செல்போன் திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் பிரவீன்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் பிரவின்குமார் தனது செல்போனை வீட்டில் சார்ஜ் போட்டுவிட்டு வெளியே சென்றுள்ளார். இதனை பார்த்த வாலிபர் ஒருவர் பிரவீன்குமார் வீட்டிற்குள் நுழைந்து செல்போனை திருடியுள்ளார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்துள்ளனர். அதன்பின் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் அந்த வாலிபரை பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அம்மாபேட்டை பகுதியில் வசிக்கும் சேகர் என்ற வாலிபர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த வாலிபர் ஜோதிடர் மற்றும் குடுகுடுப்பைக்காரர் என்பதும் தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குடுகுடுப்பைக்காரரான சேகரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.