உத்திரபிரதேசத்தில் செவிலியர் ஒருவர் போன் பேசிக்கொண்டு, கொரோனா தடுப்பூசி செலுத்த வந்த பெண்ணிற்கு 2 டோஸ்களை செலுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கான்பூர் நகரில் ,தெஹாக் மாவட்டத்திலுள்ள அக்பர்பூர் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சுகாதார மையத்தை கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக 50 வயதுடைய கமலேஷ் குமாரி என்ற பெண் ,அக்பர்பூர் ஆரம்ப சுகாதார மையத்திற்கு சென்றுள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்துபவர்கள் ,ஒரு டோஸ் தடுப்பூசியை முதலில் செலுத்தி கொண்ட பின், அடுத்த டோஸ் தடுப்பூசியை சில வாரங்கள் கழித்த பின் செலுத்திக் கொள்ள வேண்டும்.
ஆனால் அக்பர்பூர் சுகாதார மையத்தில் பணிபுரிந்து வரும் செவிலியர் ஒருவர், போன் பேசிக்கொண்டிருந்த ஆர்வத்தில் 2 டோஸ் தடுப்பூசியை செலுத்திவிட்டார் .இதுகுறித்து அந்த செவிலியரிடம் கேட்டதற்கு, அந்த செவிலியர் மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக ,அந்தப் பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அந்தப் பெண்ணின் உறவினர்கள் ரகளையில் ஈடுபட்டனர் . இதுதொடர்பாக மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். 2 டேஸ் தடுப்பூசியை செவிலியர் செலுத்தியதால் அந்தப் பெண்ணிற்கு கையில் லேசான வீக்கம் ஏற்பட்டது. இருந்தாலும்அந்த பெண்ணிற்கு பாதிப்பு ஏற்படவில்லை . இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது