Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற வாலிபர்…. மர்ம நபர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

செல்போன் பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள அமைந்தகரை பகுதியில் சோரா என்பவர் வசித்து வருகிறார். இவர் சூளைமேடு நமச்சிவாயபுரம் பாலம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற மர்ம நபர் சோராவின் கையில் வைத்திருந்த செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இது குறித்து சோரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்போன் பறித்த குற்றத்திற்காக மணிகண்டன் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |