியவந்தது.

Image result for செல்போன் திருடர்கள்

இதேபோன்று  மற்றொரு இடத்தில் ஆட்டோவில் பயணித்த கல்லூரி மாணவரிடம் செல்போன் பறிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக சத்யா மற்றும் நரேஷ் குமார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு அவர்களிடமும் ஒரு ஆட்டோ, 3 செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து வேறு யாரேனும் உள்ளனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகின்றன. பெரும்பாலும் ஆட்டோ வைத்திருக்கும் நபர்களே இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடுவதால் காவல்துறையினர் எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களிடம் கூறி வருகின்றனர்.

Categories

Tech |