மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து 50 மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் வழங்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் பார்வை மற்றும் செவித்திறன் பாதிப்பு உடையவர்களுக்கு நேர்காணல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கியுள்ளார்.
இதனை அடுத்து செவித்திறன் பாதிப்புடைய 50 பேருக்கு மாற்றுத்திறன் நல அலுவலர் வசந்தகுமார் என்பவர் செல்போன் வழங்கியுள்ளார். மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றவர்களுக்கும் கூடிய விரைவில் செல்போன் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.