அமெரிக்காவில் பெண்ணை அடித்து செல்போனை பிடுங்கிச்சென்ற நபரின் முகம் வீடியோவில் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், அதிக மக்கள் செல்லும் பூங்காவில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று மர்ம நபர், ஒரு பெண்ணிடமிருந்து ஐபோனை திருடிச் சென்றுள்ளார். இதனை ஒரு நபர் வீடியோ எடுத்திருக்கிறார். அதில் காலில் காயங்களுடன் 40 வயதுடைய ஒரு பெண் ஊன்றுகோல் வைத்துக்கொண்டு உட்கார்ந்து தன் போனை பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது ஒரு மர்ம நபர் திடீரென்று அவரின் ஐபோனை பிடுங்கிக்கொண்டு ஓட்டம் பிடிக்கிறார். அந்த பெண் தடுக்க முயற்சித்ததால் அவரின் கன்னத்தில் பலமாக அடித்து விட்டு அங்கிருந்து தப்பி விட்டார். அருகில் மற்றொரு பெண் அவரை தடுக்க முயன்றும், முடியாமல் போனது. அந்த நபரின் முகம் வீடியோவில் நன்றாக தெரிகிறது.
தற்போது, அந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. எனவே காவல்துறையினர் அந்த நபர் குறித்து தகவல் அறிந்தவர்கள் தங்களிடம் தெரிவிக்குமாறு கூறியுள்ளனர்.