Categories
உலக செய்திகள்

செல்போனை உளவு பார்த்த மனைவிக்கு… ரூ.1 லட்சம் ஃபைன்…!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் தனது கணவரின் செல்போனை உளவு பார்த்த பெண்ணிற்கு ஒரு லட்சம் அபராதம் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உலகில் பல நாடுகளில் ஒவ்வொரு மனிதனுக்கும் தனி உரிமை என்பது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இதன் காரணமாக கணவன் மனைவியின் செல்போனை பார்ப்பதும், மனைவி கணவனின் செல்போனை பார்ப்பதும் தனியுரிமை பாதிப்பு என்று கருதுகின்றனர். இதன் காரணமாக பல பிரச்சனைகளும் தம்பதிகளுக்குள் ஏற்படுகின்றது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நிகழ்ந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் போனின் செல்போனை மனைவி உளவு பார்த்ததால் மனைவிக்கு ரூ. 1,07,329 அபராதம் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது செல்போனை உளவு பார்த்ததுடன், அதிலிருந்து தகவல்களை மனைவி தன் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் பகிர்ந்து உள்ளதாகவும் இதனால் தன் தனியுரிமை பாதிக்கப்பட்டதுடன், நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக அப்பெண்ணின் கணவர் நீதிமன்றத்தில் முறையிட்டு காரணத்தினால் அவரின் மனைவிக்கு இத்தகைய தீர்ப்பை அந்நாட்டு நீதிமன்றம் வழங்கியுள்ளது.

Categories

Tech |